news

News November 29, 2024

EX மினிஸ்டருக்கு செக் வைத்த ஐகோர்ட்

image

EX மினிஸ்டர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, அதிமுகவினர் பரிசுப்பொருள் விநியோகிப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சோதனை செய்ய வந்த தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது அவருக்கு சிக்கலாக மாறியுள்ளது.

News November 29, 2024

சனிப்பெயர்ச்சி: ஜாக்பாட்டுக்கு தயாராகும் 3 ராசிகள்!

image

புத்தாண்டில் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதால் பலனடையப் போகும் 3 ராசிகள். 1) கடகம்: அஷ்டம சனி விலகுகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். அதிக முன்னேற்றம் இருக்கும். குழந்தை பேறு உண்டு. 2) ரிஷபம்: பண லாபம், பதவி உயர்வு, பூர்வீக சொத்து தேடி வரும். 3) மகரம்: ஏழரை சனி விலகுகிறது. இனி முன்னேற்றம்தான். புதிய வீடு கட்டுவீர்கள். மனதில் இதுநாள் வரை இருந்த பாரம் குறையும்.

News November 29, 2024

தமிழர்களின் கனவுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது

image

தமிழர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதாக சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹவால் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, மாநில மொழிகளை ஹைகோர்ட்களில் பயன்படுத்த ஆளுநர் அனுமதி அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இது அமலானால் எளிய மனிதர்களும் கோர்ட் விவகாரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

News November 29, 2024

நாளை சென்னைக்கு ரெட் அலர்ட்

image

புயல் காரணமாக நாளை (30.11.2024) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்காக, இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி. மலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புண்டு.

News November 29, 2024

1 நாள் கூட நீடிக்காத போர் நிறுத்தம்..!

image

போர் நிறுத்தத்தை அறிவித்த மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நடமாட்டத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாகவும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. லெபனானில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், போர்நிறுத்த அறிவிப்பு மக்கள் மனதில் நிம்மதியை வரச் செய்தது. ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை.

News November 29, 2024

பிரான்ஸில் தலைமறைவாக வாழும் புதின் மகள்?

image

ரஷ்யா அதிபர் புதினின் மகள் அடையாளத்தை மறைத்துக்கொண்டு, பிரான்ஸின் பாரிஸ் நகரில் வாழ்ந்து வருவதாக உக்ரைன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. Elizaveta Krivonogikh (21) என்னும் இவர், உக்ரைனுக்கு போருக்கு முன்னர் ரஷ்யா சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருந்து, பிறகு தலைமறைவாகிவிட்டார். பெயரை Luiza Rozova என மாற்றி, புதினுக்கு நெருக்கமாக இருந்த Oleg Rudnovன் உறவினராக தற்போது தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.

News November 29, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) தங்கப் போர்வை நிலம் என அழைக்கப்படும் நாடு – ஆஸ்திரேலியா 2) கண்ணீர் சுரப்பியின் பெயர் – லாக்ரிமல் 3) இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் – தஞ்சை ச. கனகா 4) தமிழ்நாட்டின் மோஸ் எனப் போற்றப்படும் எழுத்தாளர் – கல்கி 5) IATA – International Air Transport Association 6) நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் கருவி – Hydrophone 7) வியட்நாமின் தேசிய மலர் – தாமரை.

News November 29, 2024

5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

image

வங்கக் கடலில் இன்னும் சில மணி நேரங்களில் ‘ஃபெங்கல்’ புயல் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 29, 2024

அப்டேட்களை அள்ளித் தரும் ‘கேம் சேஞ்சர்’

image

‘கேம் சேஞ்சர்’ படத்தின் 3ஆவது பாடல் நேற்று வெளியான நிலையில், 4ஆவது பாடல் டிசம்பர் 2ஆவது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்தின் ட்ரெய்லர் ஜனவரி முதல் வாரத்தில் ரிலீசாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ஃப்ளாஸ்பேக்கில் ராம் சரண் – அஞ்சலி இடையே ஒரு மெலடி பாட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.

News November 29, 2024

ரூ.4.09 லட்சம் கோடி கடன் வைத்துள்ள செல் நிறுவனங்கள்

image

மத்திய அரசிடம் ரூ.4.09 லட்சம் கோடியை செல் நிறுவனங்கள் கடன் வைத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில் VI அதிகபட்சமாக ரூ.2.07 லட்சம் கோடி, ஏர்டெல் ரூ.1.25 லட்சம் கோடி, ஜியோ ரூ.52,740 கோடி கடன் வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. BSNL மிகவும் குறைவாக ரூ.28,092 கோடி கடன் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!