news

News November 30, 2024

13 கி.மீ. டூ 10 கி.மீ…. வேகம் குறைந்தது புயல்

image

ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் இன்று மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 70 கி.மீ. -80 கி.மீ. வரையும், இடையே 90 கி.மீ. வரை காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் நகரும் வேகம் தற்போது 13 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ. ஆக குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

News November 30, 2024

புதிய சாதனை படைத்த கேன் வில்லியம்சன்

image

நியூசிலாந்து அணிக்காக 9,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். ராஸ் டெய்லர் 7,683 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

News November 30, 2024

திருமணம் ஆகாமல் குழந்தை எப்படி? கஸ்தூரி வருத்தம்

image

திருமணமே ஆகாமல் குழந்தை பிறந்தது எப்படி என போலீசார் தன்னிடம் விசாரித்ததாக செய்தி பரவியதை நடிகை கஸ்தூரி வருத்தத்துடன் கண்டித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் குழந்தையை விட்டு சென்றது குறித்து சிலர் கேட்பதாகவும், அப்போது அத்தை, மாமா குழந்தையைப் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறையில் செல்போன் இல்லாமல் இருந்ததுதான் பெரிய தண்டனையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

பேட்டிங் ஆர்டரை மாத்தாதீங்க: புஜாரா அட்வைஸ்

image

AUSக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் IND அணி பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டாம் என புஜாரா அட்வைஸ் கொடுத்துள்ளார். போன முறை போலவே ராகுலும், ஜெய்ஸ்வாலும் ஓப்பனிங் இறங்க வேண்டும் எனவும், ரோஹித் 3ஆவதாக இறங்கலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், ரோஹித் ஓப்பனிங் ஆட விரும்பினால், ராகுலை 3ஆவது இடத்தில் களமிறக்க வேண்டும். அதற்கு மேல் இறக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

News November 30, 2024

சென்னையில் மழைநீர் தேங்கவில்லையா?

image

2 மணி நேரத்துக்கு முன் எழிலகத்தில் உள்ள கண்ட்ரோல் ரூமுக்கு சென்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுவரை சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்றார். மழைநீர் தேங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மழைநீர் எங்கும் தேங்கவில்லை என்று விளக்கம் அளித்தார். சென்னையில் எங்கேனும் தண்ணீர் தேங்கியுள்ளதா? கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News November 30, 2024

இந்திய அணிக்கு 282 ரன்கள் இலக்கு

image

UAEஇல் நடைபெற்று வரும் under19 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த PAK 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய ஷாஜாய்ப் கான் 159 ரன்கள் விளாசினார். இந்திய அணி சார்பில் அட்டகாசமாக பந்து வீசிய சமர்த் நாகராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி முதல் வெற்றி பெறுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 30, 2024

இறந்த சிறுமியிடம் விசாரிக்க போராடும் ஜப்பான்..!

image

கடந்த ஆக.31ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சிறுமியிடம் ஜப்பான் அரசு விசாரணையைத் தொடங்க உள்ளதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். 17 வயது சிறுமி 12ஆவது மாடியில் இருந்து குதித்த போது, கீழே நடந்து சென்ற சிகாகோ ஷிபா (32) என்ற பெண் மீது விழுந்தார். இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு பெண்ணை கொன்ற குற்றத்திற்காக அச்சிறுமி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

News November 30, 2024

பள்ளிகள் திறப்பு எப்போது? அன்பில் மகேஸ் பதில்

image

மழையால் சேதமடையும் பள்ளிகளில் மாணவர்கள் எவ்வாறு அமர்ந்து படிப்பார்கள் என்றும், மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், மழை, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அளவிற்கு சீரமைக்கப்பட்ட பின்னரே திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

News November 30, 2024

விமானப்படையில் சேர ஆசையா?

image

இந்திய விமானப்படையில் வேலையில் சேர விரும்புவோர் வருகிற டிச.2ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விமானப்படை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் FLYING, TECHNICIAN, ADMINISTRATION உள்ளிட்ட பதவிகளுக்கு 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை <>https://careerairforce.nic.in/ <<>>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 30, 2024

NETFLIX பயனாளர்களே உஷார்..!

image

23 நாடுகளில் NETFLIX பயனாளர்களை குறிவைத்து மோசடி நடந்து வருவது தெரியவந்துள்ளது. அது இந்தியாவிற்கும் பரவ வாய்ப்புள்ளது. நீங்கள் கடைசியாக செய்த Payment-ல் பிரச்னை என திடீரென மெசேஜ் வரும். அதில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் போலியான NETFLIX தளத்திற்கு செல்லும். அதில் கிரெடிட் கார்ட் விவரங்களை பதிவிட்டதும் பணம் திருடப்படும். உண்மையில், NETFLIX இதுபோன்ற மெசேஜ்களை அனுப்பாது என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!