India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலை நாளை தமிழகம் திரும்ப உள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு லண்டனுக்கு மேல் படிப்புக்காக அவர் ஆகஸ்ட் மாதம் சென்றிருந்தார். அவருக்கு பதிலாக பாஜக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுவே கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து இன்று அண்ணாமலை புறப்பட்டு நாளை வரவிருப்பதாகவும், கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆளுநர் ரவி வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் மக்கள் அவசியமின்றி வெளியேறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த அவசர நிலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் அயராது உழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
2026இல் இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி உறுதியாக அமையும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய அவர், திமுகவின் கூட்டணி வலுவாக உள்ளதே தவிர, திமுக தனிப்பட்ட முறையில் வலிமையாக இல்லை என்றார். 3 வருட திமுக அரசு மக்களை வாட்டி வதைப்பதாகவும், இதற்கான எதிர்வினையை வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்த பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. ஆனால், அதற்கு சில நிபந்தனைகளை விதித்ததாக ஐசிசி வட்டாரங்கள் கூறுகின்றன. அதன்படி, இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படும். அரையிறுதிக்கு இந்தியா தகுதிபெறவில்லை எனில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் பாகிஸ்தானில்தான் நடைபெறும் என்ற நிபந்தனைகளை பாக்., விதித்ததாக தெரிகிறது.
மழை-புயல்-வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள அரசு பொதுவாக 4 வித நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஒன்று, மழைநீர் வடிகால்களை அமைப்பது. இரண்டாவது, தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்றுவது. மூன்றாவது, பெருமழையால் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுப்பது & மீட்புப்பணி. நான்காவது, தங்குமிடம், உணவு , பணம் உள்ளிட்ட உடனடி நிவாரணங்கள். ஆண்டுதோறும் இந்த காட்சி மாறுவதில்லை. இது நிரந்தர தீர்வாகுமா? அரசு என்ன செய்ய வேண்டும்?
EPFO பயனாளர்களுக்கு மத்திய அரசு முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது. கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் தேதியிலிருந்து பணம் செட்டில்மென்ட் செய்யும் நாள் வரை வட்டி அளிக்க முடிவு செய்துள்ளது. தற்போது வட்டியானது செட்டில்மென்ட் மாதத்தின் 24ஆம் தேதி வரையே கணக்கிடப்படுகிறது. இதனால் இழப்பு ஏற்படுவதாக புகார்கள் வந்தநிலையில், இம்முடிவை எடுத்துள்ளது.
முன்பதிவு ரயில் டிக்கெட்டில் பயணி விரும்பினால், அவருக்கு பதில் குடும்ப உறுப்பினரில் யாரேனும் ஒருவரின் பெயருக்கு மாற்ற ரயில்வே வசதி செய்துள்ளது. இதற்கு பயண நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையத்திற்கு சென்று, டிக்கெட், அவரது ஆவணம், பெயர் மாற்றும் நபரின் ஆவணம் அளித்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த வசதி OFFLINEஇல் உண்டு. ஆன்லைனில் கிடையாது.
அடித்தட்டு, ஏழை மக்களை பொறுத்தவரையில், மழை, வெள்ளம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஆபத்தாகும். அதனால், அவர்கள் மழையை ரசிப்பதைவிட, அதைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆனால், பாதுகாப்பான வாழ்விடமும், வருமானமும் கொண்ட நடுத்தர- உயர் வர்க்கத்தினருக்கு புயல் எச்சரிக்கை என்பது ஒரு லீவுக்கான காரணம், ரிலாக்ஸ் செய்ய ஒரு வாய்ப்பு. இவர்களுக்கு புயலையும் மழையையும் ரசிக்க பிடிக்கிறது. ஏன் இந்த மனநிலை?
சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் சக்திவேல் என்பவர் உயிரிழந்தார். விஜயநகர் 2ஆவது மெயின் ரோடு சந்திப்பில் பலத்த காற்றால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதை கவனிக்காத சக்திவேல் மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் பாய்ந்து மரணமடைந்தார். அதைப்போல் மண்ணடியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வடமாநில இளைஞரும், வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்தியா, ஆஸி இடையேயான 2ஆவது டெஸ்ட், PINK பந்துப் போட்டி எனப்படுகிறது. வழக்கமாக பகல் நேரத்தில் நடத்தப்படாமல் இரவு-பகலில் நடத்தப்படும் போட்டிக்கு சிவப்பு நிற பந்துக்கு பதிலாக PINK நிற பந்து பயன்படுத்தப்படும். இரவு நேரத்தில் சிவப்பு நிற பந்தை காட்டிலும் PINK நிற பந்து மிகத் தெளிவாக தெரியும். ஆதலால் PINK நிற பந்து பயன்படுத்தப்படுகிறது. எனவே இது PINK பந்துப் போட்டி எனப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.