news

News December 1, 2024

BREAKING: வர்த்தக உபயோக சிலிண்டர் விலை அதிகரிப்பு

image

19 கிலோ எடை கொண்ட வர்த்தக உபயோக சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1964.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ.16 அதிகரிக்கப்பட்டு, ரூ.1,980.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 1இல் (ரூ.1,924.50) இருந்து இதுவரை ரூ.56 உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.

News December 1, 2024

பாஜககாரரே மகாராஷ்டிர முதல்வர்: அஜித் பவார்

image

பாஜகவைச் சேர்ந்தவரே மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவி தொடர்பாக முடிவெடுக்கப்படாததால், புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நிலவுகிறது. இந்நிலையில், புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராவார், எஞ்சிய 2 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வராக பதவியேற்பர் என்று தெரிவித்தார்.

News December 1, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 1, 2024

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: சறுக்கிய ஆஸி. அணி

image

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி (59.26 புள்ளி) 2ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் SA அணி பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை 2ஆவது இடத்தில் இருந்த AUS (57.69 புள்ளி) அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பட்டியலில் IND அணி (61.11 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நியூசி. (54.55 புள்ளி) அணி 4ஆவது இடத்தில் உள்ளது.

News December 1, 2024

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து மத தலைவர் கைது

image

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து மத தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குமுன் கைது செய்யப்பட்ட ‘சமிலிதா சநாதனி ஜோட்’ அமைப்பை சேர்ந்த கிருஷ்ண தாஸை சிறையில் சந்திக்க சென்றபோது ஷ்யாம் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே வங்கதேசத்தில் இந்து துறவிகள் கைது செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக கொல்கத்தாவிலுள்ள இஸ்கான் அமைப்பின் துணைத் தலைவர் ராதாராமன் தெரிவித்துள்ளார்.

News December 1, 2024

ராசி பலன்கள் (01-12-2024)

image

➤மேஷம் – அமைதி ➤ ரிஷபம் – சிரமம் ➤மிதுனம் – பாசம் ➤கடகம் – நற்செயல் ➤சிம்மம் – பாராட்டு ➤கன்னி – வெற்றி ➤துலாம் – கவனம் ➤விருச்சிகம் – ஆர்வம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – நலம் ➤கும்பம் – பயணம் ➤மீனம் – கீர்த்தி.

News December 1, 2024

மொபைல் டேட்டா சீக்கிரம் காலியாகிறதா?

image

மொபைல் டேட்டா சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது என சிலர் புலம்பி கேட்டிருப்போம். இதற்கு தீர்வு இதோ.
*மொபைல் செட்டிங்ஸில் மேனேஜ் யுவர் கூகுள் அக்கவுண்ட் சென்று டேட்டா மற்றும் பிரைவசியை கிளிக் செய்யவும்.
*இப்போது டெலிட் செய்யப்பட்ட APPகள் வரும்.
*இதையடுத்து கிளிக் ஆன் அசஸ் ஆப்ஷனை கிளிக் செய்து டெலிட் செய்தால், தேவையில்லாத டேட்டா யூஸேஜ் தடைபடும்.
*இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News December 1, 2024

BREAKING: மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

image

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதிகனமழைக்கான Red Alert, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கான Orange Alert விடுக்கப்பட்டுள்ளது.

News November 30, 2024

சுழன்றடித்து வீசும் சூறைக்காற்று

image

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வரும் சூழலில், சென்னை முழுவதும் பலத்த சூறைக்காற்று சுழன்றடித்து வீசி வருகிறது. இதனால் சில இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தன. மேலும், சில இடங்களில் கடைகளின் விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காற்றில் பறந்தன. இதனிடையே மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியா எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க.

News November 30, 2024

குற்றச்சாட்டுகள் எங்களை வலிமைப்படுத்தும்: அதானி

image

குற்றச்சாட்டுகள் தங்களை வலிமைப்படுத்தவே செய்யும் என்று தொழிலதிபர் அதானி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்மையில் அமெரிக்காவில் இருந்து தமது நிறுவனம் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டினார். இதுபோல் சவால்கள் எழுவது இது முதல்முறை அல்ல என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டும் தங்களை வலிமைப்படுத்தும், தடைகள் அனைத்தும் படிக்கல் ஆகும் என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!