India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுவை அருகிலேயே நகராமல் நிற்பதால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
மார்னஸ் லபுஷேனை 2ஆவது டெஸ்ட்டில் இருந்து தூக்க வேண்டும் என AUS முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் தனது நாட்டு அணிக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். முதல் போட்டியின் தோல்விக்கு லபுஷேனை பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும், கடந்த ஒரு வருடமாகவே அவர் ஃபார்மில் இல்லை எனவும் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும், IND அணியின் பவுலிங் தாக்குதல்களை சமாளிக்கும் இளம் பேட்டருக்கு வாய்ப்பு வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹220 முதல் ₹250 வரை விற்பனையாகிறது. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹95ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹97ஆகவும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் இன்று முட்டை மொத்த விலை 10 பைசா உயர்ந்து ₹5.75ஆக உள்ளது.
மரணத்திற்கு முன்பே தனது இறுதிச்சடங்கை ஸ்டீவ் ஜாப்ஸ் திட்டமிட்டதாக அவரது நண்பர் மார்க் தெரிவித்துள்ளார். இறுதிச்சடங்கின் இறுதியில், பரமஹம்சா யோகானந்தா எழுதிய ‘Autobiography of a Yogi’ புத்தகத்தை பரிசளிக்க ஜாப்ஸ் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் வாயிலாக, ‘உங்களை உணருங்கள். உங்களுடைய உள்ளுணர்வுதான் மிகப்பெரிய பரிசு’ என்ற வாழ்க்கைக்கான அர்த்தத்தை ஜாப்ஸ் விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
சுற்றுலா நகரமான புதுச்சேரியை ஃபெஞ்சல் புயல் சீர்குலைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரே நாளில் கொட்டித்தீர்த்த 47 செ.மீ கனமழையால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. 20 மணிநேரமாகப் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்பதால், பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனர். மீட்புப் பணியில் அரசு ஊழியர்களுடன் SDRF, ARMY உள்ளிட்டோரும் களமிறங்கியுள்ளனர். விரைவில் மீண்டு வா புதுவையே..!
‘கங்குவா’ படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் ₹100 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான விமர்சனங்களை சந்தித்தும் இவ்வளவு விலைக்கு வாங்கியிருப்பது விநோதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால், சூர்யா எதிர்ப்பாளர்கள் செய்த ட்ரோல்களால்தான் தியேட்டர்களில் படம் ஹிட் அடிக்கவில்லை, எனவே OTT-யில் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையிலேயே அமேசான் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கி இரவு 11.30 மணியளவில் கடந்து முடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. ஆனால், இன்று காலை வரை புயல் கடலிலேயே இருப்பதாகவும் அது கரையை தொடவே இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாட்டிலைட் படங்களும் அதனை உறுதி செய்கின்றன. வானிலை மையம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் என்று தெரிகிறது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் முகாம்களாக மாற்ற ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏராளமான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் முகாம்களாக மாறுவதால் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய PM 11 அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி களம் இறங்கியுள்ளது. போட்டியின் முதல் நாளான நேற்று மழையால் ரத்தான நிலையில், இன்று காலை டாஸ் வென்று பவுலிங்-ஐ தேர்வு செய்துள்ளது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் மற்ற நாட்டு வீரர்கள் அந்நாட்டின் ஜூனியர் அணியுடன் இவ்வாறு பயிற்சிப் போட்டி விளையாடுவது வழக்கம்.
நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, அப்புயல் கடலூருக்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்மேற்கே 120 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது இன்னும் வலுக்குறையாமல் புயலாகவே நீடிப்பதால் உற்று நோக்கப்படுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.