India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக ஃபெஞ்சல் புயல் நகராமல் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூருக்கு 30 KM தொலைவிலும், விழுப்புரத்துக்கு 40 KM தொலைவிலும், சென்னைக்கு 120 kM தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் AC பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னை பீச் – செங்கல்பட்டு இடையேயான ரயில்களில் இணைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் 10 கி.மீ. தொலைவிற்கு ₹29, 11-15 கி.மீ.க்கு ₹37, 16-25 கி.மீ.க்கு ₹56 என கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. மெட்ரோவில் குறைந்தபட்ச கட்டணமே ₹10, ஆனால் இதில் ₹29 என்பது அதிகபட்சம் என்று தற்போதே விமர்சனம் எழுந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னரும் வலுவிழக்காமல் உள்ள நிலையில், சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 2வது நாளாக இன்றும் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நடிகர் சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தில் நடிகை ஸ்வாசிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மன் கோயிலில் சூர்யா சாமி தரிசனம் செய்தார். இப்படத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதில், நரசம்பேட்டையை சேர்ந்த 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 14 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என்று கூறப்படுகிறது.
NIA-வில் 164 (காலி இடங்களுக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடக்கூடியது) இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. டெபுடேசன் அடிப்படையிலான இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், அசிஸ்டென்ட் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பதவிகள் ஆகும். கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை <
அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர், அமெரிக்காவின் முதல் போராளியை நியமிப்பதில் பெருமை கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியான காஷ், முந்தைய டிரம்ப் ஆட்சியில் பாதுகாப்புத் துறை தலைவராகவும், தேசிய உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மூன்று முடிச்சு’ சீரியலில் நடித்து வரும் சுவாதி கொண்டே, ஒரு நாளைக்கு ₹1 லட்சம் சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகைகளிலேயே இவர் தான் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. பொதுவாகவே சீரியல்கள் பெண் ஆடியன்ஸ்களை மையப்படுத்தியே எடுக்கப்படும். அதன் காரணமாகவே, ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுவை அருகிலேயே நகராமல் நிற்பதால் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.