news

News December 28, 2024

400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்

image

தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கால்நடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும், காவல்துறை, தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை மேற்பார்வையில் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என 4 பகுதிகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.

News December 28, 2024

உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?

image

விஜயகாந்த் நினைவு நாளையொட்டி தேமுதிகவினரின் அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள விவகாரம் பலரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. கடந்த 5ஆம் தேதி காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்ட நிலையில்,திட்டமிட்டே அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கருணாநிதி நினைவு நாள் அன்று திமுகவின் அமைதி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? என CMஐ டேக் செய்து நெட்டிசன்கள் வினவுகின்றனர்.

News December 28, 2024

2025இல் தங்கம் விலை உயருமா? இறங்குமா?

image

நடப்பு ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 27% அதிகரித்திருக்கிறது. இதேபோல, 2025ஆம் ஆண்டிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். சர்வதேச போர் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் என்று கூறியிருக்கும் அவர், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தால் விலை எகிறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

மன்மோகனின் நீல நிற தலைப்பாகையின் ரகசியம்?

image

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்திருப்பார். ஏன் என நம்மில் பலருக்கு தோன்றும். அதுபற்றி 2006இல் நிகழ்ச்சி ஒன்றில் அவரே பேசியுள்ளார். அவர் “என்னுடைய விருப்பத்திற்குரிய வண்ணங்களில் நீலம் ஒன்று. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த போது நீல நிற தலைப்பாகை என புனைப்பெயர் வைத்தே பாசத்துடன் சக மாணவர்கள் அழைப்பார்கள்” என நினைவுகூர்ந்து பேசினார்.

News December 28, 2024

லக்கி பாஸ்கராக எண்ணி கம்பி எண்ணும் வாலிபர்

image

‘லக்கி பாஸ்கர்’ பட பாணியில் பொது பணத்தை கையாடல் செய்த நபரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். ₹13,000 சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஹர்ஷ் குமார், தனது காதலிக்காக BMW கார், வீடு என வாங்கிக் கொடுத்துள்ளார். திடீரென பணக்காரரான இவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வரவே சோதனை நடத்தப்பட்டது. புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து, அரசு நிதி ₹21 கோடியை அவர் அதில் வரவுவைத்தது அம்பலமானது.

News December 28, 2024

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை (1/2)

image

2025ஆம் ஆண்டு 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. ஜன 1 – புத்தாண்டு, ஜன 14 – தைப் பொங்கல், ஜன 15 – திருவள்ளுவர் நாள், ஜன 16 – உழவர் திருநாள், ஜன 26 – குடியரசு தினம், பிப் 11 – தைப்பூசம், மார்ச் 30 – தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 – புனித வெள்ளி

News December 28, 2024

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை (2/2)

image

மே 1 – மே தினம், ஜூன் 7 – பக்ரீத், ஜூலை 6 – முஹர்ரம், அகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி, செப் 5 – மிலாதுன் நபி, அக் 1 – ஆயுத பூஜை, அக் 2 – விஜயதசமி, அக் 20 – தீபாவளி, டிச 25 – கிறிஸ்துமஸ் ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News December 28, 2024

மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’

image

‘தாம் தூம்’ திரைப்படம் ஜனவரி 3ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில், ஜீவா இயக்கியிருந்த இப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆக்‌ஷன், ரொமாண்டிக் கலந்த இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக, ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இப்படம் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது.

News December 28, 2024

ஆன்லைன் பட்டா மாறுதல்: அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்

image

<>’தமிழ்நிலம்’ <<>>சாப்ட்வேர் அப்டேட் காரணமாக இன்று (28.12.2024) காலை 10 மணி முதல் வரும் 31ஆம் தேதி மாலை 4 மணி வரை ஆன்லைன் பட்டா மாறுதல் விண்ணப்பிக்கும் நிறுத்தி வைக்கப்படுவதாக TN அரசு அறிவித்துள்ளது. அதேபோல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் வழங்கும் இணையதளமும் தற்காலிகமாகச் செயல்படாது என அரசு குறிப்பிட்டுள்ளது.

News December 28, 2024

மாங்கல்ய தோஷம் போக்கும் ஸ்ரீகருட காயத்ரி மந்திரம்

image

பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமையில் விரதமிருந்து ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று செப்பினால் செய்யப்பட்ட கருடனுக்கு மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, அர்ச்சனை செய்து, விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!