India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 27% அதிகரித்திருக்கிறது. இதேபோல, 2025ஆம் ஆண்டிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். சர்வதேச போர் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் என்று கூறியிருக்கும் அவர், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தால் விலை எகிறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்திருப்பார். ஏன் என நம்மில் பலருக்கு தோன்றும். அதுபற்றி 2006இல் நிகழ்ச்சி ஒன்றில் அவரே பேசியுள்ளார். அவர் “என்னுடைய விருப்பத்திற்குரிய வண்ணங்களில் நீலம் ஒன்று. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த போது நீல நிற தலைப்பாகை என புனைப்பெயர் வைத்தே பாசத்துடன் சக மாணவர்கள் அழைப்பார்கள்” என நினைவுகூர்ந்து பேசினார்.
‘லக்கி பாஸ்கர்’ பட பாணியில் பொது பணத்தை கையாடல் செய்த நபரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். ₹13,000 சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஹர்ஷ் குமார், தனது காதலிக்காக BMW கார், வீடு என வாங்கிக் கொடுத்துள்ளார். திடீரென பணக்காரரான இவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வரவே சோதனை நடத்தப்பட்டது. புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து, அரசு நிதி ₹21 கோடியை அவர் அதில் வரவுவைத்தது அம்பலமானது.
2025ஆம் ஆண்டு 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. ஜன 1 – புத்தாண்டு, ஜன 14 – தைப் பொங்கல், ஜன 15 – திருவள்ளுவர் நாள், ஜன 16 – உழவர் திருநாள், ஜன 26 – குடியரசு தினம், பிப் 11 – தைப்பூசம், மார்ச் 30 – தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 – புனித வெள்ளி
மே 1 – மே தினம், ஜூன் 7 – பக்ரீத், ஜூலை 6 – முஹர்ரம், அகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி, செப் 5 – மிலாதுன் நபி, அக் 1 – ஆயுத பூஜை, அக் 2 – விஜயதசமி, அக் 20 – தீபாவளி, டிச 25 – கிறிஸ்துமஸ் ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
‘தாம் தூம்’ திரைப்படம் ஜனவரி 3ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில், ஜீவா இயக்கியிருந்த இப்படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆக்ஷன், ரொமாண்டிக் கலந்த இப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக, ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இப்படம் தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது.
<
பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமையில் விரதமிருந்து ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு சென்று செப்பினால் செய்யப்பட்ட கருடனுக்கு மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, அர்ச்சனை செய்து, விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் RN.ரவி இன்று ஆய்வு செய்யவுள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களே வேந்தர்களாக செயல்படுகின்றனர். இந்நிலையில், சிசிடிவி ஏன் வேலை செய்யவில்லை? கேட் செக்யூரிட்டிகளை கடந்து குற்றவாளி உள்ளே நுழைந்தது எப்படி போன்றவற்றை ஆளுநர் இன்று ஆய்வு செய்கிறார்.
குளிர் காலத்தில் முகப்பருக்கள் வராமல் இருப்பதை தவிர்க்க சில டிப்ஸ் ◦ சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எண்ணெய் சருமமாக இருந்தால் அடிக்கடி முகத்தைக் கழுவவும் ◦ கற்றாழை ஜெல், முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர், சந்தனத்தைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம் ◦ வைட்டமின் சி, வைட்டமின் ஏ நிறைந்த பழங்களை எடுத்து கொள்ளலாம் ◦ தினமும் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும் ◦ கிரீம்களை தவிர்க்கவும்
Sorry, no posts matched your criteria.