news

News December 2, 2024

நெல்லை, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்

image

நேற்று இரவு புறப்பட்ட நெல்லை, முத்துநகர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரூட் மாற்றப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் தண்டவாளத்திற்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் இந்த ரயில்கள் விழுப்புரத்திலிருந்து காட்பாடி, அரக்கோணம், சென்னை பீச் வழியாக எழும்பூர் செல்லவுள்ளன. இதனால் திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாகச் செல்லாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News December 2, 2024

வேலையில்லா பட்டதாரிகளுக்கு இன்று முதல் ₹5000

image

பிரதமர் மோடி PM Internship Program திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹5000 மற்றும் ஒருமுறை மானியமாக ₹6000 வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இப்பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு திட்டத்திற்கு தகுதியானவர்களாக தேர்வாகியுள்ளனர். நாட்டின் முன்னணி நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,27,000 இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

News December 2, 2024

மேலும் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை முன்னெச்சரிக்கையாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 2, 2024

மக்கள்தொகை குறைந்தால் சமூகம் அழியும் – ஆர்.எஸ்.எஸ்.

image

மக்கள்தொகை குறைந்தால் அந்த சமூகம் அழிந்துவிடும் என மோகன் பகவத் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்கள்தொகை குறைவது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சென்றால், அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும் என்றார். மேலும், மக்கள்தொகை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News December 2, 2024

காசியில் வழிபாடு செய்த ராஷிகண்ணா

image

தமிழில் இமைக்கா நொடிகள், சர்தார், அரண்மனை-4 உள்ளிட்ட படங்களில் கதா நாயகியாக நடித்தவர் நடிகை ராஷிகண்ணா. கடவுள் பக்தி நிறைந்த அவர் தனது பிறந்த நாளை பெற்றோருடன் காசியில் கொண்டாடியுள்ளார். வட இந்திய பாரம்பரியப்படி, உடை அணிந்து பிரத்யேக பூஜைகள் செய்து வழிபட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை இணையத்தில் வைரலாகி உள்ளன.

News December 2, 2024

புயல் தற்போது எங்கு உள்ளது?

image

நவம்பர் 30ஆம் தேதி இரவு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து கள்ளக்குறிச்சிக்கும் சங்கராபுரத்துக்கும் இடையே மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று தெரிகிறது. இதன் காரணமாக தி.மலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

News December 2, 2024

நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை உயர்வு

image

நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் விற்பனை கடந்த ஆண்டு நவம்பரில் 28.6 லட்சம் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 8.30% அதிகரித்து 31 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் விற்பனை 5.90% உயர்ந்து, 72 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது அக்டோபரின் 65 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில் 11% உயர்ந்துள்ளது.

News December 2, 2024

வட மாவட்டங்களை புரட்டிப் போடும் கனமழை

image

ஃபெஞ்சல் புயலால் நவம்பர் 30ஆம் தேதி விழுப்புரம், புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை கண்டிருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 24 செ.மீ. மழையும் திருவண்ணாமலையில் 22 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு மழை தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

News December 2, 2024

சோமவார சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டால்…

image

சக்திக்கு ஆடி வெள்ளி; சிவனுக்கு கார்த்திகை திங்கள் என்பது ஆன்றோர் வாக்கு. கார்த்திகை சோமவார நாட்களில் (திங்கள்கிழமை) அதிகாலையிலேயே நீராடி, சிவாஷ்டகம் பாடி, திருநீறிட்டு சிவனுக்கு விரதமிருந்து, மாலையில் தஞ்சையை அடுத்துள்ள திருப்பனந்தாள் அருணஜதேசுவரர் கோயிலுக்கு சென்று சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு ஈசனுக்கு வில்வ இலை மாலை சாற்றி வழிபட்டால் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும் என்பது ஐதீகம்.

News December 2, 2024

ஃபெஞ்சல் புயல்: 5 முக்கிய ரயில்கள் ரத்து

image

விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் ரயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் 5 ரயில்களின் சேவைகள் ரத்தாவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயில், மதுரை – சென்னை வைகை விரைவு ரயில், காரைக்குடி – சென்னை பல்லவன் விரைவு ரயில், சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில், சென்னை – மதுரை தேஜஸ் ரயில், விழுப்புரம் – தாம்பரம் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!