news

News December 8, 2024

விஜய்யை சீண்டிய கனிமொழி

image

மணிப்பூருடன் தமிழ்நாட்டை ஒப்பிடலாமா என விஜய்யை, கனிமொழி எம்பி கடுமையாக சாடியுள்ளார். அரசியலில் மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என கேள்வி எழுப்பிய அவர், பாஜக மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது என விமர்சித்துள்ளார். மணிப்பூர் கலவரத்தையும், தமிழகத்தின் வேங்கைவயல் சம்பவத்தையும் இணைத்து மத்திய, மாநில அரசுகளை விஜய் நேற்று விமர்சித்து இருந்தார்.

News December 8, 2024

அழகு, ஆரோக்கியம், அதிகரிக்க…

image

*போதுமான தூக்கம், உடல்பயிற்சிகள், சத்தான உணவுகள் இவற்றை தினசரி செயல்பாடுகளாக பின்பற்றுங்கள். *இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கூடுதலாக கொஞ்சம் நேரம் ஒதுக்கி, ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். *எவ்வளவு பிசியாக இருந்தாலும், உடற்பயிற்சிகள் செய்ய தவற வேண்டாம். இதற்கு 20 நிமிடங்களாவது ஒதுக்குங்கள் (அ) குறைந்தபட்சம் நடைபயிற்சி செய்யுங்கள். *இதனால் நோய்கள் குறையும், அழகு கூடும்.

News December 8, 2024

காதலே காதலே தனிப்பெரும் துணையே..!

image

காதலுக்கு வயதில்லை என்பது உண்மையாகியுள்ளது. USA-வில் 100 வயதை கடந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டு, உலகின் வயதான புதுமணத் தம்பதி என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். பெர்னி லிட்மேனும் (100), மர்ஜோரிஃபிடர்மேனும் (120) ஒரு விருந்தில் சந்தித்துள்ளனர். பின்னர் அந்த உறவு வளர்ந்து திருமணம் வரை சென்றுள்ளது. இளமையில் ஒரே கல்லூரியில் படித்தும் இருவரும் சந்தித்து கொள்ளாததுதான் இதில் சுவாரஸ்யம்.

News December 8, 2024

யார் பெரிய வீரன் தெரியுமா?

image

நகைச்சுவை, குணசித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும் தூள் கிளப்புபவர் முனீஷ் காந்த். அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சண்டை போடுறவன், கெத்து காட்டுறவன் எல்லாம் வீரன் கிடையாது. யார் வீரன் தெரியுமா.. ஒரு கல்யாணம் பண்ணி, பொண்டாட்டிய நிம்மதியா பாத்துட்டு, புள்ளக்குட்டிய பெத்துட்டு கடைசி வரை கர சேக்குறான் பாருங்க. அவன்தான் பெரிய வீரன் எனக் கூறினார்.

News December 8, 2024

ராசி பலன்கள் (08-12-2024)

image

➤மேஷம் – உற்சாகம் ➤ ரிஷபம் – விவேகம் ➤மிதுனம் – நன்மை ➤கடகம் – ஆதரவு ➤சிம்மம் – போட்டி ➤கன்னி – பணிவு ➤துலாம் – நற்செயல் ➤விருச்சிகம் – கவலை ➤தனுசு – மேன்மை ➤மகரம் – சுகம் ➤கும்பம் – வரவு ➤மீனம் – எதிர்ப்பு.

News December 8, 2024

Fight! Fight! Fight! டிரம்ப் வழங்கும் புதிய பெர்ப்யூம்!

image

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப், புதிய பர்ப்யூம்களை அறிமுகப்படுத்தி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ட்ரம்ப், அதே இடத்தில் மீண்டும் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது முகம் சிவக்க அவர் முழக்கமிட்ட வார்த்தைகள் Fight, Fight, Fight. அதை நினைவுப்படுத்தும் வகையில் பர்ப்யூமுக்கு பெயரிடப்பட்டுள்ளது. வெற்றிக்கான பர்ப்யூம்!

News December 8, 2024

‘வீர தீர சூரன் 2’ டீசர் தேதி நோட் பண்ணுங்க

image

விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன் 2’ படத்தின் டீசர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. 2 பாகங்களாக படம் உருவாகி வரும் நிலையில், 2ஆவது பாகமே முதலில் ரிலீசாக உள்ளது. ‘சித்தா’ பட ஹிட்டுக்கு பிறகு அருண்குமார் இயக்கும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொங்கலை முன்னிட்டு படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

News December 8, 2024

டிவி பார்த்தால் வாழ்நாள் குறையும்..!

image

தினமும் 1 மணி நேரம் டிவி பார்த்தால் மனிதர்களின் ஆயுள்காலம் 22 நிமிடங்கள் குறையும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் தொடர்ந்து 6 மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், டிவி பார்க்காதவர்களைவிட 5 ஆண்டுகள் குறைவாக வாழ்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே ஒரே இடத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பதை விட, உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் உழைப்பு தரும் பணிகளைச் செய்ய டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News December 8, 2024

மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்.. 29 பேர் பலி

image

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 29 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதல்களால் மருத்துவமனை வளாகம் ரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அல்-ஜசீரா தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் முதல், இஸ்ரேலின் தாக்குதல்களில் 44,612 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

News December 7, 2024

2025-இல் வெறித்தனம் காட்ட போகும் 3 ராசிகள்!

image

2025-ம் ஆண்டு இந்த 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையப் போகிறது. 1) ரிஷபம்: சனிபகவானின் பெயர்ச்சி உங்களை வசதியான இடத்திற்கு கொண்டு செல்ல போகிறது. வெற்றிகள் தேடி வரும். 2) மிதுனம்: புதனின் அனுக்கிரகத்தால் இனி ஏறுமுகம்தான். வியாபாரத்தில் பெரிய வெற்றி. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். 3) சிம்ம ராசி: உங்களின் வெற்றிக்கான ஆண்டு. தொழிலில் பாசிட்டிவான மாற்றங்கள் இருக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டு.

error: Content is protected !!