news

News December 28, 2024

முப்படை மரியாதையுடன் மன்மோகன் உடல் தகனம்!

image

டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில், முப்படைகளின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக நடந்த இறுதிச் சடங்கில், ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், மன்மோகன் சிங் குடும்பத்தினர், பூடான் மன்னர் உள்ளிட்ட பலர், மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

News December 28, 2024

ஒரே Century: நிதிஷ் ரெட்டியின் அடுத்தடுத்த சாதனைகள்

image

முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ‣ ஆஸி. மண்ணில் இளம் வயதில் (21 வயது 214 தினம்) சதம் விளாசிய 3வது வீரர் ‣ ஆஸ்திரேலியாவில் 8வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் ‣ 8வது வரிசையில் மெல்போர்ன் மைதானத்தில் சதமடித்த சர்வதேச முதல் வீரர் என்ற சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.

News December 28, 2024

BGT 4வது டெஸ்ட்: இந்தியா 358/9 ரன்கள் குவிப்பு

image

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 358/9 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஆஸி. அணியை விட 116 ரன்கள் இந்தியா பின்தங்கி இருக்கிறது. நிதிஷ் ரெட்டியின் சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதங்களுடன் இந்தியா சரிவில் இருந்து மீண்டும் இருக்கிறது. தற்போது களத்தில் நிதிஷ் குமார் 105 (176), சிராஜ் 2 (7) ரன்களுடன் உள்ளனர். 2வது இன்னிங்சில் ஆஸி. அணியை கட்டுப்படுத்தி, இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்குமா?

News December 28, 2024

துடுப்பை இழந்த படகு.. கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல்

image

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைக் கொண்டுச் சென்ற ராணுவ வாகனத்தின் மீது கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல் காந்தி அமர்ந்து சென்றது, மன்மோகன் சிங்குடனான அவரது பந்தத்தை எடுத்துரைக்கிறது. தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் வாடியுள்ளார். அதன் வெளிப்பாடே, தனக்கான நல்ல வழிகாட்டியை இழந்துவிட்டேன் என்று தனது முதல் இரங்கலை எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

News December 28, 2024

ஹீரோக்கள் ஒன்னும் கடவுள் கிடையாது

image

அல்லு அர்ஜுனின் ஈகோவால் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளரும், இயக்குநருமான தம்மரெட்டி பரத்வாஜ் சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சினிமா ஹீரோக்களை ரசிகர்கள் கடவுளாகக் கொண்டாடும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார். ஹீரோக்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News December 28, 2024

புதிய சாதனை படைத்த ராக்கி பாய்!

image

‘ராமாயணம்’ படத்தில் நடிக்க யாஷ் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படத்தால் இந்திய அளவில் பிரபலமான யாஷ், ராக்கி பாய் கதாபாத்திரம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், ரன்வீர் கபூர் ராமராக நடிக்கும் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார்.

News December 28, 2024

மாணவி தவறு செய்தது போல் FIR: ஐகோர்ட் சரமாரி கேள்வி

image

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில், மாணவி தவறு செய்தது போல் FIR போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மிகவும் மோசமான முறையில் FIR உள்ளதாகவும், வாக்குமூலம் பெறும்போது காவல் அதிகாரிகள் உதவி செய்ய முடியாதா? எனவும் வினவியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் அடையாளங்களைக் காப்பது காவல்துறையின் கடமை, அதை தவறியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

News December 28, 2024

“நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர்..” முதல்வர் நெகிழ்ச்சி

image

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர்” என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் “என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.

News December 28, 2024

2025ம் ஆண்டு இந்த 3 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?

image

2025 பிப்ரவரி, மார்ச்சில் சனி மற்றும் குரு பெயர்ச்சி நிகழ்கின்றன. இதன் அடிப்படையில் ⁍ மேஷம்: 2025 மங்களகரமானது. நிதி நிலை முன்னேறும். திருமண வாழ்வில் இனிமை காணுவீர்கள் ⁍ ரிஷபம்: ஆக்கப்பூர்வமானதாக அமையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ⁍ மிதுனம்: தொழில், நிதி நிலைமைகளின் முன்னேற்றம் சீராக இருக்கும். புதிய உறவுகள் கைகூடும். காதல் வாழ்க்கை செழிக்கும்.

News December 28, 2024

BGT 4வது டெஸ்ட்: சுந்தர் 50

image

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். அவர் 146 பந்துகளில் 1 பவுண்டரியுடன் அடித்து இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். மறுமுனையில் நிதிஷ் ரெட்டி சதத்தை நெருங்கி இருக்கிறார். இந்திய அணிக்கு 8வது விக்கெட்டுக்கு கைகோர்த்த சுந்தர் – நிதிஷ் ரெட்டி அணியை சிறப்பாக மீட்டு வருகிறார்கள். இந்திய அணி 340/7 ரன்களை எடுத்துள்ளது.

error: Content is protected !!