India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதை, பிரணாப் முகர்ஜியின் மகள் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது தந்தை இறந்தபோது, அவருக்கு இரங்கல் கூட்டம் கூட காங்கிரஸ் நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மூத்த தலைவரிடம் கேட்டபோது, இரங்கல் கூட்டம் நடத்துவதில்லை என அபத்தமாக கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. நேற்று ₹57,200க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,080க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,150ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹15 குறைந்து ₹7,135க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றம் ஏதுமின்றி கிராம் ₹100ஆக உள்ளது.
அதானி விவகாரத்தில் ஸ்டாலின் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு போடுமா என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அதானி விவகாரத்தில் அமெரிக்க அரசின் அறிக்கையில், பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள்தான் சிக்கியுள்ளன எனக் கூறிய அவர், அரசியல் உள்நோக்கத்துக்காக இந்த பிரச்னையைக் கையிலெடுத்து, காங்., பேசுவதே அயோக்கியத்தனமானது என சாடியுள்ளார்.
BGT 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரிஷப் பண்ட் 28 ரன்களில் அவுட் ஆனது குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் முட்டாள்தனமாக விளையாடினார். இந்தியா தற்போது இருக்கும் சூழலில் இப்படியா விக்கெட்டை பறிகொடுப்பது? இதுதான் எனது இயல்பு என்றெல்லாம் கூறமுடியாது. இது உங்கள் அணியை பிடித்து கீழே இழுப்பதுபோல் உள்ளது” என்றார்.
சிறு வயதில் ஸ்கூல் முடிந்தவுடன் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வந்து கார்ட்டூன் நெட்வொர்க் முன் அமர்ந்த ஒரு ஜெனரேஷனே உள்ளது. பலரின் எமோஷனலாக இணைந்திருக்கும் கார்ட்டூன் நெட்வொர்க் 32 வருட நினைவுகளுடன் தனது இணையதளத்தை மூடியுள்ளது. நிதி சுமையை குறைக்கும் விதமாக டிஸ்னி நிறுவனம் இதனை செய்துள்ளது. இருப்பினும் ஆப், யூடியூப் போன்ற தளங்களில் கார்ட்டூன் நெட்வொர்க்கை நாம் காணமுடியும். உங்களுக்கு பிடித்த ஷோ எது?
Rapid & Blitz சாம்பியன்ஷிப் தொடருக்கு நடப்பு சாம்பியன் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்ததால், அதனை மாற்றும்படி FIDE அறிவுறுத்தியது. அதனை அவர் ஏற்க மறுத்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், “F**K Y*U” என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தி, மொத்த தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) விதியின் படி ஆண் போட்டியாளர்கள் பேண்ட், சட்டை கோட் அணிய வேண்டும்.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோயம்பேட்டில் தேமுதிகவினர், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தேமுதிகவினர், முதல்வரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோயம்பேட்டில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கால்நடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும், காவல்துறை, தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை மேற்பார்வையில் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என 4 பகுதிகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.
விஜயகாந்த் நினைவு நாளையொட்டி தேமுதிகவினரின் அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள விவகாரம் பலரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. கடந்த 5ஆம் தேதி காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்ட நிலையில்,திட்டமிட்டே அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கருணாநிதி நினைவு நாள் அன்று திமுகவின் அமைதி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? என CMஐ டேக் செய்து நெட்டிசன்கள் வினவுகின்றனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 27% அதிகரித்திருக்கிறது. இதேபோல, 2025ஆம் ஆண்டிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். சர்வதேச போர் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் என்று கூறியிருக்கும் அவர், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தால் விலை எகிறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.