news

News December 4, 2024

மீண்டும் மீண்டுமா? குகேஷ்-லிரென் போட்டி ‘டிரா’

image

சிங்கப்பூரில் நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 7ஆவது சுற்றில், இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரென் மோதினர். இந்திய GM குகேஷ், 31%க்கும் மேலான நேரத்தைக் கண்களை மூடியபடி வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி, 46ஆவது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது. இது, இத்தொடரில் தொடர்ச்சியாக பதிவான 4ஆவது ‘டிரா’. 7 சுற்றுகளின் முடிவில், இருவரும் தலா 3.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

News December 4, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 4, 2024

‘புஷ்பா 3’ குறித்த பதிவை நீக்கிய படக்குழு

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா-3’ வெளியாவதை ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி மறைமுகமாக உறுதி செய்துள்ளார். ‘புஷ்பா 2: தி ரூல்ஸ்’ படத்தின் இசைப் பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. அதில், ரசூல் உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் ‘புஷ்பா 3: தி ராம்பேஜ்’ என எழுதப்பட்டிருந்தது. இப்பதிவு வைரலானதை அடுத்து படக்குழு உடனே அதை நீக்கியுள்ளது.

News December 4, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 4, 2024

இரவோடு இரவாக எமர்ஜென்சி அமலுக்கு வந்தது!

image

தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தியுள்ளார். தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வட கொரிய கம்யூ. படைகளின் துணையுடன் எதிர்க்கட்சிகள் தென் கொரியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த சதி செய்கின்றனர். தேசத்தின் நிலைத்தன்மை, சுதந்திரம் & பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

News December 4, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (டிச.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News December 4, 2024

Social Media-ல் குடியிருப்பவரா நீங்க.. இதை படிங்க

image

இன்டர்நெட்டில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் எதை பார்க்கிறோம் என்றே தெரியாமல் Scroll செய்வதால் ஏற்படும் நெகட்டிவ் விளைவுகளை குறிக்கும் வார்த்தையே Brain Rot. இந்த ஆண்டுக்கான Oxford Word of the Year இதுதான். மலிவான இன்டர்நெட் கன்டன்ட்களால் மனித உளவியல் மற்றும் அறிவாற்றலில் ஏற்படும் விளைவுகளை இந்த வார்த்தை குறிக்கிறது. சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் சிக்கல் என்ன? கமெண்ட் பண்ணுங்க

News December 4, 2024

உலக வரைபடத்தில் முதலில் காணாமல் போகும் நாடு

image

மக்கள்தொகை பெருக்கத்தோடு மற்ற நாடுகள் போராடும் வேளையில், தென்கொரியா மட்டும் பிறப்பு விகிதம் குறைவதால் திணறி வருகிறது. 3 குழந்தை பெற்றால் கட்டாய ராணுவ சேவை விலக்கு, சைல்ட்கேர் மானியம், வரி விலக்கு என அரசு அறிவித்தும் பிறப்பு விகிதம் உயரவில்லை. இது தொடர்ந்தால் இந்த நூற்றாண்டுக்குள் தற்போது 5.2 கோடியாக உள்ள மக்கள்தொகை 1.4 கோடிக்கு கீழ் குறையும் அபாயம் உள்ளதாம். கொஞ்சம் மனசு வைங்க கொரிய லேடீஸ்!

News December 4, 2024

ராசி பலன்கள் (04-12-2024)

image

➤மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – சுகம் ➤சிம்மம் – பயம் ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – குழப்பம் ➤விருச்சிகம் – பயணம் ➤தனுசு – அமைதி ➤மகரம் – விவேகம் ➤கும்பம் – அன்பு ➤மீனம் – சிரமம்.

News December 4, 2024

சீரியல் நடிகர் நேத்ரன் மறைவு!

image

சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் நேத்ரன் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீசன் 2, ரஞ்சிதமே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். இவரது மறைவால் சின்னத்திரை உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

error: Content is protected !!