news

News December 4, 2024

இந்தியாவில் நடக்கும் போட்டி… பாக்., பங்கேற்குமா?

image

பார்வையற்றோருக்கான முதலாவது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025இல் இந்தியாவில் நடைபெறுகிறது. முல்தானில் நடந்த உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இப்போட்டியில் பாக்., அணி கலந்து கொள்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் அந்நாடு பங்கேற்கும் போட்டிகளை நேபாளம் (அ) இலங்கையில் நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.

News December 4, 2024

இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்யும் வெந்தயம் தேநீர்

image

நீரிழிவு நோய்க்கு காரணமான ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும் ஆற்றலைக் கொண்டது வெந்தயம் தேநீர். வெந்தயத்தை இடித்து, சிட்டிகை மஞ்சள், சுக்கு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான வெந்தயம் டீ ரெடி. இந்த டீயை வாரத்திற்கு 3 நாட்கள் குடிக்கலாமென ஆயுஷ் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News December 4, 2024

செபி அதிரடி உத்தரவு… நெருக்கடியில் அனில் அம்பானி!

image

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். RBEP நிறுவனத்தின் சட்ட விரோதமான நிதிப் பரிமாற்ற விவகாரத்தில் நிலுவைத் தொகையை செலுத்த செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், டிமேட் கணக்கு, பங்குகள் & MFகளை இணைத்து ₹26 கோடி நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். எந்தப் பற்றும் அனுமதிக்கக் கூடாது. தவறும் பட்சத்தில் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 4, 2024

பொன்முடி மீதான சேறு வீச்சு கோபத்தின் வெளிப்பாடு?

image

திமுக அரசின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் கோபத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இருவேல்பட்டு சம்பவம் குறித்து பேசிய அவர், “நிர்வாகத் திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் செயலற்ற தன்மையால் பெருமழை பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது 2026 தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.

News December 4, 2024

டிசம்பர் 4 வரலாற்றில் இன்று!

image

➤1259 – பிரான்ஸ் (3ஆம் லூயி), இங்கிலாந்து (9ஆம் என்ட்றி) இடையே பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. ➤1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது. ➤1829 – வங்கத்தில் உடன்கட்டை ஏறும் முறை தடைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. ➤1889 – விடுதலை வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள். ➤1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது. ➤2014 – நீதியரசர் VR கிருஷ்ணய்யர் மறைந்த நாள்.

News December 4, 2024

ஃபைனலில் மோதும் இந்தியா – பாக்!

image

U21 ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி ஃபைனலில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஓமனில் 10வது சீசன் நடந்து வருகிறது. அதன் அரையிறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி, 7வது முறையாக ஃபைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை பாக்., அணி வீழ்த்தியது. கோப்பையை கைப்பற்றும் நோக்கில் இந்தியா, பாக்., இன்று மோதும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

News December 4, 2024

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடை கோரி மனு

image

வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் இந்திய டி.வி சேனல்களுக்கு தடை விதிக்கக் கோரி அந்நாட்டின் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஜி பங்களா, ரிபப்ளிக் பங்களா உள்ளிட்ட டிவி சேனல்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையாக ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடப்பதாக வன்முறையை தூண்டும் வகையில் செய்திகளை பரப்புவதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 4, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால். ▶குறள் இயல்: இல்லறவியல். ▶அதிகாரம்: நடுவு நிலைமை. ▶குறள் எண்: 118 ▶குறள்: சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. ▶பொருள்: முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை சீர்தூக்கி காட்டும் தராசு போல, ஒரு பக்கமாக சாயாமல் சமனாக நின்று நீதியைக் காக்கும் பொருட்டு நடுநிலைமையோடு வாழ்வதே சான்றோருக்கு அழகாகும்.

News December 4, 2024

பெண்களுக்கு எதிரான ‘சதி’க்கு முடிவு கட்டிய நாள் இன்று!

image

இந்தியாவில் ‘சதி’ உடன்கட்டை ஏறும் முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்ட தினம் இன்று. கணவனை இழந்த (விரும்பாத) பெண்ணை எரியும் சிதை தீயில் தள்ளி, ‘சதி மாதா’ என்ற புனித பட்டத்தை அளிக்கும் வழக்கம் வங்கத்தில் இருந்தது. கட்டாயப்படுத்தி தீயில் இறக்கும் இம்முறையை கேரி, ராஜாராம் மோகன் ராய் போன்றோர் எதிர்த்தனர். 1829இல் இக்கொடூரத்திற்கு எதிராக சட்டமியற்றி ஆளுநர் வில்லியம் பென்டிங்க் முடிவு கட்டினார்.

News December 4, 2024

‘இந்தியா ஒரு ஆய்வகம்’ சர்ச்சையில் சிக்கிய பில்கேட்ஸ்

image

புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பதற்கான ஒரு ஆய்வகமாக இந்தியா இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹாஃப்மேனுடன் பாட் கேஸ்டில் பேசிய அவர், “இந்தியாவில் ஒரு விஷயத்தை நம்மால் செய்ய முடிந்தால், உலகின் எந்த மூலையிலும் அதனை நாம் சாத்தியப்படுத்தலாம். மருத்துவம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியா தற்போது முன்னேறி வருகிறது” என்றார்.

error: Content is protected !!