India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 12 பேரும், திருவண்ணாமலையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருவரும் பலியாகியுள்ளனர். அதேபோல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான ஆடு, மாடுகளும் பலியாகியுள்ளன.
Relationship, Situationship வரிசையில் புதிய ட்ரெண்ட் தான் Nanoship. இதனை ஈசியாக புரிந்துக்கொள்ள, மெட்ரோவில் நீங்கள் ஒருவரை சந்திக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். ஒரு Spark உண்டாக, அப்போது நிகழும் ஒரு சின்ன conversation, ஒரு coffee, சிறு புன்னகைகள், அத்தருணத்தில் கிடைக்கும் ஒரு கனெக்ஷன், அவ்வளவுதான். இது தான் Nanoship. Lonelyயாக இருப்பவர்களுக்கு வந்துள்ளது இந்த ட்ரெண்ட். நீங்க ரெடியா?
விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பாமல் பொருட்கள் வழங்க உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், கார்டு ஸ்கேன் செய்து பொருட்களை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது. மழை காரணமாக பல மாவட்டங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது.
நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக பத்திரம் பதிவு செய்யும் வகையில், கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய பத்திரப்பதிவு துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150 (முன்பு 100), 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் (முன்பு 200) ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.
1) தீர்க்க ரேகைகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு? 2) பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி எது? 3) இந்தியாவின் முதல் பெண் பல் மருத்துவர் யார்? 4) நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்? 5) BDS என்பதன் விரிவாக்கம் என்ன? 6) RBI வங்கி எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 7) பெட்ரோலியத்தை சிதைக்கும் பாக்டீரியா எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. கோயில் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்றைய படப்பிடிப்பில் நடிகை த்ரிஷா கலந்து கொள்வார் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்வாஸிகா, நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்-ஐ போலீசார் பல மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் கஞ்சா மற்றும் மெத் விற்பனை செய்ததாக சென்னையில் 10 பேர் கைதானார்கள். அவர்களுடன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறி விசாரணை நடத்திவந்த போலீசார், இன்று காலை அவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில், நானும் தோனியும் பேசுறதில்லை. CSK இல் விளையாடும் போது, நாங்கள் பேசினோம். அப்போதும் மைதானத்தில் மட்டுமே பேசுவோம். அறையில் நாங்கள் பேசிகொண்டதில்லை. IPLலை தாண்டி, நாங்கள் பேசி, 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேசாமல் இருப்பதற்கு என்னிடம் எந்த காரணமும் இல்லை. ஆனால் தோனியிடம் காரணங்கள் இருக்கலாம், அது எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
யாருப்பா காலைல எந்திரிச்சி குளிக்கிறது என கஷ்டப்படுறீங்களா? உங்களுக்காகவே ஜப்பான்காரன் washing machineஐ கண்டுபிடித்து விட்டான். அந்நாட்டின் HowerHead நிறுவனம் சயின்ஸ் கோ. AI உதவியால் குளிக்க வைக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளது. நீங்க உள்ள போய் சேரில் உக்கார்ந்து போதும். 15 நிமிடத்தில் அதுவே உங்கள குளிப்பாட்டி வெளியே அனுப்பிடும். விரைவில் இது பல நாடுகளும் கிடைக்குமாம். யாரெல்லாம் வாங்க ரெடி?
மலேசியா, தெற்கு தாய்லாந்தில் வெளுத்து வாங்கும் மழையால் சுமார் 3,00,000 குடும்பங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றன. இதுவரை 30 பேர் பலியான நிலையில், 40,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மலேசியாவின் பட்டானி, சோங்க்லா, யாலா மாகாணங்கள் வரலாறு காணாத அழிவைச் சந்தித்துள்ளது. இந்த துயரிலிருந்து மீளக் குறைந்தது 224 மில்லியன் டாலர் செலவாகும் என அந்நாட்டுப் பிரதமர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.