news

News December 8, 2024

காலேஜ் பெண் வன்கொடுமை.. CM அமைதியாக இருப்பது ஏன்?

image

பாலியல் தொல்லை புகாரை வெறும் வார்னிங் கொடுத்து விடுதலை செய்யும் அதிகாரத்தை போலீசுக்கு யார் கொடுத்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட காலேஜ் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல், பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெளி மாநில பிரச்னைக்கு 4 பக்க அறிக்கை விடும் CM அமைதியாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 8, 2024

BREAKING: புதிதாக ஆத்தூர் மாவட்டம்?

image

சேலம் மாவட்டத்தை 2ஆக பிரித்து ஆத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் இந்த கோரிக்கை நிறைவேற்றக்கோரி, அக்கட்சியின் MLAக்கள் வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 8, 2024

தமிழகத்தின் மரம், விலங்கு, பழம் எது தெரியுமா?

image

நாட்டின் பல அடையாளங்களை அறிந்து வைத்திருக்கும் உங்களில் பலருக்கும் தமிழகத்தின் அடையாளங்களை குறித்து தெரியுமா. நாட்டிற்கு அடையாளங்கள் இருப்பது போலவே, ஒவ்வொறு மாநிலத்திற்கும் தனி அடையாளங்களும் இருக்கிறது. தமிழகத்தின் நடனம் பாரதநாட்டியம் என தெரிந்தவர்களுக்கு தமிழகத்தின் மரம் பனைமரம் * தமிழகத்தின் விலங்கு நீலகிரி வரையாடு * மாநிலத்தின் பழம் பலாப்பழம் * தமிழகத்தின் பூ காந்தள் பூ.

News December 8, 2024

IND-BAN Under 19: இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு

image

Under 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஒவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் ராஜ், செட்டன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற்று 9வது முறையாக கோப்பையை தூக்குமா?

News December 8, 2024

முடிவுக்கு வந்த சிராஜ்-ஹெட் சண்டை

image

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹெட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆட்டம் முடிந்த பிறகு சிராஜ் வெளியே வந்து இது ஒரு தவறான புரிதல். நாம் அந்த சம்பவத்தில் இருந்து விலகிவிடுவோம். ஒரு சிறந்த வாரத்தை அழிக்க வேண்டாம். நாங்கள் இருவரும் sweet அதை மறந்துவிட்டோம். அதை மறக்க விரும்புகிறோம்”. இதன்மூலம் ஒருவழியாக சிராஜ்-ஹெட் சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.

News December 8, 2024

விராட் கோலி கிட்ட டெக்னிக்கல் பிரச்னை இருக்கு

image

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் டெக்னிக்கல் பிரச்னை இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கோலி முழு திறனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். Off Stumpக்கு வெளியே வரும் பந்தை எதிா்கொள்ள முடியாமல் அவர் திணறுவதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். இந்த பிரச்னையை அவர் சரி செய்யாத வரைக்கும் சோபிக்க முடியாது என்று மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

News December 8, 2024

விஜய்க்கு நடிகை கஸ்தூரி ஆதரவு

image

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்துள்ளார். ”திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன்” என்று கஸ்தூரி பேசியது இணையத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. முன்னதாக, அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்தும் அவர்கள் தலைமையிலான கூட்டணி குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார் விஜய்.

News December 8, 2024

திருடுபோன நடிகையின் செருப்புக்கு ₹237 கோடியா?

image

திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் பயன்படுத்திய பல பொருட்கள் கோடிகளில் ஏலம் போகிறது. நடிகையின் திருடு போன ஒரு ஜோடி செருப்பு ₹237 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதனை ஹாலிவுட்டின் பிரபல ‘The Wizard of Oz’ படத்தில் நாயகி ஜூடி ஜெரால்ட் அணிந்திருப்பார். இந்த செருப்புகள் 2005ல் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து 2018ல் ஆண்டு FBIயால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 8, 2024

Facebook லைவில் Suicide: ஆண்ட்டி மேடம் எடுத்த விபரீத முடிவு

image

என்னை துன்புறுத்த முயற்சிகள் நடக்கின்றன – தற்கொலை முன், கொல்கத்தாவை சேர்ந்த ‘ஆண்ட்டி மேடம்’ ஐஸ்பீர் கவுர் சொன்னது. படித்த பள்ளியில், 22 ஆண்டுகளாக பணியாற்றியவருக்கு, சில ஆண்டாக நிர்வாகத்துடன் உரசல் இருந்துள்ளது. கணவரை இழந்து, பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க தனியாக இருந்தவர், பேஸ்புக் லைவில் தற்கொலை செய்தார். இவரின் குற்றச்சாட்டுக்களை நிர்வாகம் மறுக்க, விசாரணை வேண்டும் கோரிக்கை வலுக்கின்றன.

News December 8, 2024

சென்னை Trafficக்கு இனி டாட்டா: வருகிறது Air Taxi

image

எங்க கிளம்பினாலும் ட்ராபிக், எப்போ பார்த்தாலும் டிராபிக் என தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக வரவிருக்கிறது Air Taxi. இந்த Air Taxi பெங்களூரு நகரில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாம். இதன் மூலம் 4 மணி நேரம் பயணம் செய்யும் இடங்களுக்கு 40 நிமிடத்தில் போய்விடலாம் என்கிறார்கள். விரைவில் இது சென்னையிலும் வரவுள்ளதாம். எல்லாம் ஓகே ரேட் எவ்வளோ இருக்கும்னு தெரியலையே எந்த ஊருக்கு முதலில் வேணும் கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!