news

News December 4, 2024

இப்போதும் சச்சின் தான் நம்.1

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓராண்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் சச்சின் முதல் இடத்தில் நீடிக்கிறார். முழுப் பட்டியல்: *சச்சின் 1,562 ரன் -2010 *வீரேந்திர சேவாக் -1,462 (2008) * சேவாக் -1,422 (2010) *கவாஸ்கர் -1,407 (1979) *சச்சின் -1392 (2002) *குண்டப்பா விஸ்வநாத் -1388 (1979) *ராகுல் டிராவிட் -1357 (2002) *விராட் கோலி – 1322 (2018) *சுனில் கவாஸ்கர் -1310 (1983) *ஜெய்ஸ்வால் -1280 (2024).

News December 4, 2024

இரட்டை வேடம் போடுவதில் திமுக கில்லி: ஓபிஎஸ்

image

புயல் நிவாரண நிதியை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபெஞ்சல் புயலை திமுக சரியாக எதிர்கொள்ளவில்லை என்றும், அரசின் நிர்வாகத் திறமையின்மையால் பல கிராமங்கள் இன்னமும் வெள்ளநீரில் தத்தளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், இரட்டை வேடம் போடுவதில் திமுகவுக்கு நிகர் திமுகதான் எனவும் அவர் சாடியுள்ளார்.

News December 4, 2024

புயல் நிவாரணம்: ரூ.10 லட்சம் அளித்தார் சிவகார்த்திகேயன்

image

ஃபெஞ்சல் புயல், வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசிடம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் அளித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் இதற்கான காசோலையை வழங்கியுள்ளார். முன்னதாக, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை டி.பி. சத்திரத்தில் மழையால் பாதித்தோருக்கு விஜய் நிவாரணப் பொருள் வழங்கினார்.

News December 4, 2024

ரயில்வேயை தனியார்மயம் ஆக்காதீங்க: எதிர்க்கட்சிகள்

image

ரயில்வேயை மத்திய அரசு தனியார்மயமாக்க திட்டமிட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியானபடி உள்ளன. இதனை மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பின. சமாஜ்வாதி எம்பி நீரஜ் மவுரியா பேசியபோது, ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தால், ஏழைமக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினார். TMC எம்பி பாபி ஹல்தார் பேசியபோது, மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News December 4, 2024

வெப் சீரியசால் சர்ச்சையில் ஐஸ்வர்யா ராஜேஷ்

image

தமிழ் படங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அண்மையில் இவர் வெப் சீரியசில் நடித்த சில காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் அவரும், பார்வதி திரிவோத்தும் முத்தமிடுவது உள்ளிட்ட நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதை இணையதளங்களில் கண்ட ரசிகர்கள் பலரும், குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பவர் இதுபோல நடிக்கலாமா என ஐஸ்வர்யாவை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

News December 4, 2024

எனக்கு தெரியும்.. ஆனா சொல்ல மாட்டேன்: KL ராகுல் சஸ்பென்ஸ்

image

AUS உடனான 2-வது டெஸ்ட்டில் எப்போது களமிறங்குவேன் என்பது தனக்கு தெரியும். ஆனால் அதை இப்போது சொல்ல மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் KL ராகுல் தெரிவித்துள்ளார். Playing 11-ல் இடம்பிடிப்பதே தனக்கு போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட்டில் ராகுல்- ஜெய்ஸ்வால் நல்ல பாட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்த ஜோடியே 2-வது டெஸ்டிலும் ஓபனிங் இறங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

News December 4, 2024

நமீபியா வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி

image

72 வயதான நெடும்போ நந்தி தைத்வா, நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வாகி வரலாறு படைத்துள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி அந்நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் SWAPO சார்பில் போட்டியிட்ட நெடும்போ நந்தி 57.3% வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தின் 2ஆவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

News December 4, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூருக்கு மழை அலர்ட் விடுக்கப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

News December 4, 2024

மீண்டும் ஆஸ்கரை தட்டி தூக்குவரா AR..?

image

2025 ஆஸ்கர் விருதுக்கான முதற்கட்ட தேர்வு பட்டியலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘ஆடுஜீவிதம்’ படம் இடம்பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் ISTIGFAR, Puthu Mazha பாடல்களும், சிறந்த BGM பிரிவிலும் இப்படம் இடம்பெற்றுள்ளது. சிறந்த பாடல் பிரிவில் மொத்தம் 89 பாடல்களும், BGM பிரிவில் 146 படங்களும் உள்ளன. இதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 15 பாடல்களும், 20 BGMகளும் அடுத்த கட்ட சுற்றுக்கு தேர்வாகும்.

News December 4, 2024

என்னை நானே பார்ப்பது போல் இருந்தது: கே.எல்.ராகுல்

image

10 ஆண்டுகளுக்கு முன் AUS மண்ணில் முதல் முறையாக ஓபனிங் இறங்கியபோது எப்படி உணர்ந்தேனோ, அதே நிலையில்தான் ஜெய்ஸ்வாலும் இருந்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். பதட்டம் அடையாதே, 3 முறை மூச்சை நன்கு இழுத்து விடு என முரளி விஜய் தனக்கு அப்போது சொன்ன அறிவுரையை, ஜெய்ஸ்வாலுக்கு சொன்னதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முதல் 30 பந்துகளுக்கு அவரை CALM-ஆக வைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!