news

News December 27, 2024

மீனவர் பிரச்னையில் இனி பேச்சுவார்த்தை இல்லை: SL

image

தமிழக மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை என்று, இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைதுசெய்து வருகிறது. இதை தடுக்குமாறு, மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பும் நிலையில், சந்திரசேகரனின் பேச்சு, தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலும் நீடிக்கிறது.

News December 27, 2024

லக்கி பாஸ்கர் இயக்குநருடன் கூட்டணி போடும் சூர்யா

image

லக்கி பாஸ்கர் படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவருடன் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நாகவம்சி பேச்சுவார்த்தை நடத்தியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் இந்தியாவில் முதல் கார் இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை குறித்து கதைக்களம் என்பதால் இப்படத்திற்கு ‘760 சிசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

News December 27, 2024

ஆபரேஷனுக்கு பிறகு மன்மோகன் கேட்ட முதல் கேள்வி

image

2009இல் பிரதமராக இருந்தபோது மன்மோகன்சிங்கிற்கு இதய அறுவை சிகிச்சை 11 மணி நேரம் மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரம் மயக்கம் தெளிந்து கண்விழித்த மன்மோகன், நாடு எப்படி உள்ளது? காஷ்மீர் எப்படி இருக்கிறது ? என முதன்முதலில் கேள்வி எழுப்பியுள்ளார். தனது உடல்நிலை குறித்து எதுவும் கேட்கவில்லை. இந்த நினைவுகளை அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரமாகாந்த் பாண்டா தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

News December 27, 2024

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இனி ₹2 லட்சம்

image

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் நிதியுதவி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை விபத்துகளில் சிக்கும் நபர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுவரை, விபத்தில் சிக்கியவர்களுக்கு ₹1 லட்சம் அரசால் சேவை கட்டணமாக வழங்கப்பட்டது. தற்போது அது ₹2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாநிலத்தில் 721 ஹாஸ்பிடல்களில் பயன்பாட்டில் உள்ளது.

News December 27, 2024

மாணவி வன்கொடுமை வழக்கை CBIக்கு மாற்றுக: EPS

image

அண்ணா பல்கலை.,மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையரும், உயர்க்கல்வி அமைச்சரும் கூறும் விளக்கங்கள் முரண்படுகின்றன என்று இபிஎஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். கைதான ஞானசேகரன், இன்னொரு சார் என்று ஒருவரை குறிப்பிட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார். ஆனால், அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது என சாடிய அவர், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 27, 2024

சொன்னது 6.. அடித்ததோ 8 .. அசத்தல் அண்ணாமலை

image

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடிக்கப் போவதாக கூறியிருந்தார். பொதுவாக அரசியல்வாதிகள் பேட்டியின்போது ஏதாவது கூறிவிட்டு பிறகு மழுப்பி விடுவர். ஆனால் அண்ணாமலையோ ஒருபடி மேலே சென்று, 6 முறைக்கு பதிலாக, 8 முறை அடித்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் பாஜகவினர் இதை குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

News December 27, 2024

Follow Onஐ தவிர்க்குமா இந்தியா?

image

டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் ஸ்கோரை விட 200 ரன்கள் குறைவாக முதல் இன்னிங்சில் ஒரு அணி ஆட்டமிழந்தால், அந்த அணி பாலோ ஆன் ஆட அழைக்கப்படும். அப்படி நடைபெற்று வரும் 4வது BGT டெஸ்டில் இந்திய அணி இந்த போட்டியில் 275 ரன்களை எடுக்க வேண்டும். தற்போது 164/5 எடுத்து இந்தியா தடுமாறும் நிலையில், நாளை பாலோ ஆனை தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா – பண்ட் ஆகியோர் இந்தியாவை காப்பாற்றுவார்களா?

News December 27, 2024

ராகுலை பின்பற்றுகிறாரா அண்ணாமலை?

image

தெலங்கானாவின் சங்காரெட்டியில் 2022இல் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ராகுல் சாட்டையை வாங்கி ஒருமுறை உடலில் அடித்தார். இது நடைபெற்று 2 ஆண்டுகள் கழித்து, அண்ணா பல்கலை. கழக விவகாரத்தில் அண்ணாமலை இன்று சாட்டையால் அடித்துக் காெண்டார். தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த சாட்டையடி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ராகுலை அண்ணாமலை பின்பற்றுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News December 27, 2024

ஜெயக்குமார் மீது வழக்குப் பாய்ந்தது

image

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் நேற்று தடையை மீறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்பாேது அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டாேரை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இந்நிலையில், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 900 பேர் மீது பாேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 27, 2024

இன்றே கடைசி.. ரயில்வேயில் 1,785 அப்ரன்டிஸ் வேலை

image

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 அப்ரன்டிஸ் வேலைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு கல்வித்தகுதியாக ITI, 10ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக 1.1.2025-ன் படி, 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

error: Content is protected !!