India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வழக்கமான ஜாமின் வழங்கக் கோரி நாம்பள்ளி நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்த நிலையில், பதிலளிக்க போலீசார் அவகாசம் கோரியதால், விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றுடன் அவரின் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், அவரது தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்த தலைவர் H.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான அவதூறு கருத்து ஆகிய இரு வழக்குகளில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்திருந்தாா். இதன் விசாரணையில், சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் புதிதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக MET அறிவித்துள்ளது. இதனால் நாளை (28.12.2024) மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. அதேவேளையில், அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
மாபெரும் எக்னாமிஸ்ட்டாக உலகம் அறிந்த மன்மோகன் சிங், ஓர் சிறந்த எழுத்தாளர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?. இந்தியப் பொருளாதாரம், திட்டங்கள், வளர்ச்சி தொடர்பாக அவர் எழுதிய Changing India மற்றும் To the Nation, for the Nation ஆகிய புத்தகங்கள் அவரது பரந்த சிந்தனையை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக Changing India புத்தகம் 5 தொகுப்புகளைக் கொண்டது. முடிந்தால் இவற்றை வாங்கிப் படியுங்கள்..
இந்தியா தனது ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்வதுடன் தற்பாேது நட்பு நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதியும் செய்து வருகிறது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.21,083 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.5% அதிகம் ஆகும். இந்த ஏற்றுமதி புதிய உச்சம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழையோ, மிதமான மழையோ பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. SHARE IT.
2024ஆம் ஆண்டு திரையுலக தம்பதிகளின் பிரிவு காலம் போலும். தமிழில் தனுஷ் – ஐஸ்வர்யா, ஏ.ஆர் ரகுமான் தம்பதிகள் உள்ளிட்டாேர் பிரிந்தனர். இதேபோல் ஹிந்தியிலும் தற்போது ஒரு ஜோடி பிரிந்துள்ளது. அர்ஜூன் கபூர், மலைகா அரோரா திருமணம் செய்யாமலே தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தாம் சிங்கிள் என அர்ஜூன் கபூர் கூறியுள்ளார்.
தமிழ் பிக்பாஸ் சீசன் 8ல் கடந்த வார எலிமினேஷனாக ரஞ்சித் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வார நாமினேஷனில் இருக்கும் ஜாக்குலின், VJ விஷால் ஆகியோர் நிச்சயமாக காப்பாற்றப்பட்டு விடுவார்கள் எனப்படுகிறது. அதே நேரத்தில் டேஞ்சர் ஜோனில் இருக்கும் ஜெஃப்ரி தப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அன்ஷிதா தான் இந்த வாரம் எலிமினேஷன் எனப் பேசப்படுகிறது நீங்க என்ன சொல்றீங்க?
சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒருவகை டிரெண்டாக மாறி வருவதாக ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சொர்க்கவாசல் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, தடைவிதிக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் தடைவிதிக்க ஐகோர்ட் கிளைக்கு அதிகாரமில்லை எனக்கூறி, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.