India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்வதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். நியூயார்க்கில் பேசிய அவர், சிறுபான்மையினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நீதி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஹிந்து, புத்த மதத்தினர் மீதான இனப்படுகொலையின் மூளையாக மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய்ஷா ICCஇன் புதிய தலைவராக கடந்த 1ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனால் BCCI-இல் அவர் வகித்த செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கான போட்டியில் குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் பட்டேல், BCCI இணை செயலாளர் தேவ்ஜித் சைகியா (அசாம்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். 2024 ஜனவரி 2வது வாரத்துக்குள் புதிய செயலாளர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு MH-60R ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வது தொடர்பான ஏறத்தாழ ₹10,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்தும் என்று அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய ஒப்பந்ததாரராக ‘லாக்ஹீட் மார்ட்டின் ரோட்டரி & மிஷன் சிஸ்டம்ஸ்’ செயல்பட உள்ளதாக அறியமுடிகிறது.
➤1492 – லா ஸ்பானியோலா தீவில் கொலம்பஸ் கால் பதித்தார். ➤1757 – லெயூத்தன் சமரில் இரண்டாம் பிரெடெரிக் வென்றார். ➤1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. ➤1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது. ➤2003 – குளிர்திரவ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. ➤2013 – நெல்சன் மண்டேலா மறைந்த நாள்.
மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “குடிமைப் பணிகளில் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் ‘ரோஸ்கர் மேலா’ (Employment camp) நடத்தப்படும்” என்றார்.
திருமணமான ஆண்கள் அனைவரும் அவரவர் மனைவியின் பேச்சை கேட்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கூறியுள்ளார். அபிஷேக் பச்சன் தனது காதல் மனைவி ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்து பிரியப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இவ்வாறு மறைமுகமாக கூறி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் கூறுகின்றனர்.
புரோ கபடி தொடரின் 3வது கட்ட லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸுடன் (HS) பெங்கால் வாரியர்ஸ் (BW) அணி மோதியது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய BW அணி 39-32 என்ற கணக்கில் HS அணியை வீழ்த்தி வென்றது. இந்த போட்டியில் வெல்ல தவறிய இருந்தாலும், அரியானா ஸ்டீலர்ஸ் அணி 62 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. BW அணி 31 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் உள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால். ▶குறள் இயல்: இல்லறவியல். ▶அதிகாரம்: நடுவு நிலைமை. ▶குறள் எண்: 119 ▶குறள்: சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். ▶பொருள்: நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை. அப்படி வாழ்வதே சான்றோருக்கு அழகாகும்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகுமென படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் & டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நவ. 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
வியட்நாம் வங்கியில் மோசடியில் ($12 பில்லியன்) ஈடுபட்ட பெண் தொழிலதிபர் மை லானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Van Thinh Phat என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த அவர், 2012-22 வரை போலி நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். அவற்றை காட்டி, அந்நாட்டின் சைகோன் வணிக வங்கியை கட்டுப்படுத்தி, மோசடி செய்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதில் 75% தொகையை அவர் திருப்பி அளித்தால் தண்டனை குறைக்கப்படலாம்.
Sorry, no posts matched your criteria.