India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
அரசியல் நெருக்கடி காரணமாக, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. பட்ஜெட் பற்றாக்குறை சர்ச்சை காரணமாக பிரான்ஸ் PM மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், ஆட்சி கவிழ்ந்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 60 ஆண்டுகளில் முதல்முறையாக பிரான்ஸ் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்துள்ளது.
தெலுங்கானாவில் நேற்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.3 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இது ஆந்திரா, மகாராஷ்டிராவிலும் உணரப்பட்டது. சுமார் 10 வினாடிகள் வரை நீடித்த அதிர்வுகளால், மக்கள் பீதியடைந்து வெட்ட வெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தில் சேதம், உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், தெலுங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கூறப்படுகிறது.
அம்மா என்ற அதிமுகவினரால் மரியாதையாக அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆகியும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக நிற்கவைக்கிறது. மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், மகளிர் காவல் நிலையம் என அவரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். அவர் திட்டங்களால் பயன்பெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் கீழே பதிவிடுங்கள்.
எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 2 படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, அவர்களை கைது செய்ததோடு, படகுகளையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது. ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதாகவும், வலைகள், ஜிபிஎஸ் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழக புயல் பாதிப்புகள் குறித்து விதி எண் 267இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக எம்.பி., தம்பிதுரை நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான புயல் பாதிப்பை தமிழகம் கண்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை & கடலோர மாவட்டங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்த நோட்டீஸ் விவாதத்திற்கு ஏற்கப்படவில்லை.
திருப்பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி வெளிப்படுத்திய ஆலகால விஷத்தை உண்ட ஈசன் லிங்கத் திருமேனியாக அருள் பலிக்கும் திருத்தலம் (தஞ்சை) திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயிலாகும். மார்க்கண்டேயர் தவமிருந்து வழிபட்ட இத்திருத்தலத்திற்கு பௌர்ணமி நாளில் சென்று பிரம்ம தீர்த்தத்தில் குளித்து, இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, பஞ்ச வில்வம் சாத்தி வணங்கினால் நீண்ட ஆயுள் கிட்டும் என்பது நம்பிக்கை.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல், கனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி இருப்பதாலும், மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் மழைநீர் தேங்கிய 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் திறமை தனக்கு இல்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். பட இயக்கும் வாய்ப்பை பெற்றது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அட்டகத்தி பட ரிலீஸின்போது, தயாரிப்பாளர் CV குமார் பற்றி கேள்விப்பட்டு அவரை முகநூலில் பின் தொடர்ந்து வாய்ப்பு கேட்டேன். அவரிடம் ஸ்கிரிப்ட்டை அளித்தேன். படித்த உடனே படம் தயாரிக்க சம்மதம் சொன்னார்” என நெகிழ்ச்சியோடு கூறினார்.
✍மதம், அரசியல், ஆட்சி ஆகியவற்றின் நோக்கம் ஏழைகள் பணக்காரர்களைக் கொல்வதைத் தடுப்பதேயாகும். ✍எதிரி தவறு செய்யும்போது, அறிவாளி ஒருபோதும் குறுக்கிட மாட்டான். ✍அசாத்தியம் என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணப்படும் வார்த்தை. ✍வரலாறு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்களின் தொகுப்பு. ✍உலகம் பாதிக்கப்படுவது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல; நல்லவர்களின் மௌனத்தால்தான்.
Sorry, no posts matched your criteria.