India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தங்க நகைகள், பொருள்கள் காணாமல் போவதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் விநோதமாக திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட 6 சடலங்கள் காணாமல் போயுள்ளன. இளைஞர் ஒருவரின் சடலத்தை புதைக்க சென்றபோது, இது தெரிய வரவே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயானத்தில் திருட்டுத் தனமாக மண் அள்ளிய கும்பல், தெரியாமல் சடலங்களையும் எடுத்து சென்றது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக நிலவரப்படி ஒரு காயின் $100,000க்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 85 லட்சமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு பிட்காயின் மதிப்பு 40% உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு $1000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 1வில் சந்தன கடத்தல் கும்பலின் தலைவனாக உயரும் புஷ்பராஜ், சர்வதேச அளவில் எப்படி முன்னேறினார் என்பதே புஷ்பா 2வின் கதை. மாஸ் ஹீரோவாக அல்லு அர்ஜுன் இன்டர்வெல், கிளைமேக்ஸில் ரசிகர்களை அசத்தி விட்டார். 2nd halfல் எமோஷனலாக செல்லும் திரைக்கதையில், முக்கிய அம்சமான கடத்தல் தொடர்பான காட்சிகள் மேஜர் மிஸ்ஸிங். வில்லன் நடிகர்களும் பெரிதாக சோபிக்காததும், படத்தின் நீளமும் மைனஸ். Rating: 2.75/5
சுபமுகூர்த்த தினங்களில் பத்திரம் பதிவு செய்ய மக்கள் பாெதுவாக அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இதைக் கருத்தில் கொண்டு, ஒரு சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடத்தில் 150, 2 சார்பதிவாளர் அலுவலகம் உள்ள இடங்களில் 300 டோக்கன் ஒதுக்க பத்திரப்பதிவு துறை ஆணையிட்டுள்ளது. மேலும், வழக்கத்தை விட கூடுதலாக 4 தட்கல் டோக்கன் ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
1) தமிழகத்தில் மொத்தம் எத்தனை ரயில் நிலையங்கள் உள்ளன? 2) புத்தர் எந்த மொழியில் போதித்தார்? 3) ESI என்பதன் விரிவாக்கம் என்ன? 4) இந்தியாவில் மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது? 5) இந்தியாவின் முதல் பெண் உயிர்வேதியியலாளர் யார்? 6) “திருவிளையாடல் புராணம்” என்ற நூலின் ஆசிரியர் யார்? 7) சூரியனின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
ஆபரணத் தங்கம் விலை நேற்றும், நேற்று முன்தினமும் கிராமுக்கு ரூ.7,130 ஆகவும், சவரன் தங்கம் ரூ.57,040ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7,140 ஆகவும், சவரன் தங்கம் விலை ரூ.80 அதிகரித்து ரூ.57,120 ஆகவும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.101ஆகவும், கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.1,01,000 ஆகவும் விற்பனையாகிறது.
ஆஸி. அணிக்கு எதிராக நாளை நடைபெறும் 2வது டெஸ்டில் இந்திய அணி ஓப்பனர் ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நாளை தொடங்கும் 2வது போட்டியில் ரோஹித்திற்கு பதிலாக கே.எல் ராகுல் ஓபனிங் செய்யலாம் என முன்னாள் கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸி.க்கு ரோஹித் தாமதமாக வந்ததால் செட்டாக டைம் எடுக்கும். அதனால் அவர் 5 அல்லது 6வது வரிசையில் களமிறங்கலாம்’ என்றார்.
ரயில் டிக்கெட்டுகளுக்கு ஆண்டுக்கு ₹56,993 கோடி மானியம் வழங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் மானிய விலை டிக்கெட் இன்னும் ஏன் தொடங்கப்படவில்லை என துரை வைகோ MP எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதை குறிப்பிட்ட அவர், ஒரு ரயில் டிக்கெட் விலை ₹100 என்றால், பயணிகளிடம் ரயில்வே ₹54 மட்டுமே வசூலிக்கிறது என்றார்.
இந்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிலையான சூழ்நிலையை மோடி உருவாக்கியுள்ளதாகவும் பாராட்டினார். விரைவில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கான உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் அமைக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபல திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான கே.எஸ். ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார். நேற்று மாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை ரவிக்குமார் தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். தாயாரின் இறுதி சடங்குகள் இன்று மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.