news

News December 27, 2024

மக்களுக்கு ‘வேலை’ வழங்கியவர்

image

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் வேலை உறுதித் திட்டம் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, அன்னிய முதலீடு, தனியார்மயமாக்கல் மற்றும் உரிமம் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், தேசிய ஊரக சுகாதார இயக்கம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய சீர்திருத்தங்களுக்கு அவர் அடித்தளம் அமைத்தார்.

News December 27, 2024

முதல் சீக்கிய பிரதமர்

image

2004ஆம் ஆண்டு காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த நிலையில், சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், 13வது பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரான அவர், தொடர்ந்து 2 முறை ( 2004 முதல் 2014 வரை ) அப்பதவியை வகித்தார். இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்த 4வது நபர் மன்மோகன் சிங் என்ற பெருமையை பெற்றவர்.

News December 27, 2024

மன்மோகனின் பொருளாதார சீரமைப்பு

image

1991-ல் இந்தியா கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டபோது புதிதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.நரசிம்ம ராவ், பொருளாதார ஆலோசகராக இருந்த மன்மோகன் சிங்கை அரசியலுக்குள் இழுத்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், தாராளமய பொருளாதார கொள்கைகள் உள்பட பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இதன் பின்னர்தான் சீர்திருத்த பொருளாதார நிபுணராக மன்மோகன் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

News December 27, 2024

என்ன படித்திருக்கிறார் மன்மோகன் சிங்?

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1954ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் MA (Economics) முடித்தார். பின்னர், 1957ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன்பின், 1962ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் D.Phil பட்டம் பெற்றார்.

News December 27, 2024

மன்மோகன் சிங்கின் கடைசி போட்டோ

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) மண்ணை விட்டு பிரிந்துள்ளார். அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கடைசி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டர்பன் மற்றும் தாடியில்லாமல் இருக்கும் இந்த புகைப்படம், காண்போரின் மனதை கரையச் செய்கிறது. பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி, நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டவருக்கு, கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 27, 2024

மன்மோகன் சிங்கின் இளமைக்காலம்

image

மிக சிறிய வயதில் தாயை இழந்த மன்மோகன் சிங், அப்பா வழி பாட்டியால் வளர்க்கப்பட்டார். அவரது இளவயது கல்வி உருது மொழியில் அமைந்தது. பிரதமரான பின்னரும் உருதுவில் எழுதியே ஹிந்தி பேச்சுகளை அமைத்துக் கொண்டார். சில நேரங்களில் அவரது தாய்மொழியான பஞ்சாபியிலும் எழுதுவார். நாடு பிரிவினைக்கு பிறகு, இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது அவர் குடும்பம். படிப்பில் எப்போதும் அவர் முதல் மாணவர்.

News December 27, 2024

தலைசிறந்த தலைவரை இந்தியா இழந்துவிட்டது: மோடி

image

மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து பெருமைமிகு பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர். நாடாளுமன்றத்திலும், மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் நுண்ணறிவு மிக்கவையாக இருந்தது. நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக விரிவான முயற்சிகளை மேற்கொண்டார் என புகழாரம் சூட்டிய மோடி, தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

உலக மயமாக்களின் சிற்பி மன்மோகன்

image

1991ஆம் ஆண்டு இந்திய சந்தையை உலக மயமாக்களுக்கு திறந்துவிட்டார் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ். அப்போது, அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங். உலக மயமாக்கல் மூலம் இந்திய பொருளாதார சந்தை பெரும் மாற்றத்தை கண்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மன்மோகன் சிங். அப்போது, இந்திய சந்தையில் அந்நிய முதலீட்டையும் ஊக்குவித்து நாட்டின் வளர்ச்சிக்கு அவர் வித்திட்டார்.

News December 27, 2024

மன்மோகன் சிங் இறந்தது எப்படி?.. Medical report

image

மன்மோகன் சிங்கிற்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் சுய நினைவை இழந்த நிலையில், இரவு 8.06 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட போதிலும், அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணிக்கு மன்மோகன் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

News December 27, 2024

“வரலாறு என்னிடம் கருணை காட்டும்”

image

2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் காலமானார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைதியான சுபாவம் மிகுந்த விமர்சனங்களை பெற்றது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவடைந்தபோது “வரலாறு என்னிடம் கருணை காட்டும்” என்று அவர் கூறினார். அவர் சொன்னது போலவே, அடுத்த சில ஆண்டுகளில் அவருடைய சாதனைகளை அனைவரும் பாராட்டத் தொடங்கினர்.

error: Content is protected !!