news

News December 5, 2024

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

image

தெற்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் (டிச.7) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, 12ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை அடையக் கூடும் எனவும் கணித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.

News December 5, 2024

ஜெயலலிதாவை போற்றிப் புகழ்ந்த VCK நிர்வாகி

image

ஆண் ஆதிக்கம் மேலோங்கியிருந்த அரசியல் களத்தில் களமாடிய ஓர் பெண் ஆளுமை ஜெயலலிதா என ஆதவ் அர்ஜுனா புகழ்ந்துள்ளார். அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து தனது வேட்பாளர்களை நிறுத்தி, வெற்றி கண்ட தலைவி எனவும், தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் விட்டுக் கொடுக்காத இரும்புப் பெண்மணி எனவும் அவர் போற்றியுள்ளார். மேலும், இன்றைய நினைவுநாளில் அவரது பங்களிப்பை நினைவு கூர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 5, 2024

28 பந்தில் சதம்…வரலாறு படைத்த அபிஷேக் ஷர்மா

image

சையத் முஷ்டாக் தொடரில் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் சதம் அடித்தார். முதலில் விளையாடிய மேகாலயா, 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அபிஷேக் ஷர்மா தனி ஒருவனாக ரன் மழை பொழிந்தார். அந்த அணி 9.3 ஓவரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 28 பந்தில் சதம் அடித்த IND வீரர் உர்வில் படேலின் சாதனையை அபிஷேக் சமன் செய்துள்ளார்.

News December 5, 2024

‘Love Education’ கற்பிக்கும் சீன அரசு

image

சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்ததையடுத்து, கல்லூரிகளில் காதல், திருமணம், குடும்ப உறவு குறித்த புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டத்தை கொண்டு வர சீன அரசு திட்டமிட்டுள்ளது. இளைஞர்கள் காதல் மற்றும் திருமண உறவை ஒரு பொறுப்பாக நினைத்து அஞ்சுவதால், நேர்மறையான திருமண உறவுகள் குறித்த கல்வி, காதல் மீதான அவர்களின் பார்வையை மாற்றும் என அரசு நம்புகிறது. இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News December 5, 2024

BREAKING: தமிழக அரசு “சிறப்பு லோன் “

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறு வணிகக் கடனுக்கான சிறப்பு முகாம் நாளை முதல் டிச.12 வரை நடைபெறுகிறது. விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு ₹1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் தரப்படுகிறது.

News December 5, 2024

சிகரெட்டை போல தான் ஸ்மார்ட் போன்களும்..!

image

சிகரெட் பாக்ஸ்களில் இடம்பெற்றுள்ளதை போன்று, ஸ்மார்ட் போன்களும் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை போன்களில் இடம்பெற செய்ய ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. போன்களுக்கு அடிமையாவதை ‘பொது சுகாதார தொற்றுநோய்’ என வரையறுத்து, 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போனை தடை செய்யவும், அந்நாட்டு அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த ஐரோப்பிய நாட்டை போல், இந்தியா எப்போது விழிக்கும்?

News December 5, 2024

PAN CARDஇல் இலவச அப்டேட் செய்யும் முறை தெரியுமா?

image

PAN CARDஇல் இலவசமாக அப்டேட் செய்யும் முறையைப் பார்க்கலாம். <>https://www.onlineservices.nsdl.com/paam/endUserAddressUpdate.html<<>> இணையதளம் சென்று, அங்கு நமது PAN, ஆதார் எண்கள், பிறந்த தேதி குறிப்பிட்டு, ஆதார் மூலம் திருத்தும் வசதியை தேர்வு செய்ய வேண்டும். பிறகு இமெயில், செல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதை உள்ளிட்டு ஓகே கொடுத்ததும், திரையில் விவரம் காட்டும். அது சரி எனில் ஓகே கொடுத்தால் அப்டேட் ஆகும்.

News December 5, 2024

BREAKING: இந்த மாவட்டத்தில் 3 நாள் விடுமுறை

image

முதல் மாவட்டமாக விழுப்புரத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணி நடப்பதாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை (வெள்ளி), சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 3 நாள் தொடர் விடுமுறைக்கு பின், டிச.9 (திங்கள்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2024

ICC சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா

image

ICC-யின் நவம்பர் மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா பெயர் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ICC அறிவித்துள்ளது. வீரர்கள் பட்டியலில் பும்ரா, PAK வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், மற்றும் SA ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் இடம் பெற்றுள்ளனர்.

News December 5, 2024

தூய காற்றை சுவாசிக்க 5 ஸ்டார் ஹோட்டல் போங்க..!

image

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 5 ஸ்டார் ஹோட்டல்கள் தூய காற்றை கஸ்டமர்களுக்கு வழங்கி வருகின்றன. நகரத்தின் காற்று தர மதிப்பீடு 397 என அதிகரித்துள்ள நிலையில், 58 என்ற அளவில் தூய காற்றை அவை வழங்குகின்றன. ஆனால், இதெல்லாம் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் தான். சென்னையிலும் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், இங்கும் அத்தகைய தூய காற்று சேவை விரைவில் அறிமுகமாகலாம்.

error: Content is protected !!