news

News December 6, 2024

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் பொன்மொழிகள்

image

✍அறியாமை அறிவாற்றலின் மிகப்பெரிய எதிரியல்ல. அது அறிவின் மாயையே ஆகும். ✍நாம் வேடிக்கையானவர்களாக இல்லாவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். ✍மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்தி கூர்மை. ✍அமைதியான மனிதர்கள் சத்தமான மனங்களைக் கொண்டவர்கள். ✍துன்பமான நேரத்தில் சிரிக்கும் நபர், அநேகமாக ஒரு பலிகடாவை வைத்திருக்கலாம். ✍இயற்கை நோக்கம் இல்லாத பயனற்ற எதையும் செய்யாது.

News December 6, 2024

தேர்தல் அரசியலை விட்டு விலகிய சபாநாயகர்

image

டெல்லி சட்டப்பேரவை சபாநாயகரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம் நிவாஸ் கோயல் (76) தேர்தல் அரசியலை விட்டு விலகியுள்ளார். இது தொடர்பாக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “வயது காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். ஆம் ஆத்மி கட்சியில் தொடர்ந்து பணியாற்றுவேன். நீங்கள் வழங்கும் எந்தப் பொறுப்பையும் நிறைவேற்ற முயற்சிப்பேன்” என்று கூறியுள்ளார்.

News December 6, 2024

தமிழக பாணியில் மகாராஷ்டிராவில் ஆட்சி

image

தமிழக முதல்வராக ஓபிஎஸ் பதவி வகித்தபோது, அவர் அமைச்சரவையில் EPS அமைச்சராக இருந்தார். பின்னர், EPS முதல்வராக இருந்தபோது அவர் அமைச்சரவையில் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார். அதே பாணியில், மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தற்போது துணை முதல்வராகவும், அவர் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த பட்நவிஸ் தற்போது முதல்வராகவும் பதவியேற்று உள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்தை கீழே கமெண்ட் பண்ணுங்க.

News December 6, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶டிச. – 06 ▶கார்த்திகை – 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை & புனர்பூசம் ▶நட்சத்திரம்: திருவோணம்.

News December 6, 2024

நிலக்கரி இறக்குமதியை குறைக்க அரசு முடிவு

image

ஒடிசா உள்ளிட்ட இடங்களில் உள்ள 27 நிலக்கரி தொகுதி சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது அரசுக்கு ஆண்டுக்கு ₹1,446 கோடி வருவாய் வரும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். 11வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், “நிலக்கரி இறக்குமதியை படிப்படியாக குறைக்க வேண்டும். அத்துடன், தொழில்நுட்பத்தில் தேவையான மாற்றங்களைச் செய்ய அரசு பல பணிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

News December 6, 2024

கனமழை வெள்ளத்துக்கு இனி எந்த பகுதியும் தப்பாது?

image

பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையால் ஏற்படும் வெள்ளத்துக்கு வழக்கமாக சென்னையும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுமே பாதிக்கப்படும். இதனால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இந்த மாவட்ட மக்கள் பீதியில் இருப்பார்கள். ஆனால் இந்த மழைகாலம், தமிழகத்தின் அனைத்து பகுதியையும் ஒருவழி பண்ணிவிட்டது. கோவை, திருப்பூர், மதுரை, சென்னை, விழுப்புரம், கடலூர், ஈரோடு என்று சுற்றி வந்து அனைத்து பகுதியிலும் கதகளி ஆடிவிட்டது.

News December 6, 2024

சமூகநீதி புரட்சியாளரை நினைவில் ஏந்துவோம்!

image

கடவுள், மதம், சாதி ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்பட்ட நாட்டின் பூர்வகுடி மக்களின் வாழ்வு உயர வட்டமேசை மாநாட்டில் வாதாடிய குரல் அற்றவர்களின் குரலுக்கு சொந்தக்காரர் அம்பேத்கர். பெரும்பான்மை மக்களின் சமூக விடுதலைக்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த பெருந்தகை. நமக்கு உரிமை அளித்த அரசியலமைப்பை வடிவமைத்த அண்ணலின் 68ஆவது நினைவு நாளில் அவர்‌ ஏற்படுத்திய சமூக புரட்சியை நினைவில் ஏந்துவோம்.

News December 6, 2024

பெண்களின் படிப்புக்கு தடை; ரஷீத்கான் கண்டனம்

image

ஆப்கனில் பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை படிப்பதற்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X பதிவில், “கல்வி தொடர்பான இஸ்லாமிய போதனைகள் பெண்கள் அறிவைப் பெறுவதையே வலியுறுத்துகிறது. பெண்களுக்கான கல்வி & மருத்துவ நிறுவனங்கள் மூடப்பட்ட ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த ஏமாற்றமும் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

News December 6, 2024

பொடுகு பிரச்னைக்கு தீர்வளிக்கும் பூண்டு பேக்

image

ஆரோக்கியமான கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு பூண்டு ஹேர்பேக் தீர்வளிக்கும் என சருமநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 5 பூண்டு பற்கள், 2 டீஸ்பூன் தேன் இரண்டையும் எடுத்து, பேஸ்ட் போல அரைக்கவும். அதை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து, பிறகு தலையை, வெந்நீரில் அலச வேண்டும். அதன் காரத்தன்மை, தலையில் உள்ள பூஞ்சை போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

News December 6, 2024

‘புஷ்பா 2: தி ரூல்’ என் மனதை தொட்டுவிட்டது: அட்லீ

image

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை இயக்குநர் அட்லீ மனந்திறந்து பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது X பக்கத்தில், “புஷ்பா 2: தி ரூல் படம் உண்மையிலே என் மனதை தொட்டுவிட்டது. அல்லு அர்ஜூன் சார், உங்களுடைய நடிப்பு சூப்பராக உள்ளது. மற்றொரு பிளாக்பஸ்டருக்காக வாழ்த்துக்கள் சார். என்னவொரு கடினமான உழைப்பு, மிகவும் பிடித்திருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!