India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பால்ய நண்பரான ஆண்டனி டட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் வரும் 12ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்காக அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கோவா சென்றடைந்தார். இதனை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘KA Wedding’ என்ற ஹேஷ்டேக்குடன் ‘And it begins’ என்ற தலைப்புடன் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்.
நடிகர் சிங்கமுத்து வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தையும் பேசக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப் பற்றி சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும் அவர் ₹5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வடிவேலு மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், வடிவேலு பற்றி கருத்து கூறக்கூடாது என்று சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்டுள்ளது.
படிக்கும் போது சிரிப்பாக இருந்தாலும், இது ஒரு சீரியஸ் விஷயம் தான். ஆன்லைன் விளையாட்டில் கடன் வாங்கி தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு விழிப்புணர்வாக தான், தமிழக காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெசேஜ் அனுப்பி உஷார்படுத்துகிறது. அதில் இருக்கும் வாக்கியங்கள் தான் இவை. நீங்களும் விளையாடாதீங்க..உடன் இருப்பவர்களையும் உஷார்படுத்துங்க.
வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து நடக்க பழகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மண் தரையில் வெறுங்காலில் நடந்து பழகுங்கள் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அல்லது தரையில் படுத்து உறங்குங்கள் என்று சொன்னால் எப்படி செய்ய முடியும்? ஆனால், இவைதான் நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சங்கள் என்பதுடன், தரையுடன் உடல் எப்போதும் தொடர்பில் இருப்பது எண்ணற்ற நன்மைகளை தரும் என்கின்றது லேட்டஸ்ட் ஆய்வு.
திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எவ்வித ஒப்பந்தமும் போடவில்லை, அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மினிஸ்டர் SB எச்சரிக்கை விடுத்துள்ளார். CM ஸ்டாலின், அதானியை ரகசியமாகச் சந்தித்ததாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார். அதானி – ஸ்டாலின் ரகசிய சந்திப்பு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட பிரச்னை என்றாலும், தமிழ் சினிமாவில் விவாகரத்துகள் தொடர் கதையாகி விட்டன. இதனால் தனக்கு கல்யாணம் பண்ணவே பயமாக இருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கல்யாணம் செய்து கொண்டால் நன்றாக வாழணும், நமக்கு இந்த விவாகரத்து எல்லாம் செட் ஆகாது என்கிறார் ஐஸ்வர்யா. ஒருவரை பார்த்தால் காதலித்து கல்யாணம் பண்ணணும்னு தோன்றும், அப்படிப்பட்ட ஒருவரை, தான் இன்னும் சந்திக்கவே இல்லை என்றும் தெரிவித்தார்.
கிரிக்கெட்டில் மட்டுமல்ல விளம்பரங்களிலும் கிங் என தோனி நிரூபித்துள்ளார். TAM Media நடத்திய ஆய்வில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 42 விளம்பர நிறுவனங்கள் தோனியை ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும் ஒருநாளில் பாலிவுட் ஸ்டார்ஸ் அக்ஷய் குமார், ஷாருக்கான், அமிதாப் 16H முதல் 22H ஸ்க்ரீன் பிரசன்ஸில் உள்ளனர். ஆனால் தோனி 14H மட்டுமே ஸ்க்ரீன் பிரசன்ஸில் இருந்தாலும் அவர்களை விட அவரின் பிராண்ட் வேல்யூ அதிகம்.
‘புஷ்பா 2’ படத்திற்காக நட்சத்திரங்கள் வாங்கிய சம்பளம் உங்கள் புருவத்தை உயர்த்தும். விஜய்யின் சாதனையை முறியடித்து, இந்திய நடிகர்களிலேயே அதிகமாக, அல்லு அர்ஜுன் ₹300 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சுகுமார் ₹15 கோடியும், ரஷ்மிகா ₹10 கோடி, பகத் ஃபாசில் ₹8 கோடி, தேவி ஸ்ரீபிரசாத் ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளனர். ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய ஸ்ரீலீலாவுக்கு ₹2 கோடி சம்பளமாம்.
மத்திய வங்கக் கடலில் நாளை (07.12.2024) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து 12ஆம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் வலுவான புயல் ஒன்று கடந்திருப்பதால் நாளை உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.
CIBIL ஸ்கோர் குறையும் பட்சத்தில் கடன் பெறுவதில் பெரும் சிக்கல் உண்டாகிறது. அப்படியாகும் சூழலில், CIBIL ஸ்கோரை மேம்படுத்தும் சில டிப்ஸை நிபுணர்கள் வழங்குகிறார்கள். அவற்றில் சில. *கிரெடிட் கார்டு பயன்பாடு 30% கீழ் வைத்திருங்கள் *கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தவும் *அடுத்தடுத்த கடன்களை பெற வேண்டாம் *உங்கள் பெயரில் பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள். உங்களுக்கு தெரிஞ்ச டிப்ஸை சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.