news

News December 6, 2024

IND-AUS: இந்திய அணி ஆல்அவுட்

image

AUSக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் IND 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ஆஸி.,வின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் (37), நிதிஷ்(42) ரன்கள் எடுக்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி(7), ரோஹித் (3) ஆகியோர் சொதப்பினர். AUS அணியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தினார்.

News December 6, 2024

EPS, சசிகலாவை விசாரிக்கலாம்

image

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் EPS மற்றும் சசிகலாவை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களை விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை நீலகிரி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, மனுதாரர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில், விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News December 6, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

1) மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் – சீனா. 2) இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்பட்ட மன்னர் – சமுத்திர குப்தர். 3) NSE – National Stock Exchange 4) ISRO அமைப்பு 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 5) இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் – சு.விஜயலட்சுமி 6) திருக்குறளில் இரு முறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல் 7) புவிக்கும், பிராக்ஸிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் – 4.3 ஒளியாண்டு.

News December 6, 2024

போரூர் ஏரியில் சடலமாக கிடந்த வணிக வரித்துறை அதிகாரி

image

சென்னை போரூர் ஏரியில் TN வணிக வரித்துறை துணை ஆணையர் செந்தில் வேல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரைக் காணவில்லை என நேற்று குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2024

நம்பிக்கை துரோகத்தால் வீழ்ந்த பவர் ஸ்டார்

image

நடிகர் பவர் ஸ்டார் கிட்னி பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “எனக்கு பணக் கஷ்டம், கவலை, ஏமாற்றம்தான் நிறைய இருக்கு. நிறைய பேரு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க. அதுல இருந்து மீள முடியாம, உடம்பையும் கவனிக்காம விட்டுட்டேன். ஆனா, என்னுடைய ஃபேன்ஸ் என்னை விட்டுக் கொடுக்க மாட்டாங்க” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

News December 6, 2024

₹70,000க்கு டாக்டர் பட்டம்.. 12,000 பேருக்கு விற்ற கும்பல் கைது

image

₹70,000 கொடுத்தால் போதும் 15 நாளில் 8வது படிச்சவுங்களுக்கு கூட டாக்டர் பட்டம் கொடுத்த குஜராத் கும்பல் சிக்கியுள்ளது. BEMS பட்டத்தை இதுவரை 12,000 பேருக்கு அந்த கும்பல் வழங்கியுள்ளது. 14 போலி டாக்டர்களை பிடித்த போலீசார் மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர். உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட போன காலம் போயி, உண்மையான டாக்டர் யார்ன்னு தேடுற காலம் வந்துரும்போல இருக்கே.. உங்க ஏரியாவிலும் இருக்கலாம் உஷார்..

News December 6, 2024

Pink Ball Vs Red Ball: அப்படி என்ன வேறுபாடு!

image

சிவப்பு நிற பந்துக்கும், இளஞ்சிவப்பு நிற பந்துக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதுகுறித்து விளக்குகிறார் ஆஸி. ஜாம்பவான் பிரட் லீ. சிவப்பு நிற பந்தை விட இளஞ்சிவப்பு நிற பந்து பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் ஆகும். அதுவும் பகல்-இரவு போட்டியில் flood lights கீழ் விளையாடும் போது மேலும் ஸ்விங் ஆகும் என்பதால், பேட்டர்களுக்கு இன்னும் கடினமாக இருக்கும் என்கிறார்.

News December 6, 2024

11ஆம் தேதி முதல் கனமழை

image

வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 11ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. குறிப்பாக, வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 12ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யவுள்ளது.

News December 6, 2024

கங்கை நதி குமரிக் கடலை தொட வேண்டும்

image

கங்கை நதி நீரை குமரிக்குக் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க மக்களவையில் MP விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதனை நிறைவேற்றினால் கங்கையில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, தென் மாநிலங்களில் வறட்சியான பகுதிகள் செழிப்படையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இமயமலையில் உருவாகும் கங்கை இந்தியாவில் 11 மாநிலங்களிலும், வங்கதேசத்திலும் 2,500 கி.மீ பாய்கிறது.

News December 6, 2024

கோவா பறந்த கீர்த்தி சுரேஷ்!

image

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பால்ய நண்பரான ஆண்டனி டட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் வரும் 12ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்காக அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கோவா சென்றடைந்தார். இதனை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘KA Wedding’ என்ற ஹேஷ்டேக்குடன் ‘And it begins’ என்ற தலைப்புடன் இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்.

error: Content is protected !!