news

News December 27, 2024

மன்மோகன் பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவு(2/2)

image

1991னில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக, இளைஞர்களுக்கு IT, உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் அதிக வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் போட்டி அதிகரித்து, குறைந்த விலையில் நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைத்தன. நடுத்தர வர்க்க வருமானம் அதிகரித்து நுகர்வு அதிகரித்தது. அவரது சீர்திருத்தங்கள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை முக்கிய இடத்திற்கு எடுத்து சென்றது.

News December 27, 2024

மன்மோகன் பொருளாதார சீர்திருத்தத்தின் விளைவு (1/2)

image

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1991இல் 3% இருந்தது. ஆனால் மன்மோகனின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு அது 6-7% ஆனது. இது சர்வதேச கடன் வழங்குபவர்களான IMF, WBக்கின் நம்பிக்கையை அதிகரித்தது கடன் உதவி அளித்ததால் நிலைமை சீரானது. இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை அதிகரித்து, நிதி நெருக்கடியில் இருந்து மீண்டது. இந்தியாவின் அன்னிய கையிருப்பு 2 ஆண்டுகளில் 1 Billionலிருந்து 10 Billion உயர்ந்தது.

News December 27, 2024

புத்தரின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

image

▶நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.
▶மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
▶உலகம் ஒரு கண்ணாடி போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த எண்ணங்களின் உண்மையான பிரதிபலிப்பைக் காட்டுகிறது. உங்கள் மனதை ஆளுங்கள் இல்லையெனின் அது உங்களை ஆளும்.
▶உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே ட்ஜ்ஜ்ஜ்க்

News December 27, 2024

ஈடு செய்ய முடியாத இழப்பு: EPS

image

மன்மோகன் சிங் மறைவுக்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும், திறமையான நிர்வாகியாகவும், ஒரு முன்மாதிரியான அரசியல்வாதியாகவும், அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

News December 27, 2024

மன்மோகனின் பொருளாதார சீர்திருத்தங்கள்(2/2)

image

ஏற்றுமதியை ஊக்குவிக்க 1991இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ரூபாய் மதிப்பு சரிவினால் வெளிநாட்டு சந்தையில் IND பொருட்களுக்கான தேவை அதிகரித்து. கார்ப்பரேட் வரிகளை உயர்த்தப்பட்டது. LPG மற்றும் சர்க்கரைக்கான மானியம் குறைக்கப்பட்டது. IMF உதவி பெற தங்கம் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி பல புரட்சிகரமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

News December 27, 2024

மன்மோகனின் பொருளாதார சீர்திருத்தங்கள்(1/2)

image

1991இல் IND கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது. அந்நிய கையிருப்பு குறைந்துள்ளது. கடன்கள் அதிகரித்து, ரூபாய் மதிப்பு சரிந்தது. அப்போது பிரதமர் பி.வி.நரசிம்மராவ் நிதியமைச்சராக இணைந்த மன்மோகன், Liberalization (வணிகங்களின் கட்டுப்பாடுகளை நீக்குதல்), Globalization (பன்னாட்டு நிறுவனங்களை அன்னிய முதலீட்டிற்கு அனுமதித்தல்), Privatization (பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பு) ஊக்குவிக்கப்பட்டன.

News December 27, 2024

முபாசா: 7 நாள் வசூல் இவ்வளவா?

image

முபாசா: தி லயன் கிங் படம் டிச.20-ல் வெளியானது. தெலுங்கில் மகேஷ் பாபு, ஹிந்தியில் சாரூக் கான், தமிழில் அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்த இந்த அனிமேஷன் படம், கிறிஸ்துமஸ் விடுமுறை தினங்களில் பேமிலிகளின் விருப்பத் தேர்வாக அமைந்தது. 7 நாள்கள் முடிவடைந்த நிலையில் ரூ.63.25 கோடி வசூல் செய்துள்ளது. ஜன.1-க்குள் ரூ.100 கோடி தொட்டுவிடும் எனக் கணிக்கப்படுகிறது.

News December 27, 2024

மன்மோகன் குடும்ப பற்றி தெரியுமா?

image

மன்மோகன் 1958 இல் பேராசிரியரும், எழுத்தாளருமான குர்ஷரன் கவுரை மணந்தார். இவர்களுக்கு உபிந்தர், தமன், அம்ரித் சிங் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். உபிந்தர் அகோலா பல்கலைக்கழக டீன், 6 புத்தகங்கள் எழுதியுள்ளார். தமன் பல நாவல்கள் எழுதியுள்ளார். அவரது கணவர் அசோக் (IPS) NATGRIDஇன் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். அம்ரித் ACLUஇல் வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.

News December 27, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 130 ▶குறள்: கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. ▶பொருள்: சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.

News December 27, 2024

ஆம்.. அவர் பலவீனமான பிரதமர் அல்ல

image

2014இல் மன்மோகனை பலவீனமான பிரதமர் என பாஜகவினர் கடுமையாக விமர்சித்தனர். அப்போது அவர், “நான் பலவீனமான பிரதமர் அல்ல. சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை மிகவும் அன்பாக நினைவில் கொள்ளும்” என்றார். RTI, வேலைவாய்ப்பு, அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், கல்வி உரிமைச் சட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், தேசிய சுகாதாரத் திட்டம், 10% GDP என்ற சாதனை மூலம் தான் பலவீனமான பிரதமர் அல்ல என்பதை நிரூபித்தவர்.

error: Content is protected !!