news

News December 7, 2024

இந்தியா கூட்டணிக்கு ஷாக் கொடுத்த மம்தா

image

நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து இந்தியா கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாக தகவல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் தான், வாய்ப்பு வழங்கப்பட்டால், கூட்டணியின் தலைமையே ஏற்று சரியாக வழிநடத்துவேன் என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். கூட்டணியை உருவாக்கியது தானே என குறிப்பிட்டு, அதற்கு தற்போது தலைமை ஏற்றிருப்பவர்களால் சரியாக வழிநடத்த முடியவில்லை என்றால், தாம் என்ன செய்வது என வினவியுள்ளார்.

News December 7, 2024

UAN எண்ணை இணைக்க டிச.15 வரை அவகாசம்

image

EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க டிச.15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ELI எனப்படும் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், புதிதாக வேலைக்கு செல்வோரை ஊக்குவிக்கவும், உற்பத்தி துறையை மேம்படுத்தவும், PF நிதிக்கு மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இப்பலனை பெற பயனர்கள் UAN எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயமாகும்.

News December 7, 2024

ரிலீஸுக்கு தயாரான ‘விடுதலை 2’

image

‘விடுதலை 2’ படத்தின் BGM பணிகள் நிறைவடைந்தன. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், BGM பணிகளை இளையராஜா நிறைவு செய்துள்ளார். இதற்கு இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவருக்கு நேரில் நன்றி தெரிவித்தனர்.

News December 7, 2024

பெட்ரோல் விலை உயர்வு

image

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் அதிகரித்து ₹101.23ஆக விற்பனையாகிறது. நேற்று லிட்டர் ₹100.80க்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்று லிட்டர் ₹92.39க்கு விற்பனையான நிலையில் இன்று 42 காசுகள் அதிகரித்து ₹92.81ஆக விற்பனையாகிறது.

News December 7, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) Climatology என்றால் என்ன? 2) CCI என்பதன் விரிவாக்கம் என்ன? 3) டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? 4) இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் யார்? 5) கவி ராட்சசன் என போற்றப்பட்ட புலவர் யார்? 6) ரப்பரை பதனிட உதவும் தனிமம் எது? 7) சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கோள் எது? 8) இந்தியாவில் முதல் CENSUS எந்த ஆண்டு கணக்கிடப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News December 7, 2024

₹2,600 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

image

அமெரிக்காவில் ₹2,600 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பேசும் பொருளாக மாறியுள்ளது. 2022ல் புளோரிடாவின் கேளிக்கை பூங்காவில் Free Fall Towerல் இருந்து தவறி விழுந்து டயர் சாம்ப்சன்(14) என்பவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில், பூங்கா நிர்வாகம் பெற்றோர்கள் இருவருக்கும் தலா ₹1,312 கோடி இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News December 7, 2024

டிரம்ப் எச்சரிக்கைக்கு பணிந்த RBI?

image

டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என RBI ஆளுநர் சக்திகாந்ததாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டாலர் பயன்பாட்டை குறைக்க BRICS நாணயத்தை உருவாக்கும் முனைப்பில் அதன் உறுப்பு நாடுகள் திட்டமிட்டு வந்தன. இதனிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வான டிரம்பு, BRICS உறுப்பு நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

News December 7, 2024

மந்திரத்தை சொல்லு, இல்லனா செருப்பால அடிப்பேன்

image

மத நம்பிக்கை மனதில் இருக்கலாமே தவிர, பிறரிடம் திணிப்பதை எவ்வாறு ஏற்பது. ம.பி.யில் சிறுவன்(16) ஒருவன் 6,9,11 வயதுடைய 3 குழந்தைகளை மந்திரம் சொல்லுங்கள் என நிர்பந்தித்து செருப்பால் அடித்துள்ளான். தகாத வார்த்தையாலும் திட்டி, உறவினர்களின் தொலைபேசி எண்களை கேட்டும் மிரட்டியுள்ளார். இது குறித்து அச்சிறுவன் மீதும், வீடியோ எடுத்த சிறுவன்(14) மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னவென்று சொல்வது…

News December 7, 2024

சவுதியில் இந்த சீன் வராது..!

image

சவுதியில் ‘புஷ்பா 2’ படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு உலகம் முழுதும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், ரன்னிங் டைம் 3 மணிநேரம் 20 நிமிடமாக இருப்பது குறையாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில், கலாச்சார அடிப்படையில் ’கங்கம்மா ஜத்தாரா’ என்ற காட்சியை அந்நாட்டின் சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால், அங்கு ரன்னிங் டைம் 3 மணி நேரம் ஒரு நிமிடமாக உள்ளது.

News December 7, 2024

டிரம்புக்காக பணத்தை தண்ணியாக செலவழித்த மஸ்க்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்காக எலான் மஸ்க் ₹2,120 கோடி செலவு செய்துள்ளார். பிரசார செலவு தொடர்பான செலவின விவரங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல் பிரசார செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் பல கோடியை மஸ்க் அள்ளி வீசியுள்ளார். தற்போது மஸ்கின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!