India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் INDIA கூட்டணி வலுவாக இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் ஆதவ் அர்ஜுனா பேசியதை சுட்டிக்காட்டிய அவர், ஒரு புறம் விஜய்யுடன் மேடையை பகிர்ந்து கொண்டு, மறுபுறம் CM ஸ்டாலினுடன் கூட்டணியிலும் உள்ளதாகவும், திருமாவின் இரட்டை நிலைப்பாடு அம்பலப்பட்டதாகவும் சாடியுள்ளார். அத்துடன், விரைவில் திருமாவின் உண்மை முகம் வெளிப்படும் என்றும் கூறியுள்ளார்.
IPO வெளியிட அனுமதி கேட்டு LG எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் செபியிடம் விண்ணப்பித்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனத்தின் 10.18 கோடி பங்குகள், அதன் தாய் நிறுவனமான தென்கொரியாவைச் சேர்ந்த LG எலக்ட்ரானிக்ஸ் வசமுள்ளது. இந்த பங்குகளை தற்போது IPO மூலம் இந்திய சந்தையில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ₹15,000 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அஜித்தின் ஆரம்பம் படத்தின் “ஸ்டைலிஷ் தமிழச்சி” பாடலின் மூலம் தமிழில் கவனம் பெற்றவர் அக்ஷரா கவுடா. இவர் விஜய்யுடன் துப்பாக்கி, இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அவர், “என் கணவர் போலவே தோற்றமளிக்கும் குழந்தையை அவருக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
எங்க பார்த்தாலும், மக்கள் கையில் போனுடன் ரீல்ஸ் தான் பாத்துட்டு இருக்காங்க. இதுவும் ஒரு வகை Addiction தான். அதிக நேரம், ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறது லக்னோவின் ஜார்ஜ் மெடிக்கல் கல்லூரி. அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது கழுத்து, தோள், இடுப்பு மற்றும் கைகளில் ரத்த ஓட்டத்தை பாதிக்குமாம். இதில், 15 – 30 வயதுடையவர்களே அதிகம் என்பது கூடுதல் தகவல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 6ஆம் தேதி மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 14 மாவட்டங்களில் 1501 கிராமங்கள் மற்றும் 1.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, ஒரு லட்சத்து 69 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. நாவலை தழுவி உருவாகும் இப்படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார். இதனிடையே, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘சூர்யா 45’ படத்தில் அவர் நடித்து வருகிறார்.
விமானத்தில் உடலுறவு கொண்ட ஜோடியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. பாங்காக்கில் இருந்து SWISS சென்ற விமானத்தில், முதல் வகுப்பில் பயணித்த அந்த ஜோடி காக்பிட் அருகே நைசாக நகர்ந்து உடலுறவில் ஈடுபட்ட காட்சிகளை வர்ணனை சேர்த்து விமானக் குழுவினரே வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, பயணிகளின் தனிப்பட்ட வீடியோவை கசிய விட்டதற்காக, SWISS இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குழுவினர் விசாரணைக்கு ஆளாகியுள்ளனர்.
‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு ஜெய்ப்பூர் சென்றுள்ளது. இந்த படப்பிடிப்பில் கேமியோ ரோலில் நடிக்கவுள்ள பாலிவுட் நடிகர் அமீர் கான் பங்கேற்கிறாராம்.
இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2ஆம் நாளான இன்று அடிலெய்ட் மைதானத்தில் உள்ள 53,500 டிக்கெட்களும் விற்று தீர்ந்துள்ளன. பகல்-இரவு(பிங்க் பால்) ஆட்டம் மற்றும் வார இறுதி நாள் என்பதால் ஸ்டேடியத்தில் ரசிகர் கூட்டம் நிரம்பி வழிகிறது. முதல் நாளான நேற்றும் 50,186 ரசிகர்கள் ஆட்டத்தை கண்டு ரசித்தனர்.
நீங்க ஜியோ போன் வச்சிருக்கீங்களா இந்த ஆஃபர் உங்களுக்கு தான். ரூ 895க்கு 336 நாட்கள் வேலிடிட்டி . மாதம் 28 நாள்கள் என 12 மாதங்களுக்கு சுழற்சி முறையில் செல்லுபடியாகும். அதைப்போல இலவச வரம்பற்ற அழைப்பு. மாதம் 2GB என மொத்தம் 24GB டேட்டா, ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் JioTV, JioCinema, JioCloud இலவச சப்ஸ்கிரிப்ஷனையும் பெற முடியும்.
Sorry, no posts matched your criteria.