news

News December 27, 2024

அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து

image

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று <<14991566>>அதிமுக<<>> சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் அனைத்து மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார்.

News December 27, 2024

இன்னும் 4 நாள் தான் இருக்கு..!

image

ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கான முகாம் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக பாக்டீரியா மூலமாகப் பரவும் நிமோனியா மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 5 வகையான நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க பெண்டாவேலன்ட் தடுப்பூசி போடப்படவுள்ளது. PHCs, GHs உள்ளிட்ட 11,000 இடங்களில் நடைபெற உள்ள முகாமை பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News December 27, 2024

நேர்மைக்கும், பண்பிற்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்

image

தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் மிகவும் நேர்மையான, அடக்கமான வாழ்க்கையை மன்மோகன் சிங் வாழ்ந்து காட்டியுள்ளார். யாரையும் அவமதிக்காமல், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தாமல் பொது வாழ்வில் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக விளங்கினார். பொருளாதாரம், அரசியல் நிர்வாக விவகாரங்கள் பற்றிய அவரின் விரிவான புரிதலும், அவர் ஆற்றும் உரைகளும் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றன.

News December 27, 2024

பாஜக ஆர்ப்பாட்டங்கள் ரத்து: அண்ணாமலை

image

தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த பாஜக ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்று நடக்க இருந்த அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.

News December 27, 2024

பாகிஸ்தானில் உள்ள மன்மோகன் சிங் வீடு

image

பாகிஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் பெயர் ‘மன்மோகன் சிங் ஆண்கள் பள்ளி’ என்றால் நம்ப முடிகிறதா?. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு 1932இல் காஹ் கிராமத்தில் பிறந்த மன்மோகன், அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்தார். அவரது குடும்பத்தினர் வாழ்ந்த வீடு தற்போதும் அங்கு உள்ளது. 2008இல் டெல்லி வந்த அவரது பள்ளி நண்பர், ராஜா முகமது அலி, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ஒருமுறை காஹ் வர வேண்டுகோள் விடுத்தார்.

News December 27, 2024

ரூ.15 லட்சம் வரை வருமானம்.. பட்ஜெட்டில் வரி குறைப்பு?

image

ஆண்டுக்கு ரூ.3 லட்சம்- ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு மத்திய பட்ஜெட்டில் வரி குறைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. இதில் ரூ.10 லட்சம் வரை வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரூ.15 லட்சம் வரை வரி குறைப்பு செய்யப்பட இருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

News December 27, 2024

மன்மோகன் சிங் பெற்ற விருதுகள்!

image

2002 சிறந்த பார்லிமென்டேரியன் விருது,
2005 USன் டைம் இதழின் டாப் 100 செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இடம்,
1996 கெளரவ டாக்டர் பட்டம், டெல்லி பல்கலை. 1993, 1994 சிறந்த நிதியமைச்சருக்கான ஆசியா மணி விருது, யூரோமணி விருது, 1987 பத்ம விபூஷண், 1956 கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆடம் ஸ்மித் பரிசு,1955 சிறந்த மாணவருக்கான கேம்பிரிட்ஜில் ரைட்ஸ் விருது 14 கெளரவ டாக்டர் பட்டங்கள்.

News December 27, 2024

அரசை குறை கூறினால் அது நியாயமே இல்லை: MS பாஸ்கர்

image

கல்வி கற்க செல்லும் இடத்தில் காதலியுங்கள், மறைவிடம் செல்லுங்கள் என பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா என்று குணச்சித்திர நடிகர் MS பாஸ்கர் கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், “ஒவ்வொரு நபருக்கும் ஒரு கான்ஸ்டபிளை போட்டா பாதுகாப்பு தர முடியும்? இதில் அரசை குறை கூறுவது நியாயமே இல்லை” என்றார்.

News December 27, 2024

8 மடங்கு மோசடி அதிகரிப்பு.. ரூ.21,397 கோடி அம்பேல்

image

வங்கிகளில் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.21,397 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2023இல் இதே காலகட்டத்தில் ரூ.23,863 கோடி மோசடி நடந்ததுள்ளது. இது 2024இல் ரூ.13,175 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இது அதிகரித்துள்ளது. மொத்தம் 18,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 8 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

News December 27, 2024

2 வீடு, ஒரு மாருதி 800 கார்: 10 ஆண்டு பிரதமரின் முழு சொத்து

image

பிரதமராக 10 ஆண்டுகள் (2004-14) பதவி வகித்த மன்மோகன் சிங், 2018ல் ராஜ்யசபாக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, ​​அவரிடம் ₹15.77 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டார். டெல்லி, சண்டிகரில் 2 FLAT, மாருதி 800 கார், SBI, தபால் வங்கிகளில் டெபாசிட் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், தனக்கு கடன் இல்லை என குறிப்பிட்டது அவரின் நிதி ஒழுக்கத்திற்கான சான்றாகும்.

error: Content is protected !!