news

News December 27, 2024

“ரியல் பாரத ரத்னாவை கௌரவியுங்கள்”

image

மறைந்த Ex PM மன்மோகன் சிங்கிற்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் வலுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தத்தில் முக்கிய பங்கு வகித்த மன்மோகன் சிங், உலக நாடுகள் இந்தியாவை உற்றுநோக்க காரணமாக இருந்த உன்னத மனிதர் எனப் புகழாரம் சூட்டும் நெட்டிசன்கள், அவர் விண்ணுலகில் கலப்பதற்குள் விருதை அறிவித்து கவுரவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News December 27, 2024

அப்போ…இதுக்கு எவ்வளவு வரி சொல்லுங்க?

image

பாப்கார்ன் மீதான வரிவிதிப்பு தொடர்ந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள், பிரிண்ட் செய்யப்படாத பாப்கார்ன் 5%, பிராண்டட் பாப்கார்ன் 12%, கேரமல் பாப்கார்னுக்கு 18% GST ஈர்க்கிறது. எல்லாம் சரி, அப்போது பெரிய திரையரங்குகளில் விற்கப்படும் கேரமல் உப்பு பிராண்டட் பாப்கார்னுக்கு எவ்வளவு வரி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகிறார்கள்? எவ்வளவு இருக்கும்….

News December 27, 2024

ஆண்களை விட பெண்களே அதிகம்

image

ஜனநாயக கடமையாற்றுவதில் தாங்கள் தான் பெஸ்ட் என்பதை பெண்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தல் புள்ளி விபரங்களை ECI வெளியிட்டுள்ளது. அதில், 64.64 கோடி பேர் வாக்களித்துள்ளதாகவும், ஆண்கள் 65.6%, பெண்கள் 65.8% எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்கள் நடந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய வாக்காளர்கள் 1.19 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

News December 27, 2024

நூலிழையில் உயிர் தப்பிய ‘WHO’ இயக்குநர்

image

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ‘WHO’ அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் (Tedros Adhanom) நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். ஏமன் தலைநகர் சனா ஏர்போர்ட்டில், விமானம் ஏறுவதற்காக காத்திருந்த குழுவினர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், ஒரு பயணி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா (UN), பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

News December 27, 2024

BREAKING: தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை தாண்டியது

image

1 சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,125க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ரூ.25 அதிகரித்து ரூ.5,150 ஆக விற்பனையாகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.57,200 ஆக விற்கப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே இன்றும் விற்கப்படுகிறது.

News December 27, 2024

இன்று OTTல் வெளியாகும் படங்கள்

image

கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறையை கொண்டாட நெட்ஃபிளிக்ஸ் OTTல் இன்று டிச. 27, RJ பாலாஜியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ‘சொர்க்கவாசல்’, RRR படம் எப்படி உருவானது என்பதை சொல்லும் ஆவணப்படமான ‘RRR: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்’, ஹிந்தியில் வெளியான கார்த்திக் ஆர்யனின் ‘பூல் புலையா’ஆகியவை வெளியாகியுள்ளன. கயல் ஆனந்தி நடித்த ஒயிட் ரோஸ் படம் இன்று சிம்பிளி சவுத் OTTல் வெளிவந்துள்ளது. உங்க choice எது?

News December 27, 2024

SPECIAL CLASSES? தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

image

அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதேபோல், தனியார் பள்ளிக்கல்வித் இயக்ககம் சார்பில் தனியார் பள்ளிகளுக்கும் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News December 27, 2024

சகாப்தத்தின் முடிவு: கமல் இரங்கல்

image

மன்மோகன் மறைவு, ஒரு சகாப்தத்தின் முடிவு என்று கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா தனது தலைசிறந்த அரசியல்வாதிகள் மற்றும் அறிஞர்களில் ஒருவரை இழந்துவிட்டது எனவும், அவரது பாரம்பரியம் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறந்த மகன்களில் ஒருவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தேசத்துக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கமல் கூறியுள்ளார்.

News December 27, 2024

அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து

image

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று <<14991566>>அதிமுக<<>> சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் அனைத்து மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார்.

News December 27, 2024

இன்னும் 4 நாள் தான் இருக்கு..!

image

ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கான முகாம் வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 11 வகை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக பாக்டீரியா மூலமாகப் பரவும் நிமோனியா மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 5 வகையான நோய்களில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க பெண்டாவேலன்ட் தடுப்பூசி போடப்படவுள்ளது. PHCs, GHs உள்ளிட்ட 11,000 இடங்களில் நடைபெற உள்ள முகாமை பெற்றோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

error: Content is protected !!