news

News December 27, 2024

வீல் சேரில் சென்று வாக்களித்த மன்மோகன் சிங்!

image

தள்ளாத வயதிலும் நாட்டிற்காக அயராது உழைத்த நீங்கள் எப்போது கிரேட் சார் என்ற புகழாரத்துடன் தனது 90 வயதில் வீல் சேரில் சென்று RSஇல் வாக்களித்த மன்மோகன் சிங்கின் போட்டோ இணையத்தை ஆட்கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா மீது 2023இல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இதில் வாக்களிக்க Ex PM மன்மோகன் சிங் வீல்சேரில் சென்று தனது வாக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2024

அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று முதல் ஜன.1ம் தேதி வரை 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த 7 நாள்களுக்கும் அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாது. இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

News December 27, 2024

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதா?

image

ரஷ்ய ஏவுகணை தாக்கியதில்தான் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 38 பயணிகளின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து குறித்து அந்நாட்டின் நிபுணர் குழு விசாரித்து வருகிறது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் பதிவான தகவல்களை வைத்து விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாக்குதல் யூகங்களை ரஷ்யா மறுத்துள்ளது.

News December 27, 2024

மன்மோகன் சிங் மறைவு: ரஜினிகாந்த் உருக்கம்

image

தலைசிறந்த பொருளாதார வல்லுநர்; நல்ல மனிதரை இழந்துவிட்டோம் என மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மன்மோகன் சிங்கை இழந்துவாடும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் கூறினார்.

News December 27, 2024

வார இறுதி: நாளை முதல் 586 கூடுதல் பேருந்துகள்

image

நாளையும், நாளை மறுநாளும் வார விடுமுறை ஆகும். இதனாலும் ஜனவரி 1 புத்தாண்டு கொண்டாடவும் சிலர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் 586 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, தி.மலை, கும்பகோணம், மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு 485 பேருந்துகள் இயக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. இத்தகவலை பகிருங்கள்.

News December 27, 2024

காய்கறிகள் விலை குறைந்தன

image

சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று பெரிய வெங்காயம் கிலோ ரூ. 15 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று ரூ.10ஆக குறைந்துள்ளது. 2ஆம் தர தக்காளி ரூ.12ஆக நேற்று விற்பனையானது. இன்று அந்த தக்காளி ரூ.10ஆக சரிந்துள்ளது. முதல்தர இஞ்சி ரூ.450இல் ரூ.180 குறைந்துள்ளது. கருணைக் கிழங்கு விலை ரூ.60இல் இருந்து ரூ.35ஆகவும், காெடை மிளகாய் விலை ரூ.30இல் இருந்து ரூ.20ஆகவும் சரிந்துள்ளது.

News December 27, 2024

48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன்: அண்ணாமலை

image

TNல் பெண்களின் மீதான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ஆட்சியாளர்கள் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் போராட்டம் இது கிடையாது என்று விளக்கமளித்த அவர், தவவேள்வியாக இப்போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும், வருங்காலத்தில் இது தீவிரமாகும் என்றும் கூறியுள்ளார். 48 நாட்கள் விரதம் இருந்து அரசியல் செயல்களில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 27, 2024

பொதுப்பணி துறையில் 760 காலிப்பணியிடங்கள்

image

தமிழக அரசின் பொதுப்பணி துறை, தென் மண்டலத்தின் தொழிற்பழகுநர் வாரியத்தின் ஒத்துழைப்புடன் தொழிற்பயிற்சி வழங்கவுள்ளது. ஓராண்டு தொழிற்பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் டிச.31-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள்: 760 கல்வித்தகுதி: UG Degree, BE (Civil, ECE, Arch), Diploma. வயது வரம்பு: 18-28. உதவித்தொகை: ₹8,000 – ₹9,000. கூடுதல் தகவலுக்கு nats.education.gov.in சென்று பார்க்கவும்.

News December 27, 2024

மக்களவைத் தேர்தலில் 10.58 லட்சம் வாக்குகள் நிராகரிப்பு!

image

நடந்து முடிந்த 18ஆவது மக்களவைத் தேர்தலில் 10.58 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், பதிவான 42.81 லட்சம் தபால் வாக்குகளில் 5.35 லட்சம் வாக்குகள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் 5.22 லட்சம் வாக்குகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News December 27, 2024

2025ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு

image

2025ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டு. 2025ஆம் ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.16ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழு அறிவித்துள்ளது. அவனியாபுரத்தில் ஜன. 14ம் தேதியும், பாலமேட்டில் 15ம் தேதியும் நடைபெறும் என்றும் கூறியுள்ளது. SHARE IT.

error: Content is protected !!