news

News December 27, 2024

“சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைக்கின்றனர்”

image

சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒருவகை டிரெண்டாக மாறி வருவதாக ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சொர்க்கவாசல் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, தடைவிதிக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் தடைவிதிக்க ஐகோர்ட் கிளைக்கு அதிகாரமில்லை எனக்கூறி, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

News December 27, 2024

அகதிகள் முகாம் கொடுத்த ‘முத்து’ மன்மோகன் சிங்!

image

பொருளாதார வல்லுநராக உலகறியும் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை பெரும் இன்னல்களைக் கடந்து வந்துள்ளது. பள்ளியே இல்லாத கிராமத்தில் பிறந்து மண்ணெண்ணெய் விளக்கொளியில் படித்தவர். 1947இல் இந்தியா – பாக்., பிரிவினைக்குப் பிறகு குடும்பத்தோடு இந்தியா வந்த அவர், ஹல்த்வானி அகதிகள் முகாமிலிருந்துள்ளார். படிப்பில் படு சுட்டியாக இருந்த அவருக்குப் பல வெளிநாட்டு யுனிவர்சிட்டிகள் ஸ்காலர்ஷிப் கொடுத்து கவுரப்படுத்தின.

News December 27, 2024

BGT 4வது டெஸ்ட்: 164/5 ரன்களில் தவிக்கும் இந்தியா

image

இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணியை விட 310 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜெய்ஸ்வால் 82, ரோஹித் 3, கே.எல்.ராகுல் 24, கோலி 36, ஆகாஷ் தீப் 0 எடுத்து வெளியேறினர். களத்தில் பண்ட் 6, ஜடேஜா 4 ரன்களுடன் இருக்கிறார்கள். கைவசம் இன்னும் 5 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில், பாலோ ஆனை தவிர்க்க இந்தியா 275 ரன்களை கடக்க வேண்டும். நாளை ஜடேஜா – பண்ட் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. மீளுமா இந்தியா?

News December 27, 2024

“96” 2ம் பாகத்தின் கதை இதுதானா?

image

“96” 2ம் பாகம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. சிங்கப்பூர், மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறும் எனப்படும் நிலையில், படத்தின் கதை இது தான் என செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் சிங்கப்பூரில் கல்யாணமாகி செட்டிலான ஜானு (திரிஷா), சென்னை வருவார். 2ம் பாகம்m சிங்கப்பூரில் என்பதால் ராம் (விஜய் சேதுபதி) ஜானுவை காண அங்கு செல்கிறாரோ? என கூறப்படுகிறது. ஒருவேளை இருக்குமோ..

News December 27, 2024

பணத்தை மிச்சப்படுத்த சாக்லேட் மட்டுமே சாப்பிட்டவர்

image

பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகள் தமன் சிங் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலை. கல்விக் கட்டணம், செலவுகள் ஆண்டுக்கு 600 பவுண்டுகள் என்ற நிலையில், பஞ்சாப் பல்கலை. 160 பவுண்டுகள் வழங்கியுள்ளது. இதனால் தந்தை பல நேரங்களில் பணத்தை மிச்சப்படுத்த, சாக்லேட் மூலம் பசியை தீர்த்து கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.

News December 27, 2024

ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: வழக்கில் தீர்ப்பு

image

சென்னை பரங்கிமலையில் 2022இல் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு காெலை செய்த வழக்கில் கைதான நபரை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாணவி சத்யபிரியா தன்னை காதலிக்காததால் ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார். மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் சதீசை குற்றவாளியாக அறிவித்து, தண்டனை விவரம் வருகிற 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News December 27, 2024

விடாமுயற்சி Single: இன்னும் 1 மணி நேரத்தில்…

image

எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கும் நிலையில், அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. மகிழ்திருமேனி இயக்கியுள்ள இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், இன்று படத்தின் Single “Sawadeeka” மதியம் 1 மணிக்கு வெளிவரவுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை அந்தோணிதாசன் பாட, அறிவு எழுதியிருக்கிறார். படத்தில் அர்ஜூன், திரிஷா, ரெஜினா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

News December 27, 2024

வீல் சேரில் சென்று வாக்களித்த மன்மோகன் சிங்!

image

தள்ளாத வயதிலும் நாட்டிற்காக அயராது உழைத்த நீங்கள் எப்போது கிரேட் சார் என்ற புகழாரத்துடன் தனது 90 வயதில் வீல் சேரில் சென்று RSஇல் வாக்களித்த மன்மோகன் சிங்கின் போட்டோ இணையத்தை ஆட்கொண்டுள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா மீது 2023இல் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இதில் வாக்களிக்க Ex PM மன்மோகன் சிங் வீல்சேரில் சென்று தனது வாக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2024

அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நேற்று முதல் ஜன.1ம் தேதி வரை 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த 7 நாள்களுக்கும் அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாது. இதையொட்டி, நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளது.

News December 27, 2024

அஜர்பைஜான் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதா?

image

ரஷ்ய ஏவுகணை தாக்கியதில்தான் அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. 38 பயணிகளின் உயிரைப் பறித்த இந்த கோர விபத்து குறித்து அந்நாட்டின் நிபுணர் குழு விசாரித்து வருகிறது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் பதிவான தகவல்களை வைத்து விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாக்குதல் யூகங்களை ரஷ்யா மறுத்துள்ளது.

error: Content is protected !!