news

News December 27, 2024

சொன்னது 6.. அடித்ததோ 8 .. அசத்தல் அண்ணாமலை

image

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று தன்னைத் தானே 6 முறை சாட்டையால் அடிக்கப் போவதாக கூறியிருந்தார். பொதுவாக அரசியல்வாதிகள் பேட்டியின்போது ஏதாவது கூறிவிட்டு பிறகு மழுப்பி விடுவர். ஆனால் அண்ணாமலையோ ஒருபடி மேலே சென்று, 6 முறைக்கு பதிலாக, 8 முறை அடித்துக் கொண்டார். சமூக வலைதளங்களில் பாஜகவினர் இதை குறிப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

News December 27, 2024

Follow Onஐ தவிர்க்குமா இந்தியா?

image

டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் ஸ்கோரை விட 200 ரன்கள் குறைவாக முதல் இன்னிங்சில் ஒரு அணி ஆட்டமிழந்தால், அந்த அணி பாலோ ஆன் ஆட அழைக்கப்படும். அப்படி நடைபெற்று வரும் 4வது BGT டெஸ்டில் இந்திய அணி இந்த போட்டியில் 275 ரன்களை எடுக்க வேண்டும். தற்போது 164/5 எடுத்து இந்தியா தடுமாறும் நிலையில், நாளை பாலோ ஆனை தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா – பண்ட் ஆகியோர் இந்தியாவை காப்பாற்றுவார்களா?

News December 27, 2024

ராகுலை பின்பற்றுகிறாரா அண்ணாமலை?

image

தெலங்கானாவின் சங்காரெட்டியில் 2022இல் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ராகுல் சாட்டையை வாங்கி ஒருமுறை உடலில் அடித்தார். இது நடைபெற்று 2 ஆண்டுகள் கழித்து, அண்ணா பல்கலை. கழக விவகாரத்தில் அண்ணாமலை இன்று சாட்டையால் அடித்துக் காெண்டார். தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த சாட்டையடி வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ராகுலை அண்ணாமலை பின்பற்றுகிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News December 27, 2024

ஜெயக்குமார் மீது வழக்குப் பாய்ந்தது

image

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை அதிமுகவினர் நேற்று தடையை மீறி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்பாேது அதிமுக EX அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டாேரை போலீசார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். இந்நிலையில், கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 900 பேர் மீது பாேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News December 27, 2024

இன்றே கடைசி.. ரயில்வேயில் 1,785 அப்ரன்டிஸ் வேலை

image

ரயில்வேயில் காலியாக உள்ள 1,785 அப்ரன்டிஸ் வேலைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு கல்வித்தகுதியாக ITI, 10ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக 1.1.2025-ன் படி, 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு www.rrcser.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

News December 27, 2024

கோலியை கடுமையாக சாடிய AUS ஊடகங்கள்

image

விராட் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் மோசமாக விமர்சித்துள்ளன. கான்ஸ்டஸ் உடனான மோதலை குறிப்பிட்டு, ஒரு இளைஞனின் கனவு டெஸ்ட் அறிமுக ஆட்டத்தில் மோசமாக நடந்து கொண்டதாக, ‘CLOWN KOHLI’ என ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன. ஆஸி. ஊடகங்களின் இந்த செய்தி தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை எனவும், இதுபோன்ற சூழலில் இந்திய ரசிகர்கள் நமது வீரர்களுடன் நிற்க வேண்டும் எனவும் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

News December 27, 2024

காலம் பூரா இனி செருப்பு போட முடியாது: RSB

image

அண்ணாமலையால் இனி காலம் முழுவதும் காலணி அணிய முடியாது என R.S.பாரதி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலை., சம்பவத்தை கண்டித்து, சாட்டையடி போராட்டம் நடத்தியது கேலிக்கூத்தானது எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழும் சம்பவங்களுக்கு, அண்ணாமலை தினமும் சாட்டையால் அடித்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

News December 27, 2024

அல்லு அர்ஜுன் வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

image

வழக்கமான ஜாமின் வழங்கக் கோரி நாம்பள்ளி நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்த நிலையில், பதிலளிக்க போலீசார் அவகாசம் கோரியதால், விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றுடன் அவரின் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், அவரது தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தெலங்கானா உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2024

H.ராஜா சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு

image

பாஜக மூத்த தலைவர் H.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை சென்னை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான அவதூறு கருத்து ஆகிய இரு வழக்குகளில் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்திருந்தாா். இதன் விசாரணையில், சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News December 27, 2024

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

image

வங்கக்கடலில் புதிதாகக் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக MET அறிவித்துள்ளது. இதனால் நாளை (28.12.2024) மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. அதேவேளையில், அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?

error: Content is protected !!