India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
யமுனா நதிக் கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமரிடம் முன்னரே அவர் செல்போனில் பேசியிருந்தார். மேலும். அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் காங். பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேசிய அளவிலான தலைவர்களுக்கு பொதுவான நினைவிடமே உள்ளது. தனி நினைவிடங்களுக்கான கோரிக்கைகளுக்கு காங். தலைமையிலான UPA அரசு தடையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2024ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு பாக்ஸ் ஆஃபிஸில் பெரிதாக கல்லா கட்டாத படங்கள் பல உள்ளன. ரஜினிகாந்தை முன்னிறுத்தி புரோமோஷன் செய்யப்பட்ட ‘லால் சலாம்’அதில் ஒன்று. கமலின் ‘இந்தியன் 2’, சூர்யாவின் ‘கங்குவா’ பற்றி சொல்லவே தேவையில்லை. SKன் ‘அயலான்’ விஷுவல் ட்ரீட்டாக அமைந்தாலும் வசூல் பண்ண தவறியது. விஷாலின் ‘ரத்னம்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ வந்த சுவடே தெரியாமல் போனது.
அண்ணா பல்கலை.,மாணவி வன்கொடுமை வழக்கில், “காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட விவகாரம்” என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. “பெண்கள் ஆண்களுடன் பேசக்கூடாது; அவர் அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது. மாணவர்கள்- மாணவிகள் யாரிடம் பேச வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது. அது அவர்களின் விருப்பம். மாணவிகள் ஆண் நண்பர்களுடனோ, காதலர்களுடனோ பேச தடை செய்யக்கூடாது” எனவும் கூறியுள்ளது.
நாட்டிலேயே கொடி நாளில் அதிகபட்சமாக ₹67.54 கோடி நிதி வசூல் செய்து தமிழகம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ₹7.7 கோடியும், திருவள்ளூரில் ₹6.6 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் ₹64.29 கோடி வசூல் செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் படைவீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து, கொடி நாளில் திரட்டப்படும் நிதி அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்படுகிறது.
கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த விஜய்யை நேரில் சந்தித்து விஜயபிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், விஜயகாந்தின் வெண்கல சிலை ஒன்றையும் அவரது மகன் வழங்கினார். கேப்டன் மீது பற்று கொண்ட விஜய், நாளை அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாக உள்ள 141 CPW பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ATTENDER OPERATOR CHEMICAL PLANT டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு ITI படிப்பு முடித்து அப்ரென்டிசாக பணிபுரிந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.ddpdoo.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து அறியலாம்.
அண்ணா பல்கலை.,மாணவி வன்கொடுமை விவகாரத்தை ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, விசாரணையின்போதே ஒருவர் குற்றவாளிதான் என காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார். கைதான ஞானசேகரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது எப்படி?. ஆணையருக்கு கீழ் விசாரணை அதிகாரி பணிபுரிபவர்; அவர் எப்படி மற்றொருவரை கண்டுபிடிப்பார் (யார் அந்த சார்?) என கேள்விகளை எழுப்பிய ஐகோர்ட், உரிய விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸி.யின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) கௌரவ உறுப்பினராக அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதாக, MCC தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளது. டெஸ்ட்டில் மெல்போர்னில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை (5 டெஸ்ட், 449 ரன்கள்) டெண்டுல்கர் படைத்திருக்கிறார்.
ஒரு காலத்தில் விளையாட சென்ற குழந்தையை வீட்டிற்கு கொண்டுவர தவிப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலான குழந்தைகள் வெளியே செல்வதே இல்லை. மொபைல் போன் இல்லாத காலத்தில் வளர்ந்தவர்களிடம் கேளுங்கள் அது எப்படியான vibe என? கிரிக்கெட், கபடி, கில்லி, கண்ணாமூச்சி, 7 ஸ்டோன்ஸ், பட்டம் விடுவது என நினைவுகள் அதிகம். இதில் சொன்னது சில விளையாட்டுகளே. லிஸ்ட் இன்னும் பெருசு. உங்களுடைய சிறுவயது நினைவுகளை சொல்லுங்க…
சுசுகி மோட்டார்ஸின் Ex தலைவர் ஒசாமு சுசுகி (94), லிம்போமா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுசுகி நிறுவனத்தைத் வழிநடத்திய ஒசாமு, சுசுகி மோட்டார்ஸை வட அமெரிக்கா, ஐரோப்பா வரை தடம் பதிக்கச் செய்தவர். இவர் உருவாக்கிய நடுத்தர மக்களுக்கான ‘மாருதி 800’ இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.