India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்மோகன் மறைவையடுத்து, ‘இந்திய நாட்டிய விழா’ ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக TN சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று முதல் ஜனவரி 1 வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 2ஆம் தேதி முதல் வழக்கம்போல நிகழ்ச்சிகள் நடைபெறும்” எனக் கூறப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழா (டிச.22 – ஜன.20) திட்டமிடப்பட்டிருந்தது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம். பெண்கள் தைரியமாக புகார் தந்தால்தான் குற்றச் செயல்கள் உருவாகாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றார்.
யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. ஆனால், பலருக்கு அது கனவாகவே நின்றுவிடுகிறது. அக்கனவை எட்டிப்பிடிக்க சில டிப்ஸ் ‣ தேவையற்ற ஆடம்பரங்களை தவிர்க்கவும் ‣ கடன் வாங்கி வாழ்க்கை நடத்த திட்டமிடாதீர்கள் ‣ சேமிப்புகளில் கவனம் செலுத்துங்கள் ‣ எப்போதும் அவசரத்திற்கு பணம் சேமிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள் ‣ வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து உழைத்திடுங்கள்.
போதைப்பொருள் பள்ளிகள் வரை வந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவும் அரசுக்கு HC உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை.,யில் உள்ள விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன.
உள் விசாரணை குழுவிடம் எத்தனை புகார்கள் நிலுவையில் உள்ளன. தற்போது வரை நடந்த விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும், போலீஸ், தமிழக அரசு, பல்கலை.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
₹19 மற்றும் ₹29 மதிப்பிலான Data Add-on பேக்குகளுக்கான வேலிடிட்டியை ஜியோ நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது. முன்னதாக, செயல்பாட்டில் இருக்கும் ரீசார்ஜ் திட்டங்களின் வேலிடிட்டி முடியும் வரை, இந்த பேக்குகளின் வேலிடிட்டியும் இருந்து வந்தது. ஆனால் தற்போது, 1ஜிபி டேட்டா வழங்கும் ₹19க்கான வேலிடிட்டி 1 நாள், 2 ஜிபி வழங்கும் ₹29க்கான வேலிடிட்டி 2 நாள்களில் முடிவடையும். இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
தாய்லாந்து ZOOல் பராமரிக்கப்பட்டு வரும் ‘மூ டெங்’ என்ற நீர்யானைக் குட்டிக்கு, கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் புடெரின், கிறிஸ்துமஸ் பரிசாக ₹2.5 கோடியை வழங்கியுள்ளார். அழிந்து வரும் உயிரினமான இந்த வகை நீர்யானையை பராமரிக்க பணம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். US அதிபர் தேர்தலில் டிரம்ப் பெயர் எழுதிய தர்பூசணியை உண்டதால், அவரே அதிபராக தேர்வு செய்யப்படுவார் என கணித்து மூ டெங் பிரபலமானது.
மன்மோகன் சிங்கின் மனித நேயத்தையும், உண்மையான நட்பையும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நினைவுகூர்ந்துள்ளார். 1998ல் தான் சிறையில் அடைக்கப்பட்ட போது, தனது மகனின் கல்வி செலவுக்கு பணம் தருவதாக மன்மோகன் சிங் கூறியதாகவும், ஆனால் மலேசிய அரசுக்கு எதிராக இருக்கும் என அதை பணிவாக மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்தகைய இருண்ட நாட்களில், உண்மையான நண்பராக அவர் தன்னுடன் நின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
2024ல் பல பெரிய ஸ்டார்கள் சறுக்கிய நிலையில், இளம் ஹீரோக்கள் ஸ்கோர் செய்துள்ளனர். தனுஷின் ‘ராயன்’ எதிர்பார்த்ததை விட ஹிட் அடித்தது. SKன் ‘அமரன்’ பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. VJSன் ‘மகாராஜா’ இந்தியா மட்டுமல்லாது, உலகமெங்கும் ராஜநடை போட்டது. இதுபோக, சூரியின் ‘கருடன்’,
மணிகண்டனின் ‘லவ்வர்’, ‘லப்பர் பந்து’ மற்றும் ‘ப்ளூஸ்டார்’ படங்களும் எதிர்பாராத வசூலை குவித்தன.
EX PM மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மத்திய அரசு ஊழியர்கள், நாட்டின் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஏற்கனவே 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒருபகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யமுனா நதிக் கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமரிடம் முன்னரே அவர் செல்போனில் பேசியிருந்தார். மேலும். அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும் காங். பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேசிய அளவிலான தலைவர்களுக்கு பொதுவான நினைவிடமே உள்ளது. தனி நினைவிடங்களுக்கான கோரிக்கைகளுக்கு காங். தலைமையிலான UPA அரசு தடையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.