news

News December 28, 2024

டிசம்பர் 28: வரலாற்றில் இன்று

image

▶1859: IPCயை உருவாக்கிய Lord Macaulay உயிரிழந்தார்.
▶1885: உமேஷ் சந்திர பானர்ஜியின் தலைமையில் INC நிறுவப்பட்டது.
▶1921: வந்தே மாதரம் பாடல் கொல்கத்தா INC கூட்டங்களில் முதன்முறையாக ஒலித்தது.
▶1937: தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பிறந்தநாள்.
▶1958: கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
2023: நடிகர் விஜயகாந்த் உயிரிழந்தார்.

News December 28, 2024

ஜெர்மன் பாராளுமன்றம் கலைப்பு.. பிப்ரவரியில் தேர்தல்

image

ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்டர் நாடாளுமன்றத்தை கலைத்த நிலையில், பிப். 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதுவரை chancellor ஓலாஃப் ஷோல்ஸ் அரசாங்க பொறுப்புகளை கவனிப்பார். சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில் அங்குள்ள கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்தது. 733 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 207 பேர் ஆதரவாகவும், 394 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

News December 28, 2024

சர்வதேச விருது வென்ற ரோஜா மகள்

image

நைஜீரியாவில் நடைபெற்ற விழாவில் நடிகை ரோஜா மகள் அன்ஷு மலிகாவுக்கு Social Impact Global Entrepreneur விருது வழங்கப்பட்டுள்ளது. அன்ஷு 7 வயதில் கோடிங், 17 வயதில் முகத்தை அடையாளம் காணும் போட் மூலம் ஆழமான கற்றல் குறித்த ஆய்வுக் கட்டுரை எழுதினார். அது ஒரு சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது. தி ஃப்ளேம் இன் மை ஹார்ட் என்ற பெயரில் கவிதைகள் எழுதுகிறார். தற்போது இந்தியானா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

News December 28, 2024

ஜோசப் ஸ்டாலினின் பொன்மொழிகள்

image

▶ அரசியல் அதிகாரம் வாக்களிப்பவர்களிடம் தங்கியில்லை, அரசியல் அதிகாரம் வாக்குகளை எண்ணுபவர்களிடம் தங்கியுள்ளது.
▶ கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது.
▶ துப்பாக்கியை விட யோசனைகள் சக்தி வாய்ந்தவை. நாம் நம் எதிரிகளை துப்பாக்கிகளை வைத்திருக்க விடமாட்டோம், நாம் ஏன் அவர்கள் யோசனைகளை வைத்திருக்க விடவேண்டும்.

News December 28, 2024

“வயது முதிர்வால் தடுமாறுகிறார் ரோஹித்”

image

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா வயது முதிர்வு காரணமாக தடுமாறுவதாக இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர், “அது அவர் வழக்கமாக ஆடும் புல் ஷாட் தான். அவர் அவுட் ஆன விதத்தை பார்த்தால் தெரியும் அவரின் கால்கள் வேகமாக நகரவில்லை. உங்களுக்கு 36, 37 வயது ஆகும் போது நீங்கள் சொல்வதை போல் உங்கள் உடல் ஒத்துழைக்காது. மனம் சொல்லும் அனைத்தும் ஆனால் உடல் அதை செய்யாது” என்றார்.

News December 28, 2024

விடைபெறுகிறார் மன்மோகன் சிங்!

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு இன்று காலை 11.45 மணிக்கு டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்குகளை ராணுவ மரியாதையுடன் நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதலில் அவரது உடல் அவரின் இல்லத்தில் இருந்து காங்கிரஸ் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மக்கள் பார்வையிடுவதற்காக சிறிது நேரம் அங்கே வைக்கப்படுகிறது. பின்னர் நிகம்போத் காட் கொண்டு செல்லப்படுகிறது.

News December 28, 2024

2024ல் ஒரு நிமிடத்தில் என்ன நடந்தது?

image

இந்தாண்டு ஒவ்வொரு நிமிடமும் இணையத்தில் நடந்தவற்றின் சராசரி வெளியாகியுள்ளது. தரவுகளின்படி, கூகுளில் 5.9M தேடல்கள், 10.41 லட்சம் கேள்விகளுக்கு Siri பதில் அளித்துள்ளது, YouTube இல் 34.72 லட்சம் பார்வைகள், 18.8M குறுஞ்செய்திகள், 138.9M இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பார்வைகள், 251.1M அஞ்சல்கள், 9 ஆயிரம் பேர் வேலை தேடி விண்ணப்பங்களை LinkedInஇல் பதிவு செய்கின்றன.

News December 28, 2024

இன்று தொடங்குகிறது ஹாக்கி திருவிழா!

image

தமிழ்நாடு டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் ஹாக்கி இந்தியா லீக்(HIL) தொடர் ஒடிஷாவில் உள்ள ரூர்கேலா நகரில் இன்று தொடங்குகிறது. ஐபிஎல் பாணியில் ஹாக்கி இந்தியா சார்பாக தொடங்கப்பட்ட இத்தொடர் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் 2017-ம் ஆண்டுக்கு பிறகு இத்தொடர் நடைபெறாத நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு நடைபெறுகிறது. தமிழ்நாடு அணி முதல் ஆட்டத்தில் Soorma Hockey Club நாளை சந்திக்கிறது.

News December 28, 2024

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம்: மத்திய அரசு

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகா காக்கேவிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 28, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 131 ▶குறள்: ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ▶பொருள்: ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

error: Content is protected !!