India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Random Questions to Annamalai என்ற தலைப்பில் திவ்யா சத்யராஜ் அண்ணாமலையிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். * மணிப்பூர் பிரச்னையில் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? * கொரோனா தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது, பால்கனியில் விளக்குகளை ஏந்தும்படி கேட்கப்பட்டது ஏன்? குஜராத்தில் நடந்தது பற்றி ஏன் பதில் இல்லை? தென்னிந்திய விவசாயிகள் ஏன் நிராகரிக்கப்படுகிறார்கள்? என அவர் வினவியுள்ளார்.
பண்டிகை காலத்தையாெட்டி, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கணிசமாக அதிகரித்திருந்தது. நேற்று முன்தினம் 1 கிலோ ஜாதி மல்லி ரூ.700க்கு விற்கப்பட்டது. இது நேற்று ரூ.600ஆக சரிந்தது. இந்நிலையில் இன்று ரூ.450ஆக சரிவு கண்டுள்ளது. நேற்று ரூ.900க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ இன்று ரூ.450ஆக குறைந்துள்ளது. மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.300ஆகவும், ரோஜா ரூ.300ஆகவும், கனகாம்பரம் பூ ரூ.240ஆகவும் சரிந்துள்ளது.
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை TN அரசு அமைத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி தாக்கலான மனுக்களை நிராகரித்த ஐகோர்ட், சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், ஜமான் ஜமால், ஆவடி துணை ஆணையர், பிருந்தா, சேலம் துணை ஆணையர், சிநேக பிரியா, அண்ணாநகர் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகும். ஜனவரி 18, 19ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகும். இந்த 2 நாள்களும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ஆகும். இதை சுட்டிக்காட்டி, வெளியூர் சென்ற ஊழியர்களுக்கு வசதியாக ஜன.17க்கும் விடுமுறை விடக்கோரி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம் எழுதியுள்ளது.
BGT 4வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்தது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, ஆந்திரா கிரிக்கெட் சங்கம் (ACA) அவருக்கு ₹25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதனை ACA தலைவரும், விஜயவாடா எம்.பி.யான கேஷினேனி ஷிவ்நாத் அறிவித்திருக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டியின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் ஆகும்.
பாமக இடம்பெறும் கூட்டணிதான் 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. ஒருநாள்கூட இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. அடுத்து நம்முடைய கூட்டணி ஆட்சிதான். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முடிவோடு தேர்தல் பணி தொடங்க வேண்டும்” என்றார்.
ஸ்பெயின் அருகே நேரிட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு 80 பேருடன் படகு சென்றது. அந்தப் படகு நடுக்கடலில் கடந்த 19ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் மட்டுமே நீந்தி கரை சேர்ந்ததாகவும், எஞ்சியோர் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் பலர் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
நிதிஷ்குமார் ரெட்டியின் சதத்தை இன்று நாடே கொண்டாடி வரும் நிலையில், அவரது கடந்த கால பேட்டிகள் மீண்டும் கவனம் பெறுகின்றன. ‘‘சிறுவயதில் விளையாட்டாக கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன். ஆனால், அப்பா எனக்காக அவரது வேலை உள்பட பலவற்றை தியாகம் செய்தார். பணக் கஷ்டத்தால் அவர் அழுததை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அப்போது முதல் கிரிக்கெட்டை சீரியஸ் ஆக விளையாடத் தொடங்கினேன்’’ என நிதிஷ் பேசியுள்ளார்.
முகுந்தன் பரசுராமன், பாமக நிறுவனர் ராமதாஸின் மகளான ஸ்ரீகாந்தியின் மகன் ஆவார். முகுந்தன் பரசுராமனுக்கு, சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது சகோதரி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி, பனையூரில் தனியாக ஆபீஸ், செல்போன் எண்ணை அறிவித்துவிட்டு பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாள்களாக குடும்பப் பிரச்னை நிலவுவதாகக் கூறப்படுகிறது. 2 பேரும் சரியாக பேசிக் கொள்வதில்லை என்றும், கட்சியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் பனிப்போர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பாமக சார்பில் அறிக்கை வெளியிடுவதிலும் 2 பேர் இடையே போட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுவே புதுச்சேரி கூட்டத்தில் மோதலாக வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.