India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.58,280க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.7,205ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.80 உயர்ந்து இன்று ரூ.7,285க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை ரூ.1,240 உயர்ந்திருக்கிறது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.103க்கு விற்பனையாகிறது.
சிரியா இடைக்கால அரசின் தற்காலிக PMஆக முகமது அல் பஷீர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வடமேற்கில் உள்ள கிளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஆவார். இவர், 2025 மார்ச் 1 வரை காபந்து பிரதமராக செயல்பட உள்ளார். மக்கள் அமைதியை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என அல்-பஷீர் கூறியுள்ளார். கிளர்ச்சிக் குழுக்களின் பல நாள் போரைத் தொடர்ந்து, முன்னாள் PM பஷார் அல் அசாத் அந்நாட்டில் இருந்து வெளியேறினார்.
பெங்களூரைச் சேர்ந்த அதுல் சுபாஷ் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. தன்னுடைய மரணத்திற்கு மனைவிதான் காரணம் என்று அவரே சொன்ன பின்னரும் ஏன் அவர் கைது செய்யப்படவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 10 நாள்களுக்கு முன் மும்பையில் பெண் பைலட் தற்கொலை செய்துகொண்ட சில மணி நேரங்களில் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.
PNB வங்கியில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாத வழக்கில் மெகுல் சோஸ்கியின் ரூ.2,500 கோடி சொத்துகளை ED விரைவில் ஏலம் விடவுள்ளது. ரூ.13,000 கோடி கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு சோஸ்கி தப்பியோடிவிட்டார். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விட்டு, பாதிக்கப்பட்ட தரப்பில் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடியல் பயணத் திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக 90% பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இத்திட்டத்தை ஏழை மக்களுக்கு மட்டும் வழங்க வேண்டுமென 53% பேர் கருத்து கூறியுள்ளனர். கட்டணம் செலுத்தும் பயணிகளைப் போல தாங்கள் மரியாதையாக நடத்தப்படுவதில்லை என 69% பேரும், இத்திட்டத்தால் மாதம் ₹637 சேமிக்க முடிவதாகவும் பதில் அளித்துள்ளனர்.
UPSC பயிற்சி மையத்தில் மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்குபெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 18 முதல் 20ஆம் தேதி வரை இந்த மாதிரி ஆளுமைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. <
சென்னையில் அதி கனமழை இருக்காது, ஆனால் கனமழை இருக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இன்று மாலை, இரவு முதல் மழை தீவிரமடையும் எனவும் 2 நாள்களுக்கு கனமழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, காலையில் இருந்து சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. பல இடங்களில் காலை முதல் லேசான மழையும் பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் கூலி படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனையடுத்து நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அதன்பின், மணிரத்னத்துடன் ரஜினி இணையலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது கமல் கூட்டணியில் ‘thug life” படத்தை இயக்கிவரும் மணிரத்னம், அதற்குப் பின் ரஜினியுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளது.
INDIA கூட்டணிக்கு தலைமைத் தாங்கத் தயாராக இருப்பதாக, மேற்குவங்க CM மம்தா அறிவித்ததை, கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதாதளம், தேசியவாத காங்., உள்ளிட்ட பல கட்சிகள் வரவேற்றுள்ளன. இக்கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த ஸ்டாலின் என்ன முடிவெடுக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராகுல், மம்தா ஆகிய இருவருக்கும் நெருக்கமானவராக இருப்பதால் ஸ்டாலின் நிலை என்ன என்பதில் பலரது கவனமும் திரும்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.