news

News December 28, 2024

அஜர்பைஜான் விமானம் விபத்து! புதின் வருத்தம்

image

அஜர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், ரஷ்ய வான்வெளியில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்தை ரஷ்ய வான்படை தவறுதலாக சுட்டிருக்கலாம் என தகவல் பரவிவரும் சூழலில், விபத்துக்கு பொறுப்பேற்பது பற்றி புதின் அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை.

News December 28, 2024

பொங்கல் பரிசுத் தொகுப்பு.. ஜன.9ஆம் தேதி முதல் டோக்கன்

image

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் ஜன. 9 முதல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நாளில் முற்பகல் 100 பேருக்கும், பிற்பகல் 100 பேருக்கும் டோக்கன் விநியோகிக்கப்படவுள்ளது. இதையடுத்து 2ஆவது நாளில் முற்பகல் 200 பேருக்கும், பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கப்படவுள்ளது. அதில் பொங்கல் பரிசு வழங்கப்படும் தேதியை குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 28, 2024

பெற்றோர், மாணவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: R.N.ரவி

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம் என ஆளுநர் ரவி கூறியுள்ளார். அங்கு மேற்கொண்ட ஆய்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மாணவர்கள் முன்வைத்துள்ள பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக களைய, பல்கலை., நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்களின் பாதுகாப்பே பிரதானம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

News December 28, 2024

மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன்? நீதிமன்றம் கேள்வி

image

மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகிலும் மதுக்கடைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மதுக்குடிப்பதால் உடல் நலனுக்கு கேடு என விளம்பரம் வெளியிடுவதை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு அந்த விளம்பரத்தை வெளியிடுவதால் என்ன பயன் எனவும் நீதிமன்றம் வினவியது.

News December 28, 2024

பூலோகம் இருக்கும்வரை அன்னதானம்: பிரேமலதா

image

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் அஞ்சலியில், கட்சி பேதமின்றி பங்கேற்ற அனைவருக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேட்டியில், கேப்டன் ஆசிர்வாதத்தால், தமிழகத்திற்கு இனி நல்லதே நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பிரபஞ்சம் இருக்கும்வரை விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் தொடரும் எனவும் கூறினார். DMDK தலைவர் விஜயகாந்த், கடந்தாண்டு இதே நாளில் காலமானார்.

News December 28, 2024

கிராமத்து இயக்குநருடன் இணையும்VJS?

image

விஜய் சேதுபதி அடுத்ததாக ‘சுந்தர பாண்டியன்’ பட இயக்குநர் பிரபாகரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘சப்தம்’ படத்தை தயாரித்த 7ஜி ஃபிலிம்ஸ், இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தனது சினிமா கெரியரின் ஆரம்ப காலத்தில் ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 28, 2024

இந்தியாவின் பெருமிதம் குகேஷ்: PM மோடி

image

இந்தியாவின் பெருமிதம் குகேஷ் என PM மோடி பாராட்டியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்து Xஇல் பதிவிட்டுள்ள மோடி, குகேஷின் தன்னம்பிக்கை ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யோகா மற்றும் தியானம் எவ்வாறு மனிதர்களை உருமாற்றும் திறன் கொண்டுள்ளது என்பதை பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

News December 28, 2024

வெற்றிலையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

image

வெற்றிலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள ஹைட்ராக்ஸி சவிகல், குளோரோஜெனிக் போன்ற வேதிப் பொருள்கள் புற்றுநோய் எதிர்ப்புப் பொருள்களாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. கம்மாறு வெற்றிலைச் சாறுடன் சீரகம், ஓமம், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், வயிற்றுவலி தீருமென சித்தா டாக்டர்ஸ் பரிந்துரைக்கின்றனர்.

News December 28, 2024

மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த்: இபிஎஸ்

image

அன்புச் சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்தின் நினைவுநாளில், அவரது பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியதாகவும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றதாகவும் அவரை இபிஎஸ் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், பல்வேறு தலைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

News December 28, 2024

BREAKING: கடலில் இறங்க, குளிக்கத் தடை

image

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க சென்னை காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதின் ஒரு நடவடிக்கையாக சென்னையில் மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் டிச. 31 மாலை முதல் ஜன. 1 காலை வரை கடலில் இறங்க, குளிக்க தடை விதித்துள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையிட்டுள்ளது.

error: Content is protected !!