India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முகம், உடல் அமைப்பு என அனைத்திலும் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களுக்கு, ஒரே மாதிரி கைரேகைகள் இருக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான். கருப்பையில் சிசுவின் வளர்ச்சியில் சூழல் ஏற்படுத்தும் தாக்கங்களை பொறுத்தே, அதன் கைரேகைகள் அமையுமாம். தொப்புள் கொடியின் நீளம், கருவில் உள்ள நிலை மற்றும் விரல்களின் வளர்ச்சி விகிதம் ஆகியவையே கைரேகைகளை தீர்மானிக்கின்றன.
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்காெடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிராெலியாக, பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை இன்று புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், பயோமெட்ரிக் பதிவை கொண்டு வர வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இ-சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 1998 செப்.1 முதல் ஓய்வு பெற்றவர்கள், VRS வாங்கியோர், இறந்த பணியாளர்களின் வாரிசுகள் ஆகியோர் 2025 மார்ச் 31க்குள் சமர்ப்பிக்கலாம். ஓய்வூதிய ஆணை படிவம், பேங்க் பாஸ்புக், ஆதார், ஃபோட்டோ, மொபைல் எண்ணுடன் இ-சேவை மையத்தில் பதிவு செய்யலாம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தைலாபுரத்தில் நடந்த கூட்டத்தில் நடந்த சில விஷயங்கள் கசிந்துள்ளன. தன்னை தலைவராக நியமித்த பிறகும், கட்சி முடிவுகளை தாங்கள் எடுப்பது ஏன் என ராமதாஸிடம் அன்புமணி கேட்டாராம். அதற்கு, நீ எடுத்த கூட்டணி முடிவுகள் எதுவும் பலனிக்கவில்லை என ராமதாஸ் கூறினாராம். மேலும், 2026 தேர்தலில் பாமக சிறப்பான வெற்றி பெற வேண்டும்; இல்லையெனில் கட்சியை தானே பார்த்துக் கொள்வதாக ராமதாஸ் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா பல்கலை. சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் அனைத்து பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் வெளிநபர்களுக்கு அனுமதியில்லை என்றும், ஆதலால் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஆணையிட்டுள்ளது.
பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக அரசு அறிவிக்கவில்லை. இதனால் ரூ.1,000 ரொக்கத்தை எதிர்பார்த்திருந்த மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். மிகப்பெரிய இயற்கை பேரிடரை மாநிலம் சந்தித்ததால், சொந்த நிதியிலிருந்து ரூ.2,028 கோடி செலவிட நேர்ந்ததால் நிதியில்லை எனக் கூறியுள்ளார்.
2025 நடைபெறும் சனி, குரு பெயர்ச்சியின் அடிப்படையில் ⁍ கடகம்: சவாலான ஆண்டாக இருக்கும். ஆரோக்கியம், செலவுகளில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம் ⁍ சிம்மம்: சிறப்பான ஆண்டாக அமையும். பொருளாதாரம் முன்னேறும். ஆரோக்கியத்தில் பிரச்னை இல்லை. குடும்பத்தில் மரியாதை கூடும் ⁍ கன்னி: உற்சாகமான ஆண்டாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உறவுகளால் மகிழ்ச்சி கூடும். SHARE IT
புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை, ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது தொடர்பான X பதிவில், CM ஸ்டாலினை பாராட்டியதுடன் இந்த அறிவிப்பு மூலம் உயர்க்கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயன்பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த முடிவு பல பயன்களை தரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த ‘விஞ்ஞானத் தேடல்’ என்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார். அப்போது அவர், இந்த காலத்தில் பிள்ளைகளை பகுத்தறிவுடன் வளர்ப்பது மிக சவாலான விஷயம் எனக் கூறினார். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பகுத்தறிவை கற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற பாக்யவந்தி கோயில் உண்டியலை நேற்று திறந்து பார்த்த ஊழியர்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அந்த உண்டியலில் ரூ.60 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் இருந்துள்ளது. அது விஷயம் அல்ல. அதிலுள்ள ஒரு 20 ரூபாய் நோட்டில், “எனது மாமியார் சீக்கிரம் சாக வேண்டும்” என எழுதப்பட்டிருந்தது. இதை போட்டது ஆணா, பெண்ணா எனத் தெரியவில்லை. இருந்தாலும், இவ்வளவு வன்மம் ஆகாதுங்க.
Sorry, no posts matched your criteria.