news

News December 29, 2024

திருக்குறள் போதும் எதிரிகளை வெல்ல: ஸ்டாலின் சூளுரை

image

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற தத்துவத்தை வழங்கிய பேராசான் எனக் கூறியுள்ளார். மேலும், ஆழிப்பேரலையை தாங்கி நிற்கும் திருவள்ளுவர் சிலையை போல, தமிழ்நாடும் தடைகளை தகர்க்கும் என கூறிய ஸ்டாலின், திருக்குறளை கொண்டே எதேச்சதிகாரத்தை வெல்வோம் எனவும் சூளுரைத்தார்.

News December 29, 2024

ஓட்டலில் இறந்து கிடந்த மலையாள நடிகர்

image

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 19ஆம் தேதி முதல் அந்த ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு சக நடிகர்கள் போன் செய்தபோது, அதை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஓட்டலுக்கு வந்து அறையில் பார்த்தபோது சடலமாக கிடந்தார். அவர் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

News December 29, 2024

இனி 1 நாளைக்கு 24 மணி நேரம் இல்லை!

image

பூமியின் சுழற்சி வேகம் மாறுபட்டு வருகிறது. முன்பை விட மெதுவாக சுழல்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, ஒரு நாளின் நீளம், ஒரு நூற்றாண்டுக்கு 1.8 விநாடிகள் என்ற அளவில் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், வரும் காலங்களில் ஒரு நாளின் நீளம் 24 மணி நேரம் என்ற அளவை கடந்து விடும் எனக் கூறுகின்றனர். 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, 1 நாள் 21 மணி நேரம் மட்டுமே நீடித்தது.

News December 29, 2024

‘அச்சத்துக்கு அர்த்தம் தெரியாத இயக்கம் திமுக’

image

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, பேரணி நடத்த தேமுதிக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை. இதனை விமர்சித்த பிரேமலதா, தேமுதிகவை கண்டு திமுக அஞ்சுவதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சேகர்பாபு, அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத இயக்கம் திமுக என்றும், தற்போது மறப்போம், மன்னிப்போம் என்ற பாதையில் நடைபோட்டு வருவதாகவும் கூறினார்.

News December 29, 2024

நேற்று சமந்தா.. இன்று கீர்த்தி.. இதற்கு முடிவே இல்லையா?

image

நேற்று சமந்தா Baby Bump உடன் இருக்கும் போட்டோக்கள் வைரலான நிலையில், இன்று கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஒரு சிலரால் AI தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சியான AI வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சினிமா ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News December 29, 2024

WTC ஃபைனல் செல்லுமா இந்தியா?

image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு, SA அணி முதல் ஆளாக தேர்வாகியுள்ளது. இதனால், அடுத்த இடங்களில் இருக்கும் IND- AUS இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட்டை ட்ரா செய்து, சிட்னியில் அடுத்து நடைபெற உள்ள போட்டியை, IND கட்டாயம் வெல்ல வேண்டும். அதேபோல், இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட்டிலும் AUS அணி தோற்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்தியா ஃபைனலுக்குச் செல்லும்.

News December 29, 2024

EB BILL: புள்ளி விவரத்தை வெளியிட்ட அறப்போர் இயக்கம்

image

தமிழகத்தில் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2019-20இல் ரூ.4.7 <<15014162>>மின் கட்டணம்<<>> வசூலிக்கப்பட்டது. அதுவே 2022-23-இல் ரூ.5.69 ஆக அதிகரித்துள்ளது. 600 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.33 வசூலிக்கப்பட்ட நிலையில், 2022-23-இல் அது ரூ.7.29 ஆக அதிகரித்துள்ளது. 800 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5.65 ஆக இருந்த கட்டணம், 2022-23இல் ரூ.8.22 ஆக அதிகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

News December 29, 2024

JOB ALERTS: ரயில்வேயில் 32,438 வேலைவாய்ப்பு

image

ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. குருப் டி நிலையிலான அந்தப் பதவிகளுக்கு ஜனவரியில் ரயில்வே அறிவிப்பு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் டிரேக் மெயின்டெய்னர். பாயின்ட்ஸ்மேன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் ஆகும். வேலைக்கான கல்வித் தகுதி 10, ITI எனக் கூறப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகும்.

News December 29, 2024

வரலாறு படைத்த BGT ரசிகர்கள்

image

இந்தியா-ஆஸி., இடையிலான BGT தொடரின் 4வது டெஸ்ட் போட்டி, வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரம் காட்டும் சூழலில், ஆட்டத்தை விறுவிறுப்பாக நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளமும் குவிந்து வருகிறது. அந்த வகையில் போட்டியின் முதல் 4 நாளில் 2.99 லட்சம் ரசிகர்கள் ஆட்டத்தை கண்டு ரசித்துள்ளனர். BGT வரலாற்றில் இவ்வளவு ரசிகர்கள் போட்டியை நேரில் காண்பது இதுவே முதல்முறை.

News December 29, 2024

அனைத்து அரசு பஸ்களிலும் விரைவில் ஜிபிஎஸ்

image

அனைத்து அரசுப் பஸ்களுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக இந்தத் திட்டம், சென்னையில் மட்டும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தி.க தலைவர் வீரமணி கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து கேரள மாநிலம் வைக்கத்திற்கு 2 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!