news

News December 30, 2024

ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி

image

IPS ஜோடியான <<15015653>>வருண்குமார்<<>>, வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

News December 30, 2024

அண்ணா பல்கலை. குற்றவாளி DMKவைச் சேர்ந்தவர்: சீமான்

image

அண்ணா பல்கலை. குற்றவாளி DMKவைச் சேர்ந்தவர் என்பது அக்கட்சியின் பேனர், அமைச்சர்களின் போட்டோக்களின் மூலம் தெரிய வந்துள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். மா.சுப்பிரமணியம் கைதான நபரின் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதாகவும், துணை முதல்வரோடு இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளதாகவும் சாடியுள்ளார். அவர் கட்சியில் இருக்கிறாரோ, இல்லையோ இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

News December 30, 2024

தனியார் வங்கிகளில் பணி விலகல் விகிதம் அதிகரிப்பு

image

தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது அதிகமாக உள்ளது என RBI தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையிலிருந்து விலகுவோர் விகிதம் சராசரியாக 25% என்ற அதிகபட்ச அளவில் உள்ளது. இது, வங்கி செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்துவதால், பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் வங்கிகளை RBI வலியுறுத்தியுள்ளது.

News December 30, 2024

சத்துணவு பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல்

image

தொகுப்பு ஊதியம் அடிப்படையில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 30 ஆண்டுகளாக போராடி பெற்ற சிறப்பு காலமுறை ஊதியத்தை, மீண்டும் தொகுப்பு ஊதிய முறைக்கு கொண்டு செல்வதற்கு சத்துணவு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு இதனை கைவிடவில்லையெனில், போராட்டத்தை தொடர்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

News December 30, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 133 ▶குறள்: ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ▶பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

News December 30, 2024

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்யலாம் என RMC கணித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மழை பெய்யலாம் என முன்னறிவித்திருந்தது.

News December 30, 2024

பாலிவுட் செல்லும் வெங்கட் பிரபு?

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கும் புதிய படம் ஒன்று பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘GOAT’ படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் SK படம் ஒன்று பேச்சுவார்த்தையில் உள்ளது. இப்படத்தின் கதையை எழுதி வருவதாக பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். இதன்பிறகு, பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரை நடிக்க வைக்க முதற்கட்டப் பேச்சுவார்த்தை மட்டும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News December 30, 2024

இருண்ட டிசம்பர்.. 236 பேர் பலி

image

2024 டிசம்பர் மாதத்தில் நடந்த விமான விபத்தில் மட்டும் இதுவரை 236 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் இன்று நடந்த விபத்தில் 176 பேர் மாண்டனர். அதேபோல், கடந்த 25ஆம் ஆண்டு அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் விபத்துகுள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 4 உலக நாடுகளில் 19 பேர் பலியாகினர். இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

News December 30, 2024

10 மாதங்களில் 62,637 டிரைவிங் லைசென்ஸ் ரத்து!

image

TNல் கடந்த 10 மாதங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 62,637 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது. அதிவேகம், மது அருந்துதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக RTI கேள்விக்கு விளக்கமளித்துள்ளது. இதனால், மாநிலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

News December 30, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 30 ▶மார்கழி- 15 ▶கிழமை: திங்கள் ▶ நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 PM – 8:30 PM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶சூலம்: கிழக்கு ▶திதி: அமாவாஸ்யை ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: மூலம் ▶சந்திராஷ்டமம்: பரணி

error: Content is protected !!