news

News December 30, 2024

2026ல் மீண்டும் திமுக ஆட்சி: CM ஸ்டாலின் உறுதி

image

2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட நிர்வாகிகள் உறுதியேற்றதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், தூத்துக்குடியில் நிர்வாகிகளை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார். அத்துடன், #களம்2026ல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட, தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் என நிர்வாகிகள் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2024

இந்த மாணவிகளுக்கும் இனி ₹1000

image

புதுமைப் பெண் திட்டத்தை இன்று தூத்துக்குடியில் CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்ய உள்ளார். தற்போது இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதன் மூலம், அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளும் மாதம் ₹1000 பெறலாம்.

News December 30, 2024

வீடு, தொழிற்சாலைகளுக்கு ஒரே மாதிரி மின் கட்டண முறை

image

தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு நுகர்வோருக்கு, emailல் மின் கட்டண விவரம் தெரிவிப்பது போல், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவிலும் டிஜிட்டல் முறையை மட்டும் அமல்படுத்த மின்வாரியம் முடிவுசெய்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த பில்லிங் முறையானது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான முன்னோட்டமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் வாயிலாக வீடுகளுக்கும், email, SMS மூலம் மின் கட்டண விவரம் அனுப்பப்படும்.

News December 30, 2024

சிறப்பு புலனாய்வு குழு இன்று முதல் விசாரணை

image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது. இதில், ஞானசேகரனுடன் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வு குழுவை ஐகோர்ட் நியமித்துள்ளது. இன்று முதல் விசாரணையை தொடங்கும் குழுவினர், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், ஞானசேகரனிடம் தனித்தனியாக விசாரிக்க உள்ளது.

News December 30, 2024

டிச.30: வரலாற்றில் இன்று

image

▶1879 – ரமண மகரிஷி பிறந்தநாள்.
▶1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
▶1906 – அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
▶1941 – இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து காந்தி விலகினார்.
▶2006 – ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
▶2013 – இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் காலமானார்.

News December 30, 2024

“புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறக்கக்கூடாது”

image

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், பொது இடங்களில் மது விருந்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 30, 2024

தினம் ஒரு பொன்மொழி!

image

✦மனிதாபிமானம் என்பது அழுவதல்ல; அநீதிக்கு எதிராக போராடுவதேயாகும். ✦புரட்சி செய்ய புறப்பட்டவனுக்கு துணை நிற்பதே படைப்பாளியின் கடமை. ✦சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாத எழுத்தும் பேச்சும் குப்பைக்கு சமமானதே. ✦அடிமைக்கும் ஆண்டைக்கும் இடையே சமரசத்தை செய்வது என்பது கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல. ✦பிச்சை இடுபவன் அருவருக்கத்தக்கவன்; பிச்சை எடுப்பவன் பரிதாபத்துக்கு உரியவன்.
-மாக்ஸிம் கார்க்கி

News December 30, 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்

image

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) நேற்று இரவு காலமானார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர், ஜார்ஜியாவில் உள்ள வீட்டில் காலமானதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1977-1981 வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார். நீண்ட காலம் வாழ்ந்த US ஜனாதிபதி என்ற சாதனையை கார்ட்டர் பெற்றுள்ளார்.

News December 30, 2024

ஆதார்- PAN இணைப்பு நாளையே கடைசி

image

வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் PAN கட்டாயமாகும். இதை ஆதார் எண்ணுடன் இணைக்க டிச.31 வரை வருமான வரித்துறை அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் (டிச.31) நிறைவடைய உள்ளது. இந்த தேதிக்குள் உங்கள் PAN எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் PAN ரத்து செய்யப்படலாம். இதனால் வங்கிப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 30, 2024

வாக்குச்சீட்டு தேர்தல் முறை வேண்டும்: அகிலேஷ் யாதவ்

image

இந்தியாவில் சிலரது நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் நம்பவில்லை எனவும் கூறியுள்ளார். வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!