news

News December 30, 2024

தங்கைகளுக்கு அண்ணனின் கடிதம்

image

தமிழக பெண்களுக்கு “அன்புத் தங்கைகளே” என்று குறிப்பிட்டு உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். அதில், “அண்ணனாகவும், அரணாகவும் நான் உங்களுடன் உறுதியாக நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தாய்மார்கள், பெண் குழந்தைகள், தங்கைகள் என அனைவரும் தினந்தோறும் பல கொடுமைகளை அனுபவிப்பதாகவும் ஆட்சியாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் கடிதத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

News December 30, 2024

கல்வி ஞானத்தை அருளும் பிரம்மபுரீஸ்வரர்

image

தேவாரம் பாடல் பெற்ற 14ஆவது காவிரி வடகரை தலமாக சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. பிரம்மனுக்கு சிருஷ்டியை படைப்பதற்கான ஆற்றலை ஈசன் வழங்கிய இந்த திருத்தலம் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்கிறது தலப்புராணம். சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என 3 நிலைகளில் அருள் பாலித்து வரும் இறைவனுக்கு பவளமல்லி மலர் சூட்டி, நெய் ஞானம் கைகூடும் என்பது ஐதீகம்.

News December 30, 2024

பெண்களுக்கு ஆதரவாக விஜய் கைப்பட கடிதம்

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.

News December 30, 2024

இன்று விண்ணில் பாய்கிறது PSLV

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு PSLV C-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்றிரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டின் மூலம் Spadex A & B என்று தலா 200 கிலோ கொண்ட இரண்டு சிறிய செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ளன. இதுவரை 4 நாடுகள் மட்டுமே வைத்திருக்கும் இந்த Space Docking சாதனையில் இன்று முதல் இந்தியாவும் தடம் பதிக்கவுள்ளது.

News December 30, 2024

மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு

image

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இரண்டு நாள்கள் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள், தேவாலயங்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

News December 30, 2024

அண்ணா பல்கலை. வழக்கை CBIயிடம் கொடுங்க: எல்.முருகன்

image

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லை என்றால் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

News December 30, 2024

BGT 4வது டெஸ்ட்: ஓப்பனிங்கே 2 விக்கெட் காலி

image

340 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக கேப்டன் ரோஹித் சர்மா 9 (40) ரன்கள் மட்டுமே எடுத்து, பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் மார்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 0 (5) கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகினார். களத்தில் ஜெய்ஸ்வால் 12 (57) ரன்களுடன் இருக்கிறார். இந்தியா 25/2 ரன்களுடன் தடுமாறி வருகிறது. வெற்றிக்கு இன்னும் 315 ரன்கள் தேவை

News December 30, 2024

2026ல் மீண்டும் திமுக ஆட்சி: CM ஸ்டாலின் உறுதி

image

2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட நிர்வாகிகள் உறுதியேற்றதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், தூத்துக்குடியில் நிர்வாகிகளை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார். அத்துடன், #களம்2026ல் மீண்டும் கழக ஆட்சி அமைத்திட, தங்களுக்குட்பட்ட வாக்குச் சாவடிகளில் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கப் பாடுபட்டு வரலாறு படைப்போம் என நிர்வாகிகள் உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News December 30, 2024

இந்த மாணவிகளுக்கும் இனி ₹1000

image

புதுமைப் பெண் திட்டத்தை இன்று தூத்துக்குடியில் CM ஸ்டாலின் விரிவாக்கம் செய்ய உள்ளார். தற்போது இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதன் மூலம், அரசு உதவிப் பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளும் மாதம் ₹1000 பெறலாம்.

News December 30, 2024

வீடு, தொழிற்சாலைகளுக்கு ஒரே மாதிரி மின் கட்டண முறை

image

தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த பிரிவு நுகர்வோருக்கு, emailல் மின் கட்டண விவரம் தெரிவிப்பது போல், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவிலும் டிஜிட்டல் முறையை மட்டும் அமல்படுத்த மின்வாரியம் முடிவுசெய்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த பில்லிங் முறையானது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான முன்னோட்டமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் வாயிலாக வீடுகளுக்கும், email, SMS மூலம் மின் கட்டண விவரம் அனுப்பப்படும்.

error: Content is protected !!