news

News December 30, 2024

வங்கி வேலை: ₹41,960 சம்பளம் 600 காலிப்பணியிடங்கள்

image

ஸ்டேட் பேங்கில் Probationary Officers பதவிக்கு 600 காலியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டம் முடித்த 30 வயதை கடக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி நடைபெறும். ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960 வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி 16 ஆம் தேதி கடைசி நாள். <>முழு விவரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யவும்<<>>.

News December 30, 2024

தந்தை பகை.. குட்டி உறவு

image

கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கைதான் தன்னை வலிமையாக்குவதாக நடிகை ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். அவருடைய தந்தை கமல்ஹாசன் தீவிர கடவுள் மறுப்பாளர். இதனால் கடவுள் உடனான தொடர்பே இல்லாமல் வாழ்ந்ததாக கூறியிருக்கும் ஷ்ருதி, முதன்முதலில் கோயிலுக்கு சென்றபோது சிறப்பான அனுபவம் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். அன்று முதல் இன்று வரை கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறாராம்.

News December 30, 2024

ஜனவரியில் பாஜகவுக்கு புதிய தலைவர்

image

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் ஜனவரி மாத இறுதிக்குள் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஜே.பி.நட்டா தற்போது அதன் தலைவராக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே இவரது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மேலிடம். இந்நிலையில் ஜனவரி மாதத்தில், புதிய தலைவர் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

News December 30, 2024

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

image

மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் என்றாலே இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள், சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வழிபடுவர். டிசம்பர் 26ஆம் தேதி மண்டல கால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட நிலையில், இன்று மகர பூஜைக்காக திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை முதல் நெய்யபிஷேகம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

₹2.92 லட்சம் கோடி வரலாற்று சாதனையை படைத்த இந்தியா

image

கடந்த அக்டோபரில் இந்தியாவின் டிஜிட்டல் சேவைகள் ஏற்றுமதி ₹2.92 லட்சம் கோடி என்ற வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு முதலீடு, தரவு மையம், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட காரணங்களால் இந்த துறை அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த, 2005இல் ₹2.55 லட்சம் கோடியில் இருந்த ஏற்றுமதி, 2023இல் ₹21.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

News December 30, 2024

வெடித்த விமானத்தில் இருந்து வந்த கடைசி SMS

image

தென் கொரியாவின் முவான் நகரில் நேற்று தரையிறங்க முயன்ற Jeju AIr விமானம் சுவற்றில் மோதி வெடித்தது. இந்த விபத்திற்கு முன் பயணி ஒருவர் குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில், விமானத்தின் மீது பறவை மோதிவிட்டதாகவும் ”எனது கடைசி வார்த்தைகளை அனுப்பவா?” என்றும் தெரிவித்திருக்கிறார். அதன்பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

News December 30, 2024

ICC விருதுக்கு மந்தனா, அர்ஷ்தீப் சிங் பரிந்துரை

image

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ICC விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகளின் பட்டியலை ICC வெளியிட்டது. இதன்படி, சிறந்த ODI போட்டி வீராங்கனை விருதுக்கு ஸ்மிருதி மந்தனா, சிறந்த சர்வதேச T20 போட்டி வீரர் விருதுக்கு அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

News December 30, 2024

Monday எப்படி வாரத்தின் முதல் நாளானது?

image

மக்களிடம் பொதுவான வழக்கங்கள் இல்லாத போது, மத வழிபாடுகளின் அடிப்படையில் விடுமுறை தினங்கள் இருந்தது. ஞாயிற்றுகிழமை வார முதல் நாளாக இருந்தது. ஆனால், 2 நாள் விடுமுறையாக சனி, ஞாயிற்றை 1926ல் ஹாரிசன் போர்ட் கொண்டு வந்த பிறகு, அது பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகே, வாரம் என்பது திங்கள் – வெள்ளி என மாற, 1988ல் தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ISO) இதனை அதிகாரபூர்வமாக உலகெங்கும் அமல்படுத்தியது.

News December 30, 2024

பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜன. 2ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

அனுமன் ஜெயந்தியில் இதை மட்டும் செய்தால் போதும்…

image

அனுமன் ஜெயந்தி தினமான இன்று விரதம் இருந்து வழிபட்டால், அவரை அருள் கிடைக்கும். வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் வழிபடலாம். இவை அனைத்தையும் விட சக்திவாய்ந்தது ராம நாமத்தை உச்சரிப்பது. 13 முடிச்சுகள் போட்ட கயிறு ஒன்றை கையில் வைத்து “ஓம் நமோ வாயுநந்தனாய ஓம்” என்ற மந்திரத்தை 9, 11, 27 முறை சொல்லி, கழுத்தில் அணிந்து கொண்டால் அனுமன் எப்போதும் துணையாக நிற்பார் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!