India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தற்போது ஆஸி. 2-1 என BGT தொடரில் லீட் எடுத்துள்ளது. கடைசி சிட்னி மேட்சில் இந்தியா வெற்றி பெற்றால் WTC புள்ளிப்பட்டியலில் இந்தியா 10 வெற்றிகளுடன் 55.26 % பெறும். ஆஸி.யும் 10 வெற்றிகளுடன் இருக்கும். அடுத்த நடைபெறும் இலங்கை – ஆஸி. தொடரில், இலங்கை 2 போட்டிகளையும் வென்றால் மட்டுமே, இந்தியாவிற்கு WTC பைனலுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். அடுத்த போட்டியில் இந்தியா வெல்லுமா?
2024 முடிவதற்கு இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கு. இப்போ பேசுவோம். இந்த வருடத்தில் நீங்கள் பார்த்த படங்களில் உங்களை “என்னடா இது ரொம்ப cringeஆ இருக்கு” என நினைக்கவைத்த/ இல்லை கதற வைத்த திரைப்பட காட்சி எது? நம் ஊர் தமிழ் படங்கள் மட்டுமில்லை. பான் இந்தியா லெவலில் யோசிச்சி கமெண்ட் பண்ணுங்க மக்களே. எந்த காட்சி அதிக அளவில் மக்களை சோதித்துள்ளது என பார்ப்போம்.
நடப்பாண்டில் ஜம்மு & காஷ்மீர் பிராந்தியத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 60% பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவும்போது, இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், ரஜோரி, பூஞ்ச், கிஷ்த்வார், கதுவா மாவட்டங்களில் இந்தாண்டு மட்டும் 75 பாக்., தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தனியார் வங்கி ஊழியர்களின் பணி விலகல், 25% அதிகரித்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வங்கி சேவைகள் முடங்கி வருவதாக எச்சரித்துள்ள RBI, பணி விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நிதிசார்ந்த முறைகேடுகளை உன்னிப்பாக கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 466 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.30) நிறைவடைய உள்ளது. Supervisor, Turner உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : 10th, ITI, UG Degree. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹19,900-₹92,300. தேர்வு முறை: உடற்தகுதி, எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவலுக்கு https://marvels.bro.gov.in/ சென்று பார்க்கவும்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் டாப்பாக உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கிவைத்த அவர், மதிப்பெண்கள் பெறுவதிலும், அதிகமாக உயர்கல்வியில் சேர்வதிலும், உயர்கல்வி முடித்து வேலைக்கு போவதிலும் தமிழக பெண் டாப் என புகழாரம் சூட்டினார். மேலும், ஒரு தந்தையாக இருந்து நான் செய்த கடமைதான் புதுமைப் பெண் திட்டம் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடங்கும் 2025 இருந்து பிறப்பவர்கள் ஜெனரேஷன் பீட்டா என அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் Gen Z, Gen A தலைமுறைகளின் அடுத்த தலைமுறை. அப்படி என்றால், 90ஸ் கிட்ஸ் தாத்தா – பாட்டி தலைமுறையாக மாறுகிறார்கள். 90ஸ் கிட்ஸ் எனப்படுபவர்கள் 1981 – 1996க்குள் பிறந்தவர்கள். 2k கிட்ஸ் (அ) Gen Z 1996 – 2010க்குள், Gen Alpha 2010-2024க்குள் பிறந்தவர்கள். ஒவ்வொறு 14 ஆண்டுகளுக்கும் ஒரு Generation குறிக்கப்படுகிறது.
இன்று காலமான Ex. அமெரிக்கா அதிபர் ஜிம்மி கார்ட்டரின் பெயரில் ஹரியானாவில் ஒரு கிராமம் இருக்கிறது. 1978ல் அதிபராக இருந்த ஜிம்மி டெல்லிக்கு வந்திருந்த போது, மனைவியுடன் அங்கிருந்து 1 மணி தூரத்தில் இருக்கும் தௌலத்பூர் நசிராபாத் கிராமத்திற்கு சென்றார். இதனை கெளரவிக்கும் வகையில் கிராமத்தினர் ஊரின் பெயரை ‘கார்டர்பூரி’ என மாற்றினார். மேலும், அவர் ஊருக்கு வந்த ஜனவரி 3 அங்கு இன்றும் உள்ளூர் விடுமுறை தான்.
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன், அண்ணா பல்கலை., மாணவிக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவாரா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “அண்ணா பல்கலை.,யில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை திமுக அரசு காப்பாற்றக் கூடாது. முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். FIR வெளியானது அவமானகரமான விஷயம்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காலையில் கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, ஆளுநரை மதியம் 1 மணிக்கு விஜய் ராஜ் பவனில் சந்திக்கவுள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அவர் மனு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.