India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியுள்ளது. இதனால், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை அதிகாலை 3:57 மணிக்கு வானில் 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கருப்பு நிலா’ என்னும் அறிய சம்பவம் நிகழவுள்ளது. சந்திர சுழற்சி 29.5 நாள்கள். சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 அமாவாசைகள் வரும். இந்த 2வது அமாவாசையை “Black Moon” என்பார்கள். இதனை பூமியிலிருந்து காணமுடியாது. ஆனால், அதன் தாக்கத்தால் நட்சத்திரங்கள், கோள்கள் நன்றாக இரவில் ஒளிரும் என்கிறார்கள்.
4வது டெஸ்ட் தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக கேப்டன் ரோஹித் தெரிவித்தார். நிதிஷுக்கு நல்ல கரியர் இருப்பதாகவும், பும்ராவின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினார். கேப்டனாக – பேட்டராக சில முடிவுகள் ஏமாற்றம் அளித்ததாக கூறினார். ஒரு அணியாக சில இடங்களில் முன்னேற்றம் காண வேண்டும் என குறிப்பிட்டு, சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்றார்.
ஆளுநர் RN ரவியுடனான தவெக தலைவர் விஜய்யின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, திமுக அரசு குறித்து மட்டுமே பேசப்படும் என யூகங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அந்த பார்வையை விஜய் அளித்த மனு மாற்றியுள்ளது. அம்மனுவில், மாநில அரசு கேட்கும் ஃபெஞ்சல் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் போராட முன்வர வேண்டும் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் R.N.ரவியை, TVK தலைவர் விஜய் சந்தித்து புகாரளித்ததை வரவேற்றுள்ள அவர், நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், வழக்கை திசைதிருப்ப திமுக அரசு தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடர்பான FIR லீக் ஆனது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில், மாணவியின் பெயர் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இருந்தன. IPCயில் இருந்து BNSக்கு மாற்றும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால்தான் இந்த குளறுபடி நடைபெற்றதாக NIC விளக்கம் அளித்துள்ளது. இது ஒரு அலட்சியமான பதில் என்று நெட்டிசன்கள் பொங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் மாலை 4 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இல்லாத ஒன்றை கேட்டு EPS அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை., விவகாரத்தில் #யார்_அந்த_SIR? எனக் கேட்டு அதிமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர், திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் துணிச்சலாக போலீசில் புகாரளிப்பதாகவும், அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இபிஎஸ் இவ்வாறு செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசுவதற்காக சென்னை ராஜ் பவன் வந்தடைந்தார். 1 மணிக்கு அவர் ஆளுநரை நேரில் சந்தித்து உரையாடவிருக்கிறார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், தான் அரணாக இருப்பேன் என்று பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகவே அவர் ஆளுநரை சந்திக்க சென்றிருக்கிறார்.
தமிழக பாஜக தன்னை எந்தக் கட்சி நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை என்றும் தான் புறக்கணிக்கப்படுவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். ”என்னை ஏன் அழைப்பதில்லை என்று தலைவர் அண்ணாமலையிடம்தான் கேட்க வேண்டும்” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த வெளிப்படையான பேச்சு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை என்ன பதில் வைத்திடுக்கிறார்?
Sorry, no posts matched your criteria.