India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தாய்ப்பால் தானம் ஆதரவில்லாமல் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தைகளுக்கும், உடல் ஆரோக்கியமின்றி பிறந்த குழந்தைகளுக்கும் நீங்கள் அன்பால் கொடுக்கும் பரிசு. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாய்ப்பால் வங்கியை அணுகவும். 19 மாவட்டங்களில் இயங்கும் சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களுடன் தாய்ப்பால் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது.
பாக்ஸிங் டே டெஸ்ட்டின் 4ஆவது நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 3 கேட்சுகளை தவறவிட்டார். இதற்கு ரோஹித் ஷர்மா கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார். இதை ஆஸி., முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி உள்பட பலர் விமர்சித்த நிலையில், ரோஹித்தை ‘Captain Cry Baby’ என ஆஸி. ஊடகங்கள் கலாய்த்துள்ளன. முன்னதாக, கான்ஸ்டாஸ் உடனான கோலியின் மோதலை விமர்சிக்கும் விதமாக ‘Clown Kohli’ என ஆஸி. ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
பாஜகவில் பெண்கள் புறக்கணிக்கப்படுவதாக கஸ்தூரி, கவுதமி உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி அதிமுகவில் ஐக்கியமாகினர். அந்த வரிசையில் நேரடியாக அண்ணாமலை மீது குற்றஞ்சாட்டி குஷ்பு, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே, திமுகவில் இருந்து விலகி காங்., சேர்ந்த அவர், பின் பாஜகவில் இணைந்தார். ஒருவேளை அவர் பாஜகவில் இருந்து விலகினால், எந்த கட்சியில் இணைவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னுரிமை வாய்ந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை அனுப்பும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை பள்ளிக்கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தொடர்பான விவரம், சான்றுகளையும் அனுப்ப ஆணையிட்டுள்ளது.
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என். ரவியை விஜய் இன்று சந்தித்து புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வன்னி அரசு, ஆளுநரை சந்தித்த விஜய், நிருபர்களை சந்திக்காமல் சென்றுவிட்டதாக விமர்சித்தார். மேலும், நிருபர்களுக்கு பேட்டி கொடுக்காமல் கையசைத்து செல்வதற்கு பெயர் ‘எலைட் அரசியல்’ என்றும், விஜய்யை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் வன்னி அரசு சாடினார்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறியுள்ளது. இதனால், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நாளை அதிகாலை 3:57 மணிக்கு வானில் 2, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ‘கருப்பு நிலா’ என்னும் அறிய சம்பவம் நிகழவுள்ளது. சந்திர சுழற்சி 29.5 நாள்கள். சில நேரங்களில் ஒரு மாதத்தில் 2 அமாவாசைகள் வரும். இந்த 2வது அமாவாசையை “Black Moon” என்பார்கள். இதனை பூமியிலிருந்து காணமுடியாது. ஆனால், அதன் தாக்கத்தால் நட்சத்திரங்கள், கோள்கள் நன்றாக இரவில் ஒளிரும் என்கிறார்கள்.
4வது டெஸ்ட் தோல்வி ஏமாற்றம் அளிப்பதாக கேப்டன் ரோஹித் தெரிவித்தார். நிதிஷுக்கு நல்ல கரியர் இருப்பதாகவும், பும்ராவின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினார். கேப்டனாக – பேட்டராக சில முடிவுகள் ஏமாற்றம் அளித்ததாக கூறினார். ஒரு அணியாக சில இடங்களில் முன்னேற்றம் காண வேண்டும் என குறிப்பிட்டு, சிட்னியில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம் என்றார்.
ஆளுநர் RN ரவியுடனான தவெக தலைவர் விஜய்யின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது, திமுக அரசு குறித்து மட்டுமே பேசப்படும் என யூகங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அந்த பார்வையை விஜய் அளித்த மனு மாற்றியுள்ளது. அம்மனுவில், மாநில அரசு கேட்கும் ஃபெஞ்சல் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் போராட முன்வர வேண்டும் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் R.N.ரவியை, TVK தலைவர் விஜய் சந்தித்து புகாரளித்ததை வரவேற்றுள்ள அவர், நமது சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், வழக்கை திசைதிருப்ப திமுக அரசு தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.